வியாழன், 17 ஏப்ரல், 2008

25 கி.மீ தள்ளியிருந்தால் நம்மை பாதிக்காதா என்ன?

சிப்காட்டிலிருந்து 25 கி.மீ தள்ளியிருந்தால் நம்மை பாதிக்காதா என்ன?சாபக்கேடாக வந்து வாய்த்திருக்கின்றன சில வரங்கள் கடலூருக்கு. சிப்காட் தொழிற்பேட்டை கடலூருக்கு ஒரு வரப்பிரசாதமாக கருதப்பட்ட நிலையில் அது தன் கோரமுகத்தை காட்ட துவங்கியிருக்கிறது இந்த வரம்.

சாதாரணமாக 10 லட்சம் பேரில் ஒருவருக்கு வர வாய்ப்பு இருக்கும் கேன்சர், இந்த பகுதியில் 1000‍ல் இருவருக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றன சோதனை அறிக்கைகள்.

மெல்ல மெல்ல ஊடுருவிக்கொண்டிருக்கிறது நோய். யாருக்கும் அறியாமல் ஆனால் உறுதியுடன்.
நாக்பூரில் அமைந்திருக்கும் தேசிய சுற்றுப்புறசூழல் ஆராய்ச்சி அமைப்பு தான் இத்தகவலை வெளியிட்டிருக்கிறது. (INDIA: Chemical Park increases cancer risk in Cuddalore - Study Confirms Bucket Brigade results!)

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் இருப்பவை முழுவதும் கிட்டத்தட்ட கெமிகல் கம்பெனிகள். இருப்பது தவறில்லை யாருக்கும் பழுதில்லா நிலையில்.

பகலை விட இரவுநேரங்களில் அதிக மாசு வாயுக்களை வெளியிட்டு கொல்கின்றன பெரும்பாலான தொழிற்சாலைகள்.

இது பற்றிய அறிக்கையை தேசிய சுற்றுப்புறசூழல் ஆராய்ச்சி அமைப்பு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு 2004‍ லிலேயே இந்த அறிக்கையை தந்துவிட்டதாம். இன்னும் சாவு எண்ணிக்கை வராததால் ஒருவேளை வாரியம் காத்திருக்கிறதா என்று தெரியவில்லை.

சிப்காட்டை சுற்றி இருக்கும் பகுதிகளில் உள்ள காற்றில் வழக்கத்துக்கு மாறாக 94 வித மாசுக்கள் கலந்திருக்கின்றன. அவற்றில் 15 மிகக்கொடியவை.
இரத்தப்புற்றுநோயை உருவாக்கும் பென்ஸீன் இப்பகுதிகளில் 15 மடங்கு அதிக அளவில் உள்ளது.

இதில் முக்கிய விஷயம், இந்த சோதனைகளை செய்த நேரத்தில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தனவாம். அதற்கே இந்த நிலைமை. அவையும் செயல்பட்டுக்கொண்டி(று)ருந்தால், என்ன நடந்திருக்கும்.

சாலை வழியாக மட்டுமே பரங்கிப்பேட்டை 25 கி.மீ. ஆனால் இந்த கொடிய வாயுக்கள் பஸ்ஸில் பயணம் செய்து ஊருக்கு வராது. கிட்டத்தட்ட 10 கி.மீ. ஆகாய பயணம் போதும்... பரங்கிப்பேட்டைக்கு.

எத்தனை கழகங்கள்! எத்தனை சமூக நிறுவனங்கள்!! எத்தனையோ அமைப்புகள்!!! அட யாராவது ஆரம்பித்து வையுங்களேன் அய்யா! அவசியமே இல்லாத விசயத்துக்கெல்லாம் போரட வீதியிறங்கும் போது இதை கண்டுக்கமாலேயே விட்டு விடுவீர்களா?

For more details... please click: INDIA: Chemical Park increases cancer risk in Cuddalore - Study Confirms Bucket Brigade results!

12 கருத்துகள்:

  1. சகோதரர் சொல்லுவதைபோல் இன்று பறங்கிப்பேட்டையில் புற்று நோய் அதிகரித்து விட்டது. நமதூர் முன்பை போல அல்ல. இது இப்படியே தொடருமேயானால், பரங்கிப்பேட்டை சுடுகாடாக மாறிவிடும். அல்லாஹ்தான் காப்பாற்ற வேனும்.

    எல்லோரும் ஒன்றா போய் சாலை மறியலில் ஈடுப்பட்டால், ஒகே ஆகும் என நினைக்கிரேன்.

    இப்படிக்கு பாஷா (அபுதாபி)

    பதிலளிநீக்கு
  2. any aggrieved person or any assosoation can file a public intrest litigation pettistion aginst the said industry before the hororable high court under article 226 and bofore the hororable supreme court under article 32 through THE ENVIRONMENT [PROTECTION]ACT,1986.WE CAN GET REMIDY.

    பதிலளிநீக்கு
  3. இது தொடர்பாக என்ன நடவடிக்கைகள எடுக்கப்பட்டுள்ளன என்பதை அறிய...
    http://www.sipcotcuddalore.com/updates_040308.html

    பதிலளிநீக்கு
  4. o.k,ibnu ilyas.committee appointed is only eyewash,it cannot do any thing for public but it can benifit something. you will hear after sometime. only remidy meet the court.

