வெள்ளி, 12 ஜூன், 2015

பரங்கிப்பேட்டை பெற்றோர்களே! புகார் அளியுங்கள்!! ப்ளீஸ்....

தமிழக அரசு நியமித்த நீதிபதி சிங்காரவேலர் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் பரங்கிப்பேட்டை தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த 01-06-2015 அன்று தனியார் பள்ளியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. அடுத்த கட்ட போராட்டம் நாளை(12-06-2015 வெள்ளி ) நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்திருந்த நிலையில், இன்று சாக்ரடீஸ் பள்ளியில், மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பச்சையப்பன், மாவட்ட தொடக்க கல்வி திருஞானம், உதவி தொடக்க கல்வி அலுவலர் சரஸ்வதி லட்சுமி, பரங்கிப்பேட்டை காவல்துறை ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் முன்னிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஜி.ரமேஷ் பாபு தலைமையில் போராட்ட குழுவினருடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ” அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து ஆதாரத்துடன் தனி நபர் புகார் அளித்தால். அப்புகாரை ஏழு பேர் கொண்ட குழு ஆய்வு செய்து புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் பள்ளிகளால் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை திருப்பி கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அதிகாரிகளால் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே பரங்கிப்பேட்டை பெற்றோர்கள் பலரும் அதிக கட்டணம் வசூலித்துள்ள தனியார் பள்ளிகள் குறித்து அச்சமின்றி புகார் கொடுக்க முன் வர வேண்டும்.

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை குறித்து MYPNO முன்பே செய்தி வெளியிட்டிருந்ததை நினைவு கூர்கிறோம்.


புகைப்படங்கள்: கிங் காலித்

வெள்ளி, 5 ஜூன், 2015

9-ம் ஆண்டு ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா! (படங்கள்)

பரங்கிப்பேட்டை மீராப்பள்ளியுடன் இணைந்த அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யாவின் 9ம் ஆண்டு ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா கடந்த திங்கள் அன்று காலை மீராப்பள்ளியில், அதன் நிர்வாகி கலிமா ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் தலைமையில் நடைப்பெற்றது. 

இதில் முஹம்மது முபாரக் அலி (மேலப்பாளைம்), உமர் ஃபாருக்  (பொதக்குடி) மற்றும் முஹம்மது அஷ்ரஃப் அலி (கடலூர்) ஆகிய மூன்று மாணவர்கள் ஹாஃபிழ் பட்டம் பெற்றனர். இவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பட்டங்கள், தங்க பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சிக்கு பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவரும் கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவருமான எம்.எஸ் முஹம்மது யூனுஸ், ஜக்கிய ஜமாஅத் தலைவர் கேப்டன் எம். ஹமீது அப்துல் காதர், மீராப்பள்ளி நிர்வாகிகளான எஸ். அலி அக்பர் மற்றும் ஜி.எம். நெய்னா மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்துஸ்மது ரஸாதி கிராஅத் ஓதி துவக்கி வைத்தர்.

அதனைத் தொடர்ந்து வரவேற்புரையுடன ஆண்டறிக்கை வாசிக்கபடப்டது. மாணவர்களுக்கு பட்டம் (ஸனது) மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.  முன்னதாக மாணவர்களை வாழ்த்தி ஆலிம் பெருமக்கள் உரையாற்றினார்கள். 

விழா நிகழ்வை எம். முஹம்மது ஷேக் ஆதம் மழாஹிரி தொகுத்து வழங்கினார். விழா நிறைவில் கலிமா பள்ளிவாசல் முத்தவல்லி பஷீர் அஹமது நன்றியுரை வழங்கினார். 

இந்நிகழச்சிக்கு வெளியூரிலிந்து மதரஸா மாணவர்களின் குடும்பத்தினர் கலந்துக் கொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டடிருந்தது.







படங்கள்: ஷேக் ஆதம் மழாஹிரி

திங்கள், 1 ஜூன், 2015

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் 71வது பட்டமளிப்பு விழா (படங்கள்)


லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 152ம் ஆண்டு விழா 71வது பட்டமளிப்பு விழா இன்று காலை 9.30 மணியளவில் ஜாமிஆவின் தாருல் தப்ஸீர் கலைக்கூடத்தில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.

ஜாமிஆ தலைவர் ஹாஜி அப்துல் ஹமீது  தலைமை தாங்கினார் ஜாமிஆ செயலாளர் அப்துல் சமது  வரவேற்றார்.

வேலூர் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரி முன்னாள் முதல்வர் அல்லாமா ஜைனுல் ஆபீதீன் ஹள்ரத், சென்னை அடையார் மவுலவி சதீதுத்தீன் ஹள்ரத், ஆயங்குடி மவுலவி ஜாபர் அலி ஹள்ரத், ஜாமிஆ பேராசிரியர் அப்துஸ் ஸமது ஹள்ரத்,  ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினார்கள்.

தவ்ரத்துல் ஹதீஸ் மவ்லவி ஃபாஜில், மவ்லவி ஆலிம், ஹாஃபிழ்  ஆகியோருக்கு  ஜாமிஆ முதல்வர் மவுலவி நூருல் அமீன் ஹள்ரத் ”ஸனது” பட்டம் வழங்கி வாழ்த்தினார்கள். ஜாமிஆ பொருளாளர் சார்பில் காசிம் ஹள்ரத்  நன்றி கூரினார்.

