பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18-ஜூன்-2024) மாலை சூறைக்காற்றும், மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19-ஜூன்-2024) மாலை சுமார் 7 மணியளவில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய தூறலான மழை பெய்தது, இதன் காரணமாக பரங்கிப்பேட்டையில் பல இடங்களில் தென்னை மரங்கள் உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது – சில தெருக்களில் இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவிற்கு சாலை போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது, பரங்கிப்பேட்டையில் பல்வேறு பகுதிகளில் மின்சாரக் கம்பிகள் துண்டிக்கப்பட்டும், தாழ்வாக தொங்கிய வகையிலும் இருந்தது. ஒரு இடத்தில் மின்சாரக் கம்பம் இரு பகுதியாக முறிந்து காணப்பட்டது.
பலத்த
சூறைக்காற்றின் காரணமாக மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டு பரங்கிப்பேட்டை நகரம் இருளில் மூழ்கியது, கும்மத்பள்ளி தெரு, தீத்தா முதலியார் தெரு, கடற்கார பாவா சந்து, ஜுன்னத்
மியான் தெரு, அண்ணா நகர், உள்ளிட்ட
பல்வேறு தெருக்களில் முற்றிலும் வீழ்ந்த மரங்களையும், கிளைகளையும் இளைஞர்கள் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
பொதுமக்கள்
நடந்து செல்லும் பாதையில் கிடக்கும் முட்களை அகற்றி பாதுகாப்பான வழியை ஏற்படுத்துவது அல்லது தடங்கலாய் கிடக்கும் மரங்களை, கற்களை அப்புறப்படுத்துவது போன்ற அறம் சார்ந்த விஷயங்களை
வாழ்வியலில் ஒரு அங்கமாக ஆக்கி
கொள்ள வேண்டுமென்ற இஸ்லாமிய நெறிமுறைகளுற்கேற்ப பல்வேறு தெருக்களில் விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்திய இளைஞர்களின் சமுதாய பங்களிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றது.
இருளில்
மூழ்கிய பரங்கிப்பேட்டையை மீட்டெடுக்க நகரில் பல்வேறு இடங்களுக்கும் சென்று மின்சார இணைப்புகளை சரிபார்த்து பல பகுதிகளுக்கு இரவே
மின்சார விநியோகம் செய்திட்ட தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பரங்கிப்பேட்டை அலுவலர்கள் – ஊழியர்கள் பங்களிப்பு சிறப்பாக இருந்தது.
படங்கள்: நன்றி - பரங்கிப்பேட்டை வாட்ஸப் குழுமங்கள்