சனி, 31 மே, 2014

சிங்கப்பூர் திருமணத்தில் பரங்கிப்பேட்டையர்கள் ஒன்றுகூடல்!

சிங்கப்பூர்: பரங்கிப்பேட்டை அஜீஸ் அவர்களின் பேரனும் முஸ்தபா கமால் அவர்களின் மகனாருமாகிய எம்.கே. முஹம்மது இத்ரிஸ் உடைய திருமண நிகழ்ச்சி இன்று காலை சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் சிங்கப்பூர் வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பொதுவாக பெருநாள்களில் மட்டுமே சந்தித்துக் கொள்ளும் இவர்கள், இத்திருமண நிகழ்ச்சியில் வாயிலாக ஒன்றுகூடியது சிறப்பாக அமைந்தது என்று கூறினர்.

செவ்வாய், 20 மே, 2014

பரங்கிப்பேட்டையை வலம் வரும் மயில்

பரங்கிப்பேட்டையில் கடந்த சில நாட்களாக மயில் ஒன்று வலம் வந்துக் கொண்டிருப்பதை மவ்லவீ ஷேக் ஆதம் புகைப்படம் எடுத்துள்ளார். நேயர்களுக்காக அதை நன்றியுடன் வெளியிடுகிறது MYPNO.

வாசகர்களும் இது போன்ற செய்திகளையும், புகைப்படங்களையும் அனுப்பி வைக்கலாம்.