பரங்கிப்பேட்டையில் ஒரு மாநில சாம்ப்பியன்.....
மாநில அளவிலான தொழிற்முறை குத்துச்சண்டை போட்டி (Professional Boxing) 21, மற்றும் 22 செப்டம்பர் அன்று கடலூர் அண்ணா விளயாட்டு அரங்கில் நடைபெற்றது. 63 - 65 kg வெல்டர் வெயிட் ( Welder Weight ) பிரிவில் மாநில சாம்ப்பியன் பட்டத்தை நமதூரை சேர்ந்த சகோதரர். ஹ.ஹமீது கவுஸ் அவர்கள் வென்றெடுத்து சாதனை படைத்துள்ளார்.
நமதூரில் இருந்து குத்துச்சண்டை போட்டியில் மாநில அளவில் சாம்ப்பியன் பட்டத்தை பெற்ற முதல் மற்றும் ஒரே சகோதரர் இவர்தான்.
கிரிக்கெட், பால் பேட்மின்டன் தவிர வேறு மாற்று விளயாட்டுக்கள இல்லை என்பதான பிம்பம் நம் மக்கள் மனதில் பதிந்துவிட்ட இந்த காலத்தில் குத்துச்சண்டை போன்ற தீரமிக்க, ரிஸ்க் (இதற்கு சரியான தமிழ் வார்த்தை இப்னு ஹம்துன் முதலியோர் பிரதியிடலாம்.) நிறைந்த விளயாட்டினை ஊரில் அறிமுகப்படுத்தி, அதில் கடுமையான பயிற்சியும் மேற்கொண்டு சாதித்து காட்டியுள்ளார் நமது இந்த சகோதரர்.
தனது சாதனையை ஏக இறைவனுக்கு மட்டுமே அர்ப்பணிப்பதாக கூறி நம்மிடம் பேசிய சகோதரர். ஹமீது கவுஸ் அவர்கள் இதுபோன்ற வலிமையை நிருபிக்கும் உண்மையான விளயாட்டுக்களுக்கு உரிய இடம், உபகரணப்பொருட்கள் மற்றும் ஸ்பான்ஸர்கள் இல்லாமல் இருப்பது சாதிக்க துடிப்பவர்களுக்கும், வருங்கால சந்ததியினருக்கும் பெரும் பின்னடைவாக இருக்கும் என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
பரங்கிப்பேட்டையை சார்ந்த சமுதாய ஆர்வலர்களும், தனவந்தர்களும், இந்நிலையை நீக்கி இது போன்ற விளயாட்டுக்களுக்கு ஊக்கமளிக்க முன்வர வேண்டும் என்ற தனது உள்ளக்கிடக்கை தெரிவித்தார்.
இதுவிஷயத்தில் பயிற்சிப்பொருட்கள், ஊக்கத்தொகைகள் கொடுத்து தனது சக்திக்கு மீறி ஆரம்பம் முதலே பெறும் ஊக்கமளித்து வந்த இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தினையும், அதன் தலைவர் ஜனாப். முஹம்மது யூனுஸ் அவர்களின் தனிப்பட்ட உதவிகளயும் நன்றியுடன் நினைவுகூர்நதார்.
மேலும், சிறப்பான பயிற்சியும், பயிற்சியளவில் மிக ஊக்கமும் கொடுத்த மாநில தொழிற்முறை குத்துச்சண்டை சங்கத்தின் செயலாளர். ஜி.பி.மகேஷ் பாபு அவர்களுக்கும் தனது நன்றியினை தெரிவித்துக்கொண்டார் கல்விக்குழுவின் இந்த மூத்த உறுப்பினர்.
இவரின் அடுத்த இலக்கு... வருகின்ற டிசம்பர் மாதம் பாண்டிச்சேரியில் நடைபெறவுள்ள தேசியஅளவிலான தொழிற்முறை குத்துச்சண்டை போட்டியில் சாம்ப்பியன் பட்டத்தை வெல்வதுதான்.
வாகையர் பட்டம்வென்ற தம்பிக்கு உளமார்ந்த வாழ்த்துகள். மென்மேலும் வெற்றிகள் தொடரட்டும்.
பதிலளிநீக்கு//ரிஸ்க் (இதற்கு சரியான தமிழ் வார்த்தை இப்னு ஹம்துன் முதலியோர் பிரதியிடலாம்.)//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........
