சில நாட்களாக ஊரின் எந்த தெருவை பார்த்தாலும் சிவப்பு வயர்கள் ஆங்காங்கே சில குமிழி நிலத்தில் குத்தி வைக்கப்பட்டு இருப்பதை காண முடிகிறது என்னவென்று விசாரித்ததில் நமதூரில் எண்ணெய் வளம் உள்ளதா என்று ஒ என் ஜி சி (ONGC) காரர்கள் நூல் விட்டு பார்ப்பது தெரிந்தது.
ஏதோ நல்லது நடந்தால் சரி என்று இடத்தை விட்டு நகர போகும் போது அருகிலிருந்த சகோதரர் எண்ணெய் இருந்து கண்டுபிடித்தால் நம்மளையெல்லாம் ஊரை விட்டு காலி பண்ண சொல்லிடுவாங்களோ என்று குண்டு ஒன்று போட்டு நிம்மதியை காலி செய்தார். கடைசியில் - என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று பாடி கொண்டே நகர்ந்தோம்
அப்டியே என்ணெய் ஏதாவது கெடச்சுதா இல்லையானு சீக்கிரம் விசாரிச்சி சொல்லுங்க abuprincess
பதிலளிநீக்குபல்லாண்டுகளுக்கு முன் (அதாவது 1993 அல்லது 1994 காலகட்டங்களில்) நம்மூர் கடலில் பெட்ரோல் எடுக்க கப்பல் மூலம் ஆய்வு செய்யப்பட்டதை நம்மூர் மக்கள் அறிவார்கள். பெட்ரோலும் கிடைத்தது. ஆனால், எடுக்கும் பெட்ரோலுக்கும் அதற்கான செலவினங்களும் சரியாக இருந்ததினாலும், இலாபம் இல்லாமல் போனதாலும் அந்த திட்டம் மூட்டை கட்டிவைக்கப்பட்டதாக ஒரு தகவல் உலவி வருகிறது. இந்த நேரத்தில் ஊரிலேயே பெட்ரோல் கிடைப்பது நல்ல செய்தியாக தெரிந்தாலும் இதில் ஏதோ மர்மம் இருப்பதாகவே தெரிகிறது. மக்கள் அனைவரும் விழிப்புடன் இருப்பது அனைவருக்கும் நல்லது.
பதிலளிநீக்குஇவ்வளவு பெரிய ஊரில், ஆயிரக்கணக்கான வாகனங்கள் இருக்கும் ஒரு நகரில் ஒரு பெட்ரோல் பங்க் கூட இல்லை. இதற்கொரு முடிவை எடுக்க யாரும் முன்வரவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்க குறைந்தபட்சம் 15 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது (இதற்கே ஒரு லிட்டர் பெட்ரோல் செலவாகும் என்பது தனிக்கதை) அல்லது கலப்பட பெட்ரோலை வாங்கி வேதனைப் பட் வேண்டும். இதற்கொரு முடிவுகட்ட நம் நகரில் அல்லது நகர எல்லையில் ஒரு பெட்ரோல் பங்க் கொண்டு வருவதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கட்சிகள், அமைப்புகள் முயற்சி செய்தால் நன்றாக இருக்கும்.