வெள்ளி, 9 மே, 2008

12 ம் வகுப்பு அரசு தேர்வு முடிவு


12 ம் வகுப்பு அரசு தேர்வு முடிவு தற்போது 2 மணி நேரம் முன்பு வெளியானது. தற்போது வெளியான முடிவுகளின் படி கலிமா மேல்நிலைப்பள்ளி 87 சதவிகிதம் தேர்ச்சி (23க்கு 20 பேர் தேர்ச்சி) பெற்றுள்ளது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 47 சதவிகிதம் தேர்ச்சியும் (102 க்கு 47 பேர் தேர்ச்சி), அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 55 சதவிகிதம் தேர்ச்சியும் (122க்கு 67 பேர் தேர்ச்சி) பெற்றுள்ளன. 1200க்கு 1123 மதிப்பெண்கள் பெற்று கலிமா மேல்நிலைபள்ளியை சேர்ந்த சுல்தானி என்கிற மாணவி (10ம் வகுப்பிலும் இவரே முதல் மதிப்பெண்) ஊரின் முதல் மதிப்பெண் எடுத்துள்ளார். முஹம்மது அக்ரம் (கலிமா நகர்) 1200 க்கு 991 மதிப்பெண் பெற்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சுபஸ்ரீ என்கிற மாணவி 1200க்கு 989 மதிப்பெண் பெற்று பள்ளி முதல் நிலை பெற்றுள்ளார்..

முதல் நிலை அடைந்து சாதித்த மாணவ மாணவியருக்கும், வெற்றி பெற்ற அனைவருக்கும், அவர்தம் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மைபிஎன்ஓ வலைப்பூ சார்பில் வாழ்த்துக்கள தெரிவித்துக்கொள்கிறோம்.

தேர்வு முடிவுகள் குறித்த தகவல்கள உடனடியாக வழங்கி உதவிய பரங்கிப்பேட்டை கல்விக்குழுவிற்கு வலைப்பூ சார்பில் நன்றி

இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் முதல் நிலை சாதித்த மாணவ மாணவியரின் பேட்டிகள் வலைப்பூவில் வெளியாகும்.

11 கருத்துகள்:

  1. பெயரில்லா9 மே, 2008 அன்று 3:31 PM

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

    முதல் நிலை அடைந்து சாதித்த மாணவ மாணவியருக்கும், வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    நமது சமுதாய மாணவர்கள் முதல் மதிப்பெண்கள் பெற்றிறுப்து மகிழ்ச்சியளித்தாலும்.. 80% மதிப்பெண்கள் என்பது பரங்கிப்பேட்டைக்கு எட்டாக் கணியாகவே இருப்பது வருத்தமளிக்கிறது....

    பதிலளிநீக்கு
  2. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சதவிகிதம் தேர்ச்சி மிகவும் கவலை தருவதாகவே உள்ளது.
    எப்பொழுதும் திருப்திகரமானதாக இருக்கும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்ச்சி சதவிகிதம் கூட ஏமாற்றம் தருவதாகவே இருக்கிறது.

    இனி வரும் காலங்களில் மாணவ,மாணவிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி
    சிறந்த சதவிகிதங்களில் தேர்ச்சி அடைய கல்வி குழு முயற்சிக்க வேண்டுகிறேன்.

    செய்திகளை உடனே அறியத்தந்த இளவரசரின் தந்தைக்கு:) நன்றி.அப்படியே வெளியூரில் படித்த நமதூர் மாணவ&மாணவியரின் தேர்ச்சி சதவிகிதங்களையும் அறியத்தாருங்களேன்.

    பதிலளிநீக்கு
  3. முதல் நிலைப் பெற்றுள்ள மாணவ மாணவிகளின் வாழ்த்துக் கூறி மனம் சந்தோஷித்தாலும் சதவிகித இறக்கத்தைப் பார்க்கும் போது வருத்தமளிக்கின்றது.

    தமிழக அளவில் இந்த ஆண்டு கல்வி வளர்ச்சிநிலை அடைந்து கூடுதல் சதவிகிதத்தைப் பெற்ற நிலையில் நாம் ஏன் பின்தங்கியுள்ளோம் என்பது அவசியம் பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

    சதவிகித வளர்ச்சிக்கு மாற்றுவழி கண்டு அதை நடைமுறைப்படுத்துவது எதிர்கால மாணவ மாணவிகளுக்கு நாம் செய்யும் முதலுதவியாக அமையும்.

    இந்த ஆண்டு ஊரில் முதல் நிலைப் பெற்ற மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், நண்பர்கள் - தோழிகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    தொடருங்கள்,
    கல்வியால் நீங்களும்
    உங்களால் கல்வியும் செழிப்புறட்டும்.

    பதிலளிநீக்கு
  4. செய்திக்கு முதற்கண் நன்றிகள்.

    வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கும், நல்ல சதவிகிதத்துடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    ஜி.என் கூறியிருப்பதைப் போல, தமிழக அளவில் தேர்ச்சி விகிதம் மிக அதிகமாக இருந்தும், நமதூர் அளவில் மிகவும் குறைவாக இருப்பது கவலையளிக்கிறது.

    முன்னிலைபெற்ற மாணவ மாணவியருக்கு பரிசளிப்புவிழா நடத்தி ஊக்கப்படுத்துவதை IEDC - ஜமாஅத்துடன் இணைந்து நடத்தி வந்தது. அது தொடரப்படவேண்டும். (I hope, kalvikkuzu will take necessary steps).

    கற்ற; கற்கும் கல்வி சுயமுன்னேற்றத்துடன், சமூக முன்னேற்றத்தையும் சேர்த்தளிக்க வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
  5. MYPNOக்கு செய்திக்கு முதற்கண் நன்றிகள்.

    வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கும், நல்ல சதவிகிதத்துடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    செய்திகளை உடனே அறியத்தந்த இளவரசரின் தந்தைக்கு:) & MYPNOக்கு செய்திக்கு முதற்கண் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  6. //.........உடனே அறியத்தந்த இளவரசரின் தந்தைக்கு:) நன்றி.//

    இப்னு இல்யாஸ், முஸ்தஃபா,

    abuprincess என்றால் இளவரசரின் தந்தையா?
    இளவரசியின் தந்தை என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. prince என்று கவனக்குறைவாக வாசித்ததால், இளவரசியின் தந்தை
    இளவரசரின் த்ந்தையாகி விட்டார்
    சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சகோ.பாபு.

    பதிலளிநீக்கு
  8. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சகோ.பாபு.

    ""இன்று முதல் இளவரசியின் தந்தை என்றே அழைக்கப்படுவார்"".

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா12 மே, 2008 அன்று 8:09 PM

    let me know the various islamic engineering colleges for women in tamil nadu.... if thr is nothing how can a muslim girl acquire such studies?....

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா12 மே, 2008 அன்று 8:32 PM

    Mustafavin Tamil patrai paarata vaendum

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...