என்றும் மாறாத உண்மைகள் வரிசையில் நீங்கா இடம் பெற்றிருப்பது பரங்கிப்பேட்டை பி.முட்லூர் மோசமான நெடுஞ்சாலை. பரங்கிப்பேட்டை அனைத்து அமைப்புகளும், ஏன் பேரூராட்சி நிர்வாகமே தலைகீழாய் நின்று முயன்றும் முடியாத கனவாகவே இது உள்ளது. சென்ற நவம்பரில் ஜமாஅத் சார்பாக நடந்த ஈத்மிலன் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அவர்கள் இன்னும் 3 மாதங்களில் முழு அளவிலான தரமான சாலை கண்டிப்பாக அமைக்கப்படும் என்று உறுதியளித்தும் இன்னும் முடியாதது பரங்கிப்பேட்டை பொதுமக்களுக்கு வியப்பையும், அயர்ச்சியையும் தருகிறது. இந்நிலையில் இந்நெடுஞ்சாலையில் அகரம் ரயில்வே கேட்டை தாண்டி வரும் சிறிய பாலம் ஒன்று கடந்த சில வாரங்கள் பெய்த திடீர் பெருமழையில் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. பாலத்தின் இருபுறமும் சுவர் மற்றும் அடிவாரங்களும் இடிந்தும் பெயர்ந்தும் அவ்வழியே செல்பவர்கள பயத்துடனேயே பாலத்தை கடக்க செய்கின்றன. பாலத்தின் அடியில் இரும்பு முட்டுகொடுத்தலும், பாலத்தின் இருபுறமும் சிவப்பு கொடிகள் நட்டபட்டுள்ளது தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது போல் தெரியவில்லை. சபிக்கப்பட்ட இந்த சாலை தொடர் விஷயத்தில் நமது நெடுஞ்சாலைதுறையினர் காட்டி வரும் பிரசித்திபெற்ற நீண்ட அலட்சியம் இந்த பாலம் உடைந்தால் தான் உடையுமா? என்பது பொதுமக்கள் அச்சம் கலந்த கேள்வியாக உள்ளது.
//பரங்கிப்பேட்டை அனைத்து அமைப்புகளும், ஏன் பேரூராட்சி நிர்வாகமே தலைகீழாய் நின்று முயன்றும் முடியாத கனவாகவே இது உள்ளது.//
பேரூராட்சி தலைவர் வலைப்பூவிற்கு அளித்த பேட்டியின்போது
//அதே போல் பு.முட்லூரிலிருந்து மெயின்ரோடு-பெரியக்கடைத் தெரு வழியாக கண்டெடுத்த தர்கா வரை 7 மீட்டர் அகலமுள்ள சாலையை உருவாக்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.//
//பரங்கிப்பேட்டை அனைத்து அமைப்புகளும், ஏன் பேரூராட்சி நிர்வாகமே தலைகீழாய் நின்று முயன்றும் முடியாத கனவாகவே இது உள்ளது.//
பதிலளிநீக்குபேரூராட்சி தலைவர் வலைப்பூவிற்கு அளித்த பேட்டியின்போது
//அதே போல் பு.முட்லூரிலிருந்து மெயின்ரோடு-பெரியக்கடைத் தெரு வழியாக கண்டெடுத்த தர்கா வரை 7 மீட்டர் அகலமுள்ள சாலையை உருவாக்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.//
என்று கூறியுள்ளாரே அப்ப அது????????????
இப்னு இல்யாஸ்! கொக்கிப் போடுறீங்களா...
பதிலளிநீக்குwhen we belive a person with closing eyes we never secseed. we want beware and awarness. after we can secseed.
பதிலளிநீக்குMESA.
when we belive a person with closing eyes we never secseed. we want beware and awarness. after we can secseed.
பதிலளிநீக்குMESA.