பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

திங்கள், 16 ஜூன், 2014 0 கருத்துரைகள்!

சென்னையை அடுத்த வண்டலூர் பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் 17 வயதில் எம்.சி.ஏ. முதுகலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள அறிவாற்றல் மிக்க இளம் மேதாவி மாணவர் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த பி. முஹம்மது ஸுஹைல் எம்.டெக்., பி.ஹெச்.டி. ஆய்வுப் படிப்புக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ.ஏ.கே.தரீண், பி.முஹம்மது ஸுஹைலிடம் மாணவர் சேர்க்கைக்கான உத்தரவை புதன்கிழமை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, அறிவாற்றல் மிக்க மாணவர் பி.முஹம்மது ஸுஹைல் தனித்திறன் மிக்க மாணவராகத் திகழ்கிறார். இவரைப் போன்று இளம் வயதில் பன்முகத்திறன் மிக்க அறிவாற்றல் நிறைந்த மாணவர்கள் உரிய அறிமுகம், அடையாளம், மதிப்பு கிடைக்காமல் உள்ளனர்.

மாணவர் பி. முஹம்மது ஸுஹைல் எம்.டெக்., பி.ஹெச்.டி. ஆய்வுப்படிப்பில் சேர அனுமதிக்கப்பட்டுள்ளார். இங்கு பயிலும்போது அவர் கல்விக் கட்டணம் இல்லாமல், உணவு, தங்குமிடம், மாதந்தோறும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட வசதிகளும் இலவசமாகப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர். 

மாணவர் பி.முஹம்மது ஸுஹைல் பேசும்போது, கோயம்புத்தூர் கார்மல் கார்டன் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தபோது மேஸ்நெட் நிறுவனத்தில் பகுதி நேர கம்ப்யூட்டர் படிப்பில் சேர்ந்து படித்தேன். 8வது படிக்கும்போதே 15 வகை கம்ப்யூட்டர் டிப்ளமோ சான்றிதழ் படிப்புகளை நிறைவு செய்து விட்டேன். பின்னர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்விப் படிப்பு எம்.சி.ஏ. பயில விண்ணப்பித்தேன். பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவினர் 20 பேர் கொண்ட குழுவினர் என் திறமையை நேர்காணலின் போது பரிசோதனை செய்து, என் திறமையின் அடிப்படையில் எம்.சி.ஏ. படிக்க அனுமதித்தனர். தற்போது எம்.சி.ஏ. தேர்வில் முதல் வகுப்பில் தேறி 78.5 மதிப்பெண் பெற்றுள்ளேன்.

தற்போது எனது உறவினர் தாத்தா ராயப்பேட்டை புதுக்கல்லூரி பேராசிரியர் காஜா முஹைதீன் வழிகாட்டுதலுடன் இங்கு எம்.டெக்., பி.ஹெச்.டி. ஆய்வுப் படிப்பை மேற்கொள்ள சேர்ந்துள்ளேன். எனக்கு இங்கு உயர்கல்வி பயில அளிக்கப்பட்டுள்ள அனைத்து வசதிகளுக்காகவும் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். இணையதள முடக்கம், சைபர் கிரைம் தொடர்பான கணினி தொழில்நுட்பத்துறையில் எனது ஆய்வுப் படிப்பை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளேன் என்றார்.

இவர் தன்னுடைய 14வது வயதிலேயே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பல சான்றிதழ்களை பெற்று எம்.சி.ஏ படிப்பை தனது சிறு வயதிலேயே துவங்கி சாதனை படைத்துள்ளார். 9ம் வகுப்பு முடித்த முஹம்மது சுஹைலின் அறிவுத் திறனை கண்டு பாரதியார் பல்கலைக்கழகம்  இவருக்காக வயது வரம்பை தளர்த்தியது குறிப்பிடதக்கது.
மேலும் வாசிக்க>>>> "17 வயது முஸ்லிம் மாணவர் பி.ஹெச்.டி. ஆய்வுப் படிப்புக்குத் தேர்வு"

புதன், 11 ஜூன், 2014 0 கருத்துரைகள்!


பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள அனைத்து சமுதாயத்தைச் சார்ந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தொடர்ந்து 15 ஆண்டுகளாக தங்கம், வெள்ளி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கி கல்வியை ஊக்கப்படுத்தி வருகிறது பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத். 

