புதன், 3 டிசம்பர், 2008

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை ....

புயல் மழை நின்று போனது. மக்களின் சங்கட வாழ்வும் இன்னல்களும் மாறாமல் அப்படியேதான் தொடர்கிறது. மக்கள் நலத்திற்கான அடிப்படை சமுதாய கட்டமைப்புக்களில் முக்கியமானது தரமான சாலை வசதி. பேரூராட்சியின் கீழ் உள்ள ஊர் தெருக்கள் முழுவதும் சிமென்ட் சாலைகள் பளபளக்க, முட்லூர் முதல் பெரிய தெரு முனை வரையிலான நெடுஞ்சாலை துறையினரின் பொறுப்பில் உள்ள, (ஏற்கனவே தில்லாங்குத்தான) சாலை அசிங்கமாய் பல்லிளிக்கிறது. (பார்க்க படங்கள்)

ஊரின் முதுகெலும்பு போன்ற முக்கிய சாலையான இது (ஹை ஸ்கூல் ரோடு, கீரைகார தெரு, மற்றும் முட்லூர் வரைக்குமான பிரசித்தி பெற்ற வழவழ் சாலை ) மிக மோசமான நிலையில் இருப்பது, அதன் வழியாக செல்லும் பொதுமக்கள் அனைவருக்கும் மிகுந்த் அவஸ்தையையும் சிரமத்தையும் அளிக்கிறது. வாகனங்கள் பஞ்சர் ஆவது, கற்கள் சிதறி மேலே தெறிப்பது வாடிக்கை நிகழ்வாகிவிட்டது.


எக்காலத்திர்க்குமான மிக மோசமான தெரு என்ற சிறப்பு பெயரை பெற்றிருந்த பெரிய தெருவே பளபள என்று ஆகிவிட்ட நிலையில் இன்னும் சீர் பெறாத இந்த தெரு அந்த பெயரை விரைவில் பெறுமா என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. இதற்க்கான திட்டம் தீட்டப்பட்டு, இன்னும் நடைமுறை படுத்தபடாத நிலையில் நெடுஞ்சாலை துறையினரின் இந்த அலட்சியபோக்கு மாறுமா?

1 கருத்து:

  1. உறங்கிக்கொண்டிருக்கும்,நெடுஞ்சாலை துறையின் உறக்கத்தை கலைக்கும் விதமாக,நமதூரின் முக்கிய சாலைகளின் "அவல நிலையை" நன்கு படமாக்கியுள்ளீர்கள் விழித்துக்கொள்ளூமா நெடுஞ்சாலைதுறை?

    அன்புடன்
    ஹம்துன் அஷ்ரப்
    பரங்ப்கிப்பேட்டை.

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...