இறப்புச் செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இறப்புச் செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 11 பிப்ரவரி, 2012

இறப்புச் செய்தி: முஹம்மது முஸ்தபா மரைக்காயர்


ஜெயின்பாவா தைக்கால் தெருவில் மர்ஹும் ஷேக்கா மரைக்காயர் அவர்களின் மகனாரும், ஹமீது கவுஸ் மரைக்காயர் அவர்களின் தம்பியும், மர்ஹும் யூனுஸ் மரைக்காயர் (கடலூர் OT) அவர்களின் மருமகனும், மர்ஹும் Y முஹம்மது சுல்தான் , மர்ஹும் Y. முஹம்மது ஹஸன், மர்ஹும் Y.M கமால், Y.ஷேக் அப்துல் காதர் (பேங்காக்) ஆகியோரின் மைத்துனரும், யஹ்யா மரைக்காயர் அவர்களின் மாமாவும், M. முஹம்மது இக்பால் (கடலூர் OT) அவர்களின் மாமனாரும், M.ஷாஹுல் ஹமீது, M.செய்யத் மரைக்காயர் ஆகியோரின் தகப்பனாருமான முஹம்மது முஸ்தபா மரைக்காயர் அவர்கள் மர்ஹும் ஆகி விட்டார்கள்.

இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் வாத்தியாப்பள்ளியில்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

செவ்வாய், 14 ஜூன், 2011

இறப்புச் செய்தி

ஜுன்னத் மியான் தெருவில் மர்ஹும் ரஹ்மதுல்லாஹ்ஷா அவர்களின் மகளாரும், செய்யது அஹமது அவர்களின் மனைவியும், ஹாஜா மக்தூம், முஹம்மது காசிம், உமர் ஆகியோர்களின் சகோதரியும், சிராஜ் அவர்களின் தாயாருமாகிய உம்முசல்மா அவர்கள் மர்ஹும் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை புதன்கிழமை (15-06-2011) மாலை 5 மணிக்கு நல்லடக்கம் அப்பா பள்ளியில்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

ஞாயிறு, 12 ஜூன், 2011

இறப்புச் செய்தி

வாத்தியாப்பள்ளி தெருவில் மர்ஹும் அப்துல் ரஜ்ஜாக் அவர்களின் மகனாரும், செய்யது அலாவுதீன் அவர்களின் தகப்பனாரும், மர்ஹும் முஸ்தபா கமால் பாஷா, பாரூக் ஆகியோர்களின் மாமனாருமாகிய A.யூனுஸ் அவர்கள் மர்ஹும் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை திங்கள் கிழமை (13-06-2011) காலை 10 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

சனி, 11 ஜூன், 2011

இறப்புச் செய்தி

தெசன் தைக்கால் தெரு, மர்ஹும் முஹம்மது அப்துல் காதர் மரைக்காயர் அவர்களின் மகளாரும், பீர்கான் அவர்களின் மனைவியும், முஹம்மது முராது, நகுதா மரைக்காயர், ஜாபர் அலி ஆகியோரின் சகோதரியும் ஆகிய ரோஜா (எ) கவுஸ் பீவி மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை பகல் 12 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜுவூன்.

திங்கள், 6 ஜூன், 2011

இறப்புச் செய்தி

காயிதே மில்லத் தெருவில் மர்ஹும் யூசுப் மியான் அவர்களின் பேரனும், மர்ஹும் ஆரிப் மியான் அவர்களின் மகனாரும் அஷ்ரப் அலி, ஷாஹ் அலி ஆகியோர்களின் சகோதரரும், கிள்ளை தைக்கால் பஷீர் அஹமது அவர்களின் மருமகனாருமாகிய ஹஸன் அலி என்கிற ஷாஹுல் ஹமீது அவர்கள் மர்ஹும் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை செவ்வாய்கிழமை (07-06-2011) காலை 10 மணிக்கு நல்லடக்கம் கும்மத்பள்ளியில்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

வெள்ளி, 3 ஜூன், 2011

இறப்புச் செய்தி

வல்லத்தம்பி மரைக்காயர் தெருவில் மர்ஹும் மஸ்தான் ஷா அவர்களின் மகனாரும், மர்ஹும் பிஸ்மில்லாஹ் சாபு அவர்களின் தம்பியும், அஹமது மரைக்காயர் அவர்களின் மாமாவுமாகிய ஷேக் யூசுப் அவர்கள் மர்ஹும் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று வெள்ளிக்கிழமை (03-06-2011) மாலை 7 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

செவ்வாய், 31 மே, 2011

இறப்புச் செய்தி

தெசன் தைக்கால் தெருவில் மர்ஹும் முஹம்மது சுல்தான் மரைக்காயர் அவர்களின் மகனாரும், மர்ஹும் ஹசன் முஹம்மது அவர்களின் மருமகனாரும், முஹம்மது சுல்தான் மரைக்காயர் அவர்களின் தகப்பனாருமான முஹம்மது யூசுப் மரைக்காயர் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று செவ்வாய்கிழமை (31-05-2011) மாலை 4 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

