புதன், 19 நவம்பர், 2008

நாட்டு நடப்பு: ஒரு இந்திய முஸ்லிமின் ஆதங்கம்

குமுதம் (05-11-08) அரசு பதில்களிலிருந்து.....

நான் ஒரு இஸ்லாமியன். எந்தத் தீவிரவாத இயக்கங்களுடனோ அல்லது அத்தகைய கொள்கைகளிலோ சிறிதளவும் பற்றில்லாதவன். இந்திய இறையாண்மையிலும், அதன் மதச்சார்பற்ற கொள்கைகளிலும் பெருமதிப்பு வைத்திருப்பவன். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு என்னை ஒரு தோழனாகவும், சக மனிதனாகவும் பார்த்த பலரிடம் இன்று ஏதோ ஒரு சொல்ல முடியாத தயக்கமும், எதிர்ப்புணர்ச்சியும் இருப்பதை என்னால் உணர முடிகிறது. இது எனக்குப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. சொந்த சகோதரர்களிடமிருந்தே விலகி நிற்கும் வலி ஏற்படுகிறது? - முகம்மது அன்சாரி, தஞ்சை.

இது உங்களுக்கு மட்டுமல்ல. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கே ஏற்படும் உணர்வுதான். அவர் பெயரின் நடுவில் உள்ள சொல் "ஹூசேன்''. அதனால் அவரைப் பற்றிய மதரீதியான பிரச்சாரங்கள் அங்கே வெறுப்புடன் நடத்தப்படுகின்றன. அவரை எதிர்த்துப் போட்டியிடும் மெக்கேய்னிடம் ஒரு பெண்மணி இப்படி கேட்டிருக்கிறார். "ஒபாமா ஒரு அரேபியர் என்று கேள்விப்பட்டேனே?'' அதற்கு மெக்கேய்ன் சொன்ன பதில் "இல்லை மேடம். அவர் ஒரு நாகரிகமான குடும்பத் தலைவர்''. இதற்கு என்ன அர்த்தம்? ஒரு அரேபியரால் நாகரிகமான குடும்பத்தலைவராக இருக்க முடியாது என்பதுதானே? இஸ்லாமியர்கள் எல்லோரையும் தீவிரவாதிகளாகச் சித்திரிப்பதில் மீடியாவுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பெரிய பங்கு இருக்கிறது. அதனுடைய விளைவுதான் உங்களின் வலி. கவலைப்படாதீர்கள். உண்மைதான் கடைசியில் வெல்லும்.

3 கருத்துகள்:

  1. அரசரே...(குமுதம் அரசு)

    இதுப்போன்ற வலிகளை காலம், காலமாக பல இலட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் அனுபவித்து வருவது நமது மதசார்பற்ற இந்திய திருநாட்டில் வாடிக்கையாகி விட்ட ஒன்று.

    தங்களை போன்ற ஊடகவியலாளர்கள் உண்மை நிலையை உலகுக்கு உணர்த்தினாலே போதும் எங்களின் வலி சற்றாவது குறையும்...

    செய்வீர்களா...???

    எதிர்பார்ப்புகளுடன்

    ஹம்துன் அப்பாஸ்

    பதிலளிநீக்கு
  2. Assalamu alaikum

    obama is not muslim. He is also not arabian. His father is an african muslim.

    When someone is a muslim, he loses his friends but gains many brothers in islam. We should not despair of all these looks from non muslims as the world is a prison for believers.


    The 'looks' and the abuses that our rasulullah sallallahu alayhi wasallam and beloved sahaba radiallahu anhum got was much more just because they said their only rabb was Allah.

    What we are( at least what I am) going through is little compared to what many of our brothers and sisters are going through in other countries. Many brothers and sisters were arrested on falsified charges. The case in india regarding police is an example. A simple google search will reveal cases in other countries. Allahu alam


    Whatever happens happens only with the permission. Do not despair at these looks. The success lies in the hearafter. Surely to attain Jannah, we have to struggle.

    Subhaanallah, these looks should only seek to reinforce our mindset of our purpose in this world.


    Allahu alam

    பதிலளிநீக்கு
  3. வலி இருப்பதால் மனிதனுக்கு உணர்வும் உணர்ச்சியும் இருப்பது தெளிவு ஆனால் அடிப்பவனுக்கு வலியும் இல்லை,எனவே உணர்வும்,உணர்ச்சியும் இல்லாத பின்டம் அவன்.

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...