
வியாழன், 28 ஜனவரி, 2010
+2 தொழிற்பிரிவு பாடங்களை ஒருங்கிணைத்து கல்வித்துறை உத்தரவு
நெட், ஸ்லெட் தேர்வுகளுக்கு இவலச பயிற்சி
பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
பரங்கிப்பேட்டை அருகே ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் சஸ்பெண்ட்
பரங்கிப்பேட்டை அன்னை மகளிர் சுய உதவிக் குழுவுக்கு பரிசுத் தொகை - மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
கடலூர், ஜன. 26:
கடலூரில் செவ்வாய்க்கிழமை நடந்த குடியரசு தினவிழாவில் ரூ. 24.27 லட்சத்துக்கான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ். நடராஜன் வழங்கினார்.
கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்த குடியரசு தின விழாவுக்கு வந்த மாவட்ட ஆட்சியரை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் வரவேற்றார்.
பின்னர் தேசியக் கொடியை மாவட்ட ஆட்சியர் ஏற்றி வைத்தார்.
போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் பார்வையிட்டார்.
வருவாய்த்துறை சார்பில் 51 பேருக்கு வீட்டுமனைப் பட்டா, விதவை மகள் திருமண உதவித் திட்டத்தில் 10 பேருக்கு தலா ரூ. 20 ஆயிரம் உதவித் தொகை உள்ளிட்ட ரூ. 24.27 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
சிறப்பாகப் பணிபுரிந்த தலைமைக் காவலர்கள் 43 பேருக்கு பதக்கங்களை ஆட்சியர் வழங்கினார்.
மாவட்ட அளவில் மணிமேகலை விருது பெறத் தேர்வு செய்யப்பட்ட காட்டுமன்னார்கோவில் ஒன்றியம், மாவட்ட அளவில் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட கம்மாபுரம் சிறுமலர், பரங்கிப்பேட்டை அன்னை, கடலூர் மூகாம்பிகை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் பரிசுத் தொகைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
பள்ளி மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
கடலூர் நகராட்சித் தலைவர் து. தங்கராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி: தினமணி இணைய நாளிதழ்
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
நறுமணங்களின் முகவரிப் பூக்கள் என்பார்கள். நறுமணம் தரும் உயர்தர பூக்களிலிருந்து, சாதாரணப் பூக்கள் வரை அனைத்து பூக்களும் காலையில் பூத்து மாலை...