இறப்புச் செய்தி

காஜியார் தெருவில் வசித்து வந்த , மர்ஹூம் அப்துல் காதர் சாஹிப் அவர்களின் மகனாரும் மர்ஹூம் முஹம்மது யூசுப் மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், மர்ஹூம் அமீர் அலி சாஹிப் மற்றும் ஷம்சுதீன் சாஹிப் ஆகியோர்களின் சகோதரரும், அப்துல் காதர், வஜ்ஹுதீன் ஆகியோர்களின் பெரிய தகப்பனாரும், முஹம்மது சாதிக், அப்துல் காதர் ஆகியோரின் தகப்பனாருமாகிய உபைதுல்லாஹ் சாஹிப் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். நேற்று திங்கள்கிழமை (30-05-2011) இரவு இசா தொழுகைக்கு பின்னர் மீராப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


திங்கள், 16 மே, 2011

இறப்புச் செய்தி

கிதர்சா மரைக்காயர் தெருவில் மர்ஹும் மரக்கச்சி மரைக்காயரின் மகளாரும், மர்ஹும் மெக்தார் சாஹிப் அவர்களின் மனைவியும், மரக்கச்சி மரைக்காயர், கஜ்ஜாலி இவர்களின் தாயாருமான மைமுன் பீவி மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்று மாலை 4 மணிக்கு புதுப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.





தகவல்: sky news

வியாழன், 28 ஏப்ரல், 2011

இறப்புச் செய்தி

ஹக்கா சாஹிப் தர்கா தெருவில், மர்ஹூம் அப்துல் அஜீஸ் அவர்களின் மகனாரும், அன்சாரி அவர்களின் சம்மந்தியும் ஹஸன் அலி அவர்களின் மாமனாரும், ஹுஸைன், சதாம் ஆகியோர்களின் தகப்பனாருமான "குடைக்கார பாய்" என்கிற A.ஷர்புதீன் அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் ஹக்கா சாஹிப் தர்கா அடக்கஸ்தலத்தில்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

கிரிக்கெட் விளையாடிய போது தலையில் அடிபட்டு மாணவர் சாவு


பரங்கிப்பேட்டை கீரைக்காரத் தெருவைச் சேர்ந்த சங்கரின் மகன் ராம்குமார் (18). இவர் அப்பகுதியில் உள்ள நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய போது கடந்த ஏப்ரல் 15-ம் தேதி கீழே விழுந்ததில் ராம்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராம்குமார் புதன்கிழமை இறந்தார். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்று தினமணி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

சனி, 9 ஏப்ரல், 2011

இறப்புச் செய்தி

வாத்திய பள்ளி தெருவில், மர்ஹூம். ஜைனுல்லாபுதுதீன் தாதா சாஹிப் அவர்களின் மகனாரும், மர்ஹூம். ஹசனா மரைக்காயர் அவர்களின் மருமகனாரும் K. முஹம்மது கவுஸ், M. முஹம்மது நைய்னா, O.A.W. பாவாஜான் இவர்களின் மாமனாரும் K. நாசர் உசேன் அவர்களின் தகப்பனாரும் மர்ஹூம். அப்துல் ரஹீம் சாஹிப், மர்ஹூம். அப்துல் மாலிக் சாஹிப், Z. அப்துல் அலீம் மற்றும் Z. ஹபிபுல்லாஹ் இவர்களின் சகோதரருமான Z. கபீர் கான் சாஹிப் அவர்கள் மர்ஹுமாகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை காலை 10 ௦ மணிக்கு மீராப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படுவார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

திங்கள், 4 ஏப்ரல், 2011

இறப்புச் செய்தி

பரங்கிப்பேட்டை: இரட்டை கிணற்றுச் சந்து, மர்ஹூம் அலி முஹம்மது கவுஸ் மரைக்காயர் அவர்களின் மகளாரும், மர்ஹூம் ஜெய்னுல்லாபுதீன் தாதா சாஹிப் அவர்களின் மருமகளாரும், மர்ஹூம் அப்துல் ரஹீம் சாஹிப் அவர்களின் மனைவியும், A.M.G. நகுதா மரைக்காயர் அவர்களின் சகோதரியும், A. கலீல் அஹமது, A. லியாகத் அலி இவர்களுடைய தாயாரும், T. செய்யது உமர், A.ஜெய்னுல்லாபுதீன், M.H. கபீர் அஹமது மதனி B. தமீமுல் அன்சாரிஇ இவர்களின் மாமியாருமான கைருன்னிஸா மர்ஹூமாகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை காலை 10 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ரஜிவூன்.

