பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றம் மற்றும் எக்ஸ்நோரா தன்னார்வ அமைப்பினரால் நடத்தப்பட்ட வியாபார சங்க பிரதிநிதிகளுக்கான திடக்கழிவு மேலாண்மை திட்ட பயிற்சி முகாம் கச்சேரித்தெரு ஹெச். எம். ஹெச். மண்டபத்தில் 09.08.08 மாலை 5 மணியளவில் நடைபெற்றது. சமீப காலமாக பெருகி வரும் குப்பை கழிவுகள குறைப்பது, அதனை எங்ஙணம் மறுசுழற்சிக்குட்படுத்தி கையாளுதல் குறித்த விளக்கங்களுடன் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஜனாப். எம்.எஸ். முஹம்மது யூனுஸ் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
கனிணி கொண்டு சிறப்பான விளக்கப்படங்கள் ஒளிபெருக்கி (ப்ரொஜக்டர்) மூலம் மக்கும் குப்பை மக்காத குப்பை, பிளாஸ்டிக் உபயோக தவிர்ப்பு, முடிந்தளவு வளங்கள முறையாக கையாளுதல் போன்றவையும் அரசு இதுவிஷயமாக எடுத்துவரும் நடவடிக்கைள் பற்றியும் விளக்கப்பட்டது. கூட்டத்திற்கு சொற்பமான நபர்கள வந்திருந்தது சுற்றுப்புற சூழல் எனும் எரியும் விஷயத்தில் வியாபார சகோதரர்கள் கொண்டுள்ள அக்கறையின் அளவை காட்டியது. சைனாவில், மக்கள் கடைகளுக்கு செல்லும்போது கண்டிப்பாக பைகள எடுத்துச்செல்ல அரசாங்கமே உத்திரவிட்டிருப்பது போல, அரசு இதுவிஷயத்தில் இன்னும் சில கூர்மையான நடவடிக்கைகள எடுப்பதை சுற்றுப்புற ஆர்வலர்கள் எதிர்நோக்குகின்றார்கள்.
பரங்கிப்பேட்டையின் முதல் வார்டான ஜெயின்பவா தெரு கடன்த 25 நாட்கலாக கேப்பார் அட்ரு தெரு குப்பைகள் அகட்ரபடமல் துர்நற்றம் வீசி வருகின்றது இதனால் தெருக்கலில் கொசுகல் புலுத்து விட்டன கொசு தொல்லையால் மக்கள் அவதிபட்டு வருகின்றனர்.
பதிலளிநீக்குஇதனால் நொய்பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ள்து.
இது பற்றி பலமுறை தலைவரிடம் புகார் செய்யப்பட்டு விட்டது. பலன் ஏதும் இல்லை.
இப்படிக்கு இசுப்.