பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

செவ்வாய், 1 மார்ச், 2011

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை மீலாது கமிட்டி சார்பாக மீலாது மாநாடு மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடைபெற்றது. மீலாது கமிட்டி தலைவர் செய்யது ஆரிப் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் முஹமது யூனுஸ், மீராப்பள்ளி நிர்வாகிகள் ஷேக் அப்துல் காதர் மரைக்காயர், ஜமால் முஹம்மது மற்றும் ஹபீபுர்ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதுப்பள்ளி இமாம் காஜா முய்னுத்தீன், அப்துல் காதிர் உம்ரி, இஸ்மாயில் நாஜி, மீரான் மொய்தீன் ரஷாதி ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். இவ்விழாவில், ஜமாத்துல் உலமா மாநில து.தலைவர் அப்துல் ஷகூர் மற்றும் இ.யூ. முஸ்லீம்லீக் மாநில து. தலைவர் ஷாகுல் ஹமீது ஜமாலி சிறப்புரை வழங்கினார்கள்.

ஒற்றுமை, மதநல்லிணக்கம், முஸ்லிம்களுக்கு தனிஇட ஒதுக்கீடு உள்ளிட்ட கருத்துக்களோடு, சிப்காட்டால் விளையும் பல்வேறு சுகாததரக்கேட்டை கருத்தில் கொண்டு சிப்காட் தொழிற்சாலையை இழுத்துமூட வேண்டும்; தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பல கோரிக்கைகளை முன்னிறுத்தி மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இம்மாநாட்டில் ஜமாத் நிர்வாகிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜமாஅத்துல் உலமா நிர்வாகிகள் உள்ளிட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பலர் திரளாக கலந்துக் கொண்டனர்.

Photos: SkyNews

0 கருத்துரைகள்!:

கருத்துரையிடுக

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234