இறுதியாக ஜாமிஆ மூத்த பேராசிரியர் மவுலவி அப்துர் ரப் ஹள்ரத் துஆ உடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.















நன்றி: லால்பேட்டை எக்ஸ்பிரஸ்

16வது ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா


பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள அனைத்து சமுதாயத்தைச் சார்ந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தொடர்ந்து 16 ஆண்டுகளாக தங்கம், வெள்ளி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கி கல்வியை ஊக்கப்படுத்தி வருகிறது பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத். 

அந்த வகையில் இந்த ஆண்டும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தங்கம், வெள்ளி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கி அனைத்து சமுதாயத்தைச் சார்ந்த மாணவ-மாணவிகளையும் கவுரப்படுத்தவுள்ளது இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்.

இதற்காக பரிசு வழங்கும் விழா வரும் சனிக்கிழமை (13/06/2015) காலை 10:00 மணிக்கு மஹ்மூதியா ஷாதி மஹாலில் கீழ்க்கண்டவாறு நடைபெறவுள்ளது. 

தலைமை: கேப்டன் ஜனாப் M. ஹமீது அப்துல் காதர் அவர்கள், தலைவர், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத், பரங்கிப்பேட்டை
கிராஅத்: மௌலவி  ஹாஜி ஜனாப் M. H. கபீர் அஹமத் மதனி அவர்கள்
வரவேற்புரை: ஜனாப் H. ஷாஜஹான் அவர்கள், துணை செயலாளர்,  இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத், பரங்கிப்பேட்டை
முன்னிலை:
ஹாஜி ஜனாப் கலிமா K. ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் அவர்கள், நிர்வாகி, ஜாமியா மஸ்ஜித், மீராப்பள்ளி, பரங்கிப்பேட்டை
ஹாஜி ஜனாப் H. M. ஹனீபா அவர்கள், நிர்வாகி, H M H பள்ளி, பரங்கிப்பேட்டை
ஹாஜி ஜனாப் M. H. முஹம்மது ஷாபி B.E., M.Sc. (Eng.) அவர்கள்
ஹாஜி ஜனாப் டாக்டர் S. நூர் முஹம்மது M.B.B.S., DSM அவர்கள், நிர்வாக இயக்குனர், செய்யது அலீம் மருத்துவ மையம், பரங்கிப்பேட்டை.
ஹாஜி ஜனாப். M.S. அலி அக்பர் அவர்கள், துணை தலைவர், தலைவர், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்,பரங்கிப்பேட்டை
வாழ்த்துரை வழங்குபவர்: மௌலவி ஹாபிள் ஜனாப் M. S. அஹமது கபீர் காஷிபி அவர்கள், இமாம், ஜாமிஆ மஸ்ஜித், மீராப்பள்ளி, பரங்கிப்பேட்டை
மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்குபவர்கள்:
பேராசிரியர் ஜனாப் H. அமீர் அலி M.A., B.Ed., அவர்கள், முன்னாள் தலைவர் வரலாற்று துறை, A V C கல்லூரி, மயிலாடுதுறை
ஜனாப் N. உபைதுல்லா சாஹிப் M.A., M.Ed., அவர்கள், முன்னாள் பள்ளி கல்வி துணை இயக்குனர், தமிழ் நாடு அரசு
பேராசிரியர் ஜனாப் M. பாவா மொஹிதீன் M.Com., M.Phil., அவர்கள், முன்னாள் கல்லூரி கல்வி இணை இயக்குனர், தமிழ்நாடு அரசு.
பேராசிரியர் ஜனாப் S. முஹம்மது கவுஸ் M.Sc., M.Phil., MBA, அவர்கள், முன்னாள் தலைவர் இயற்பியல் துறை, புது கல்லூரி, சென்னை
டாக்டர் ஜனாப் M. A. சுல்தான் அலி M.Sc., Phd., அவர்கள், முன்னாள் இணை பேராசிரியர், விலங்கியல் துறை, ஸ்ரீ வாசவி கல்லூரி,ஈரோடு
பேராசிரியர் ஜனாப் S. அப்துல் ஹமீது M.A. (தமிழ்), M.A. (மொழியியல்), B.Sc., B.Ed., அவர்கள், தலைவர் தமிழ் துறை, முஹம்மது சதக் கலை, அறிவியல் கல்லூரி,சென்னை.
ஜனாப் H. அஜீஜுதீன் B.Sc., B.Ed., அவர்கள், முன்னாள் தலைமை ஆசிரியர், அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி,
ஜனாப் N. பஷீர் அஹமது B.Sc., B.Ed., அவர்கள், முன்னாள் தலைமை ஆசிரியர், அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி,
ஹாஜி ஜனாப் I. இஸ்மாயில் மரைக்காயர் B.Sc., M.Ed., அவர்கள், முன்னாள் துணை தலைமை ஆசிரியர், அரசினர் ஆண்கள் மேல்நிலைபள்ளி, பரங்கிப்பேட்டை.
நன்றியுரை: ஜனாப் A.M.மியாஜி அவர்கள், துணை செயலாளர்,  இஸ்லாமிய ஐக்கிய ஜமாத். மஹ்மூதுபந்தர்.

அனைரும் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் வேண்டுகோள் விடுத்துள்ளது.






வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...