அந்த வகையில் இந்த ஆண்டும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தங்கம், வெள்ளி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கி அனைத்து சமுதாயத்தைச் சார்ந்த மாணவ-மாணவிகளையும் கவுரப்படுத்தவுள்ளது இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்.

இதற்காக பரிசு வழங்கும் விழா வரும் சனிக்கிழமை (14/06/2014) காலை மஹ்மூதியா ஷாதி மஹாலில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் கேப்டன் எம். ஹமீது அப்துல் காதர் தலைமையில் நடைபெறவுள்ளது. பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவரும், கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவருமான முனைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ், மீராப்பள்ளி நிர்வாகி கலிமா கே. ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவினை, மீராப்பள்ளி இமாம் எம்.எஸ். அஹமது கபீர் காஷிபி இறை வசனம் ஓதி துவக்கி வைக்கின்றார்.

இந்த விழாவில் கடலூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ஏ. அருண்மொழித்தேவன், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் எம். சந்திரகாசி, சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வி இராமஜெயம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு  தங்கம்-வெள்ளி பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்துரை வழங்கவுள்ளனர். 

அனைரும் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் கேப்டன்  எம்.  ஹமீது அப்துல் காதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் வாசிக்க>>>> "கல்வி பரிசளிப்பு விழா - சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு!"

சனி, 31 மே, 2014 0 கருத்துரைகள்!

சிங்கப்பூர்: பரங்கிப்பேட்டை அஜீஸ் அவர்களின் பேரனும் முஸ்தபா கமால் அவர்களின் மகனாருமாகிய எம்.கே. முஹம்மது இத்ரிஸ் உடைய திருமண நிகழ்ச்சி இன்று காலை சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் சிங்கப்பூர் வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பொதுவாக பெருநாள்களில் மட்டுமே சந்தித்துக் கொள்ளும் இவர்கள், இத்திருமண நிகழ்ச்சியில் வாயிலாக ஒன்றுகூடியது சிறப்பாக அமைந்தது என்று கூறினர்.

மேலும் வாசிக்க>>>> "சிங்கப்பூர் திருமணத்தில் பரங்கிப்பேட்டையர்கள் ஒன்றுகூடல்!"

செவ்வாய், 20 மே, 2014 0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டையில் கடந்த சில நாட்களாக மயில் ஒன்று வலம் வந்துக் கொண்டிருப்பதை மவ்லவீ ஷேக் ஆதம் புகைப்படம் எடுத்துள்ளார். நேயர்களுக்காக அதை நன்றியுடன் வெளியிடுகிறது MYPNO.

வாசகர்களும் இது போன்ற செய்திகளையும், புகைப்படங்களையும் அனுப்பி வைக்கலாம்.
மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டையை வலம் வரும் மயில்"

வியாழன், 24 ஏப்ரல், 2014 0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை மகாத்மா காந்தி மருத்துவ கல்லுரி - மூனா மருத்துவமனையில் இன்று ஃகத்னா (சுன்னத்) செய்யப்பட்டது.
 
முன்னதாக இதற்காக முன்பதிவு செய்த சுமார் 90 குழந்தைகளுக்கு உடல் தகுதி பரிசோதனைகள் நடைபெற்றது. மகாத்மா காந்தி மருத்துவ கல்லுரியின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நஸிருதீன் M.S. (Surgeon) அவர்கள் தலைமையில் மயக்க மருந்து நிபுணர் உள்ளிட்ட மருத்துவக் குழு சுமார் 90 முஸ்லிம் பிள்ளைகளுக்கு இரத்த பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளை செய்தனர். அதனை தொடர்ந்து இன்று முதல் கட்டமாக 20 பிள்ளைகளுக்கு சுன்னத் (ஃகத்னா ) செய்யப்பட்டது. 
 
சேவை மனப்பான்மையுடன் ஏழை, எளிய மக்களும் பயன்பெறும் வகையில் அனைத்து முஸ்லிம் பிள்ளைகளுக்கும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி முதல் சிறப்பு ஃகத்னா (சுன்னத்)ரூ.1500 கட்டணத்தில் செய்ய உள்ளனர்.
மிகவும் ஏழை எளியோர்க்கு டாக்டர் ரஹ்மான்ஸ் அறக்கட்டளை சார்பில் இலவசமாக ஃகத்னா செய்யவுள்ளார்கள்.
 