திங்கள், 28 மார்ச், 2011

இறப்புச் செய்தி

ஆரிய நாட்டு நடுத்தெருவில் மர்ஹும் முஹம்மது கான் அவர்களின் மகனாரும், மர்ஹும் நூர்கான் அவர்களின் மருமகனாரும், மர்ஹும் யாகூப் கான், மர்ஹும் ஆரிப் கான் ஆகியோரின் மச்சானும், மஹ்புப்கான், சான்பாசா அவர்களின் தகப்பனாருமான லத்தீப் கான் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்று மாலை 6-30 மணிக்கு மீராப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

திங்கள், 14 மார்ச், 2011

இறப்புச் செய்தி

தெசன் தைக்கால் தெருவில் மர்ஹூம் நூர்தீன் மரைக்காயரின் மகளாரும் மர்ஹூம் மானா மூனா என்கிற முஹம்மது யூசுபு அவர்களின் மனைவியும் N. நகுதா மரைக்காயரின் சகோதரியும் M.Y.முஹம்மது மெய்தீன் M.Y. முஹம்மது பாருக் M.Y.ஜாகீர் ஹுஸேன் M.Y.செய்யது அஹ்மது இவர்களின் தாயாருமாகிய பீ என்கிற முஹம்மது பீவி அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை (15-03-2011) காலை 10 மணிக்கு நல்லடக்கம் கும்மத்துப்பள்ளியில்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


தகவல்: சித்திக்

ஞாயிறு, 6 மார்ச், 2011

கடலில் மூழ்கி பீகார் மாணவர் பலி

அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் நான்காம் ஆண்டு படிக்கும் பீகாரை சேர்ந்த மாணவர் அமீத் குமார். விடுமுறை தினத்தையொட்டி பரங்கிப்பேட்டை கடலில் குளிப்பதற்காக வந்திருந்த அவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார், அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் சிதம்பரத்திலிருந்து வந்த வண்ணமாக இருப்பதால் மாணவர்கள் கூட்டத்தால் பரப்பரப்பாக மருத்துவமனை வளாகம் இருக்கிறது. மாணவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் மருத்துவமனை எதிரே அமர்ந்துள்ளனர்.

இறப்புச் செய்தி



  • நகுதா மரைக்காயர் தெருவில் S.M. கவுஸ் மியான் அவர்களின் மகளாரும்,  (ஹோட்டல்) ஆக்கிஷா நகுதா அவர்களின் மனைவியுமான ஜொஹராமா அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் பக்கீர் மாலிமார் பள்ளியில்.

        இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


  • காஜியார் தெருவில், மர்ஹும் காஜா மக்தூம் அவர்களின் மகளாரும், மர்ஹும் ஹசனா மரைக்காயர் அவர்களின் மனைவியும், காஜா மொய்னுதீன், அஷ்ரப் முஹைய்யதீன், முஹம்மது ஷாஃபி, கபீர் அஹமது மதனி, ஷாஃபாத் அஹமது, அப்துல் ஹமீத். இவர்களின் தாயாரும், சேக் இஸ்மாயில் சாபு, கபீர் கான் சாபு, முஹம்மது அலி ஜின்னா.இவர்களின் மாமியாருமாகிய ஜொஹரா பீவி அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 3 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்

       இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

செவ்வாய், 1 மார்ச், 2011

இறப்புச் செய்தி


கிதர்சாமரைக்காயர் தெருவில்,

மர்ஹும் அப்துல் ஹமீத் அவர்களின் மகனாரும், மர்ஹும் முஹம்மது கவுஸ் மாலிமார் அவர்களின் மருமகனும், மர்ஹும் ஹாஜா கமால், மர்ஹும் செய்யது அஹமது புகாரி, சேக் இஸ்மாயில் சாஹிப், அப்துல்காதர் மாலிமார் இவர்களின் சகோதரரும், யாகூப் ஹசன் மாலிமார், பஜுல் ஹுசைன் மாலிமார், மர்ஹும் செய்யது மரைக்காயர், இவர்களின் மச்சானும், முஹம்மது மெய்தீன் மரைக்காயர் அவர்களின் மாமனாரும், அப்துல் ஹமீத் அவர்களின் தகப்பனாரும், முஹம்மது உவைஸ் அவர்களின் பாட்டனாருமாகிய சாதிக் அலி மரைக்காயர் அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள் இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

திங்கள், 28 பிப்ரவரி, 2011

இறப்புச் செய்தி

ஆத்தாங்கரை தெருவை சேர்ந்த, மர்ஹும் செய்யது நூர் அவர்களின் மகளாரும்,மர்ஹும் S.சேக் முஹம்மது அவர்களின் மனைவியும், S.M.ஜலீல் அவர்களின் தாயாருமாகிய ஹாஜியா.செய்யது நிஷா பீவி அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள் இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் சிங்கப்பூரில்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

இறப்புச் செய்தி


  1. கோட்டாத்தாங்கரை சந்தில், மர்ஹும் நூர்தீன் மரைக்காயருடைய மகளாரும், மர்ஹும் ஹாஜா,   முஹம்மது சுல்தான், முஹம்மது கவுஸ் இவர்களின் தாயாரும்,  மர்ஹும் அமீர் வாத்தியாருடைய மனைவியுமான ஹலிமா பீவி மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷh அல்லாஹ் இன்று காலை 10 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்
 பரங்கிப்பேட்டை பாரக் வீடு மர்ஹும் ஹனீபா அவர்களின் மருமகனும், செய்யது அமீன் அவர்களின் தகப்பனாருமாகிய செய்யது உமர் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்சா அல்லாஹ் இன்று காலை 10 மணிக்கு நல்லடக்கம் சிதம்பரம் வண்டிகேட்டில்.