ஏன், ஏன் இந்த கொலவெறி :-))
//குத்துச்சண்டை போன்ற தீரமிக்க, அபாயம் நிறைந்த விளயாட்டினை ஊரில் அறிமுகப்படுத்தி, அதில் கடுமையான பயிற்சியும் மேற்கொண்டு சாதித்து காட்டியுள்ளார் நமது இந்த சகோதரர்.// என்று இயல்பாக எழுதிப் போகலாம்.
தமிழாவே இருந்தாலும் திணிப்பா போயிறப்படாது, பார்த்துகிடுங்க.
சாதனை படைத்த சகோ. ஹமீத் கவுஸ்-க்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதம்பி ஹமீத் கவுஸின் சாதனை பாராட்டத்தக்கது. "ஆனா ஆள பாத்தா குத்து சண்டை வீரரா.. இவரா..ன்னு கேட்க தோணுது. ஏன்னா குத்து சண்ட போட்டிகள்ல பெரும் பெரும் உருவமா பார்த்து பழகிடோம்ல"
பதிலளிநீக்கு"உடம்பு எதுக்கு நெஞ்சுரம் தான் முக்கியம்" என்று ஹமீத் கவுஸ் சொல்வது கேட்குது.
தொடர் வெற்றிகளுக்கு இறைவன் துணைப் புரியட்டும். பயிற்சியை தீவிரப்படுத்துங்கள்.
அப்படியே நம்ம கல்விக்குழு தலைவரையும் அழைச்சிகிட்டு போய் கொஞ்சம் பயிற்சி கொடுங்க. சரியா..
ALHAMTHILLAH
பதிலளிநீக்குMay ALLAH blessings for him
Regards,
ismail.
Dubai.
வாழ்த்துக்கள், இன்னும் வெற்றிகள் குமிய அல்லா துணை நிற்பானாக.
பதிலளிநீக்குகல்வி குழு தலைவர் குத்துசன்டைக்கா?? தயார் படுத்திவிடலாம். குழுமத்தில் இதைபத்தி அலசலாமே :)))-
Assalamu alaikum,
பதிலளிநீக்குI am only trying to say the haqq and please forgive me if it comes across as dampener for the celebration.
Boxing is not permitted in islam as it involves hitting the face which was prohibited by Rasulullah sallallahu alayhi wasallam.see the hadith below
Sayyiduna Abu Hurayra (Allah be pleased with him) narrates that the Messenger of Allah (Allah bless him & give him peace) said: "If somebody fights (m, due to a lawful reason) then he should avoid the face.” (Sahih al-Bukhari, no. 2420)
Also boxers GENERALLY do not cover their awrah from navel to the knee which is fardh in islam.
Insha allah, the brother can take up wrestling which is encouraged in islam
Wassalamu alaykum
your brother in islam
அல்லாஹு அக்பர்! புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே, வாழ்த்துக்கள் சகோ. ஹமித் கவுஸ் அவர்களே, சாதிக்க நினைத்த அனைவருக்கும் ஒரு மன த்ரிப்தி, அல்லாஹ்வுடைய உதவியுடன் சிந்தனையை சிந்தரவிடாமல் நீங்கள் செய்துவந்த முழு பயிற்சிதான் இன்று உங்களுகுகிடைத்த இந்த வெற்றி, இன்ஷாஅல்லாஹ் மேலும் வெற்றிகளை குவிக்க அல்லாஹ் அருள்புரியட்டும்
பதிலளிநீக்குஅல்ஹம்துலில்லாஹ்
பதிலளிநீக்குதொழில்முறை குத்துசண்டைதேர்வில் சாதனை புரிந்துல்ல சகோதரர் ஹமீத்கவுஸ் அவர்கலுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோதர உன்எல்லாம் நல்முயற்சிகளிலும் அல்லாஹ்ரஹ்மத்செய்ய துஆ செய்கிறேன்
தம்பி ஹமிது கவுஸ் அவர்களின் சாதனை நமது ஊரின்,சமுதாயத்தின் சாதனை,இவரை போன்றவர்கள் ஊக்குவிக்க பட வேண்டும்.
பதிலளிநீக்குCongradulations!
பதிலளிநீக்குTo Mr. Hamid Gouse
very good achivmant congrajulation mr hamed ghous
பதிலளிநீக்கு