-அபூ பிரின்சஸ்மேலும் வாசிக்க>>>> "மூனா மருத்துவமனையில் நடைபெற்ற ஃகத்னா நிகழ்ச்சி"

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014 0 கருத்துரைகள்!

கடலூர் மாவட்டம் தழுவிய அளவில் மாபெரும் மீலாது(ஸீரத்து)ன் நபி (ஸல்) மற்றும் ஷரீஅத் விளக்க மாநாட்டை கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா பேரவையினரும், பரங்கிப்பேட்டை மீலாது கமிட்டியினரும் இணைந்து நடத்துகின்றனர்.

பரங்கிப்பேட்டை ஹக்கா ஸாஹிபு தர்கா தெருவில் உள்ள இஜ்திமா திடலில் வரும் (பிப்ரவரி) 23ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை இம்மாநாடு நடைபெறும்.

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் தமிழக அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் தலைவரும், லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் பேராசிரியருமான மவ்லவீ ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான் மன்பயீ அவர்கள் தலைமையேற்க, பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவரும், கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவருமான முனைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ் மற்றும் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவர் கேட்பன் எம். ஹமீது அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அறிஞர் பெருமக்கள் பலர் வாழ்த்துரை வழங்க இருக்கின்றனர்.

திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லவீ டி.ஜே.எம். ஸலாஹுத்தீன் ரியாஜி, சென்னை அடையார் பளளியின் தலைமை இமாம் மவ்லவீ முனைவர் எம். ஸதீதுத்தீன் ஃபாஜில் பாகவீ உள்ளிட்டோர் சிறப்புரையாற்றுகின்றனர். மீலாது கமிட்டி தலைவர் எஸ். ஓ. செய்யது ஆரிஃப் நன்றியுரையாற்ற இருக்கின்றார். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டையில் மாபெரும் ஷரீஅத் விளக்க மாநாடு"

ஞாயிறு, 19 ஜனவரி, 2014 0 கருத்துரைகள்!சிங்கப்பூர்: பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சமூக நல்வாழ்வு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மஸ்ஜித் ஜாமிஆ சூலியாவில் இன்று பகல் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் ஏ.ஆர்.அப்துல் கரீம்  தலைமையில் நடைபெற்ற கூட்டத்தினை ஹெச். ஹமீது கவுஸ்  இறை வசனம் ஓதி துவக்கி வைத்தார்.

அண்மையில் பரங்கிப்பேட்டையில் நடைபெற்ற இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட துணைத்தலைவர் எஸ்.ஓ.ஜியாவுதின் அஹமது, அது தொடர்பான விவரங்களையும், குர்ஆன் மக்தபா செயல்பாடுகளையும் உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

சிங்கப்பூர் அமைப்பின் ஏற்பாட்டில்  செயல்படுத்தப்பட்டு வரும்  "செவிலியர் சேவை" தொடர்பாக விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது

சமையல் எரிவாயு மானியம் பெறுவதற்கு, இந்திய அரசின் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதில் இரு வேறு கருத்துக்கள் நிலவுவதால், ஜமாஅத் நிர்வாகம், பரங்கிப்பேட்டையில் சமையல் எரிவாயு முகவாண்மையை தொடர்பு கொண்டு மக்களுக்கு தெளிவுப்படுத்திட வேண்டும் என்றும் கேட்டு கொள்ளப்பட்டது.

 பரங்கிப்பேட்டையில்  சமுதாய பணியாளர்களின்(பெண்) தேவை அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்ட இப்பொதுக்குழு அதற்கான பணியாளர்களை விரைந்து நிரப்ப ஜமாஅத் நிர்வாகத்தை  கேட்டு கொண்டுள்ளது.

கூட்டத்தில் செயலாளர் ஹெச்.தாரிக் ஹுஸைன், பொருளாளர் எம்.ஜி.கமாலுதீன், மற்றும் திரளான உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
மேலும் வாசிக்க>>>> "PISWA பொதுக்குழு கூட்டம்"

சனி, 4 ஜனவரி, 2014 0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவரும், கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவரும், பரங்கிப்பேட்டை ஐக்கிய ஜமாஅத்தின் செயல் தலைவருமான முனைவர் ஹாஜி எம்.எஸ். முஹம்மது யூனுஸ் தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவம் செய்யப்பட்டது.கடந்த வாரம் திருச்சியில் தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஏற்பாடு செய்த இளம்பிறை எழுச்சிப் பேரணி மற்றும் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு நிகழ்ச்சிகளுக்கு பரங்கிப்பேட்டையிலிருந்து வருகை தந்ததுடன் இந்த கவுரவிப்பு நிகழ்ச்சியையும் நடத்தினார்கள். சமூக, அரசியல் நிலவரங்கள் குறித்தும் கலந்துரையாடினர்.

இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் லீக் கட்சியின் பரங்கிப்பேட்டை நகர தலைவர் பஷீர் அஹ்மது, எஸ்.எஸ். அலாவுதீன், மீ.மெ. மீரா ஹூஸைன், ஜே. உதுமான் அலீ மற்றும் முஸ்தஃபா கமால் ஆகியோர் கலந்து கொண்டனர். சந்திப்பு ஏற்பாடுகளை MYPNO ஆசிரியர் கலீல் பாகவீ செய்திருந்தார்.
மேலும் வாசிக்க>>>> "அப்துர் ரஹ்மான் எம்.பியுடன் சந்திப்பு"

சனி, 16 நவம்பர், 2013 0 கருத்துரைகள்!


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் 'ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்' என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன.தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மினி மாரத்தான், உடற்பயிற்சி வகுப்புகள், ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள், யோகா வகுப்பு, அரசு மருத்துவமனைகளை தூய்மைப்படுத்துதல், மது, புகையிலை தீங்கு சம்பந்தமாக விழிப்புணர்வு பிரச்சாரம் போன்ற பல்வேறு நலப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ஆரோக்கியம் குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் யோகா வகுப்பு மற்றும் மது, புகையிலை தீங்கு சம்பந்தமாக விழிப்புணர்வு பிரச்சாரம் பரங்கிப்பேட்டை மீராப்பள்ளி அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மது, புகையிலை தீங்கு சம்பந்தமாக விழிப்புணர்வு பதாதைகளும், யோகா பயிற்களும் இடம்பெற்றன. 

மேலும் வாசிக்க>>>> "யோகா வகுப்பு மற்றும் மது, புகையிலை விழிப்புணர்வு பிரச்சாரம்"

செவ்வாய், 29 அக்டோபர், 2013 0 கருத்துரைகள்!

ஃபாத்திமா நகரில் மர்ஹூம் அப்துல் கறீம் அவர்களின் மனைவியும், ஏ.கே. அப்துல் பாரீ அவர்களின் தாயாரும், எஸ்.அப்துல் ஹமீது அவர்களின்  மாமியாரும், ஏ.பி. அப்துல் நஜீர் (பாபு), நமது MYPNO இணையதளத்தின் ஆசிரியர் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ, ஐ. முஹம்மது ஹனீஃப், ஏ.கே. முஹம்மது இப்ராஹீம் (சேட்டு) மற்றும் ஏ.ஹெச். லியாகத் அலீ ஆகியோரின் பாட்டியாருமாகியஜுலைஃகா பீவி அவர்கள் மர்ஹூமாகி விட்டார்கள். 

இன்னா லில்லாஹ் வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இன்ஷா அல்லாஹ் நாளை (18.10.2013 வெள்ளிக்கிழமை) மாலை 4:00 மணிக்கு நல்லடக்கம் வாத்தியாப்பள்ளியில்.
மேலும் வாசிக்க>>>> "வஃபாத் செய்தி - அக். 18: ஜுலைஃகா பீவி"

0 கருத்துரைகள்!

பெருநாள் தொழுகை முடிந்து அனைவரும் கலைந்து சென்ற பிறகும் இந்த இரு இளைஞர்கள் பிரார்த்தனையில்... அவர்களுக்கு தெரியாமல் ஒரு ஸ்நாப்.

இடம்: மீராப்பள்ளி, பரங்கிபேட்டை
க்ளிக்: அபூ பிரின்சஸ்
மேலும் வாசிக்க>>>> "ஆலயத் தொடர்புடைய அகம் கொண்ட இளைஞர்கள்"

திங்கள், 14 அக்டோபர், 2013 0 கருத்துரைகள்!

அண்ணா நகரில் மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் பேரனும், இப்ராஹீம் (ரேடியோ செட்) அவர்களின் மகனாரும், முஹம்மது ஹனீஃபா அவர்களின் மருமகனாரும் முஸ்தஃபா மற்றும் ஸுல்தான் பாஷா ஆகியோரின் சகோதரருமான ஷாஹுல் ஹமீது அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள்.
 