    பதிலளிநீக்கு
  5. ஓ.கே அன்சாரி நானா
    வெறும் கண்துடைப்புகுதான் (TNPCB)கமிட்டி அமைச்சி இருக்குது அதனால ஒரு பலனும் மக்களுக்கு இல்லனு சொல்றீங்க(அரசியல்வாதி சொன்ன சரியாத்தான் இருக்கும்:)))))))
    மக்கள் நலன்ல அக்கறை இருக்குற&சட்டம் தெரிந்த நீங்களே பொது நல வழக்கு தொடருங்களேன்..

    பதிலளிநீக்கு
  6. Dear ibnu ilyas assalamualikkum,
    i am waiting for bar council approval,still not getting.it will possible very soon, after only i can file any case.eventhrough i try do best.anyhave any assosiation may come to forwade to give its valiable service,i will help and cooprate with it.
    And i informe you that i am not in active politics now.i am a politician but not coroupt fellow.if you prove me i will abide you.

    பதிலளிநீக்கு
  7. வ அலைக்கும் ஸலாம் வரஹ்
    அன்பின் அன்சாரி நானா,
    நீங்கள் தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தீர்கள் என்பதை அனைவரும் அறிவர்.ஆதலால்தான் "அரசியல்வாதி" என குறிப்பிட்டிருந்தேன். அதுவும் கூட நகைச்சுவை உணர்வோடு புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காகதான் :) இமாதியான குறியை இட்டிருந்தேன். உங்கள் அரசியல் நடவடிக்கைகள் பற்றி நான் எந்த தவறான கருத்தையும் கூறவில்லை.

    உங்களுக்கு விரைவில் பார் கவுன்சிலின் அனுமதி கிடைத்து சமூதாயத்துக்கு உதவிடும்வகையில் உங்கள் பணி தொடர்ந்திட இறைவன் அருள் புரிவானாக…


    மேலும் இப்பதிவில் குறிப்பிடபட்டிருக்கும் விஷயம் உள்ளிட்டவைகளை எதிர்த்து போராடும் அமைப்பு ஏறகனவே இயங்குவதை மேலே நான் குறிப்பிட்டுள்ள தளத்தை முழுவதுமாக பார்வையிட்டால் அறியலாம். ஆகவே அவர்களுடன் இணைந்து தேவையான நடவடிக்கை எடுக்க முயற்சியுங்களேன்.இன்ஷா அல்லாஹ்...
    தொடர்புக்கு
    http://www.sipcotcuddalore.com/contact_us.html

    பதிலளிநீக்கு
  8. Dear ibnu ilyas,asalamualikkum,
    thanks very much.
    that sipcot groups also acting in that regard for yearning money for them.please you and my pno groups send all detials about sipcot to my following address,i try do best in this regard.
    ansarimes@gmail.com

    பதிலளிநீக்கு
  9. அஸ்ஸலாமு அலைக்கும வரஹ்.....

    சகோ இப்ணு இல்யாஸ் அவர்களுக்கு ஓரு வேண்டுகோள்... நகைச்சுவை மற்றும் விளையாட்டுகளை தவிர்த்து பிரச்சனையின் தீர்வை சிந்திக்களாமே... M.E.S அன்சாரி நாணா அவர்களை ஊக்குவிக்க முயல்வோம்...

    பதிலளிநீக்கு
  10. இதுபோன்ற ஆரோக்யமான கருத்து பரிமாற்றங்கள் வரவேற்கப்படவேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. அமெரிக்கா போன்ற வளர்ந்தநாடுகளில் மக்கள் நடமாட்டமே சிறிதும் இல்லாத வனாந்திரப்பகுதிகளில் தான் இத்தகைய இரசாயன ஆலைகளை அமைக்கப்படுமாம். அங்கு (அவர்களுடைய) மக்கள் நலனே பிரதானம். இங்கோ மக்கள் நலன் தான் free 'தானம்'.

    இந்தப்பிரச்னையில் பலரும் ஆர்வத்துடன் கருத்தளிப்பது மகிழ்வளிக்கிறது. இச்சுற்றுசூழல் பாதிப்பு பரங்கிப்பேட்டைக்கு மாத்திரமில்லாமல், சுத்துப்பட்டுள்ள எல்லாப் பகுதிகளுக்கும்தான் என்பதால்... அனைத்து பகுதியினரையும் ஒருங்கிணைத்து ஒரு போராட்டக்குழு அமைத்து, ஊர் நலனில் நல்லார்வமுடைய ஜனாப்.அன்சாரிநானா தலைமையில் களம் காணலாம்.

    இக்கருத்தைப் பதிப்பித்த சகோதரரும், இதன்மீது விழிப்புணர்வோடு கருத்தளித்த சகோதரர்களும் பாராட்டுக்குரியவர்கள். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  12. the various ngo who will be willing to take up your case are around, if this is a mini chernobly then I am sure there are avenues for help... pls e-mail me at Khaja.nazim@gmail.com if you need assistance........having industries that pollute is like sitting under a fire....I am willing to help if you guys are going to take this up the highest level...we can best do this by engaging NGO...pls mail me

    regards

    Khaja N

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...