இன்று (10-10-2013) மாலை 4 மனிக்கு நல்லடக்கம் ஹக்கா சாஹிப் தர்காவில்.
 
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
மேலும் வாசிக்க>>>> "அக் 14: ஷாஹுல் ஹமீது"

ஞாயிறு, 6 அக்டோபர், 2013 0 கருத்துரைகள்!

ஆளுமைகளை பற்றி நாள்தோறும் நாம் பேசி வருகிறோம். உருவாகவோ உருவாக்கவோ முயற்சிகள் என்று பார்த்தாலோ மிக சொற்பமாகவே இருக்கும். இறைவன் அருளால் நமதூரிலிருந்து திருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரியில் B.Com இறுதியாண்டு பயின்று வரும் (இண்டோமால்) ஜுனைத் அவர்களின்  மகனார் J. முஹம்மது சுஹைப் உஸ்மான் தனது சில சாதனைகள் மூலம் தன்னம்பிக்கை அளிக்கிறார். 

கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளில் "BEST MANAGER" டைட்டிலை சமீபத்தில் வென்றிருக்கும் இவர் DEBATE எனப்படும் விவாத போட்டியில் பல்கலைகழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இதே வரிசையில் தென்னிந்திய அளவில் பல்கலைகழகத்தை பிரதிநிதித்துவபடுத்துகிறார். 

முன்னதாக கால்பந்து விளையாட்டில் பிராந்திய / மாவட்ட அளவில் பல முதலிடங்களையும், மாநில அளவிலான போட்டியில் கலந்துகொண்டும் இருக்கிறார். 

மாணவர் மேலும் பல சாதனைகளை புரிய MYPNO சார்பில் வாழ்த்துகிறோம்.     மேலும் வாசிக்க>>>> "இன்றைய சாதனையாளர்; நாளைய ஆளுமை"

சனி, 28 செப்டம்பர், 2013 0 கருத்துரைகள்!

சிரியா நாட்டின் மீது தாக்குதல் நடத்தவிருக்கும் அமெரிக்காவை கண்டித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சஞ்சீவிராயர் கோவில் தெரு முனையில் நடைப்பெற்றது. 

இந்த ஆர்பாட்டத்திற்க்கு நகர செயலாளர் M. நூர் முஹம்மது தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது  "அமெரிக்காவே! சிரியாவை தாக்காதே!!" "எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்க ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தானை தாக்கி அழித்தது போன்று இப்போது சிரியாவை கொள்ளையடிக்க போர் தொடுக்காதே!" போன்ற கோஷங்கள் எழுப்பபட்டன. 

கண்டன உரையை சிதம்பர சட்டமன்ற உறுப்பினர் K. பாலகிருஷ்ணன் நிகழ்தினார். கூட்டத்தில் ரமேஷ் பாபு, கற்பனை செல்வம், ராஜாராமன், சிவலிங்கம், மணி, காந்தி, ஜீவா, சுதாகர், இளம்பாரதி, சண்முகசுந்தரம் மற்றும் குப்புசாமி உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.


செய்தி & படங்கள்: ஹம்துன் அஷ்ரஃப்

மேலும் வாசிக்க>>>> "மார்க்சிஸ்ட் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்"

0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி சார்பில் ஜெயலலிதா அரசின் அவலங்களை விளக்கி தெருமுனை பிரச்சார கூட்டம் சின்னக்கடை தெருவில் நேற்று நடைப்பெற்றது.

தலைமை கழகப் பேச்சாளர்கள் தானுர் சிவகொழுந்து, பொன்னேரி சிவா, மற்றும் வளவனுர் மணிமாறன் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்கள். 

இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள் தலைமை தாங்கினார். இக்கூட்டதில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் M.S. முஹம்மது யூனுஸ், துனைத்தலைவர் நடராஜ், மாவட்ட பிரதிநிதி முனவ்வர் ஹுஸைன், இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திகேயேன் மற்றும் தங்கவேல், நல்லதம்பி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் காஜா கமால், ஹபீபூர் ரஹ்மான், ஜாஃபர் மற்றும் பொற்செல்வி உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
செய்தி & படங்கள்: ஹம்துன் அஷ்ரஃப்
மேலும் வாசிக்க>>>> "தி.மு.க. வின் தெருமுனை பிரச்சார கூட்டம்"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234