முடித்துவைப்பதை குறித்தாலும்
முற்றுப்புள்ளிகள்
அழகானவை.
முடிக்கத்திணறும் ஒரு காற்புள்ளியை விடவோ ( கமா )
அர்த்தம் தராத ஒரு அரைப்புள்ளியைவிடவோ (செமிகோலன்)
நிச்சயம் அழகானது
முழுவட்ட பூரணமான
முற்றுப்புள்ளி.
நம்மில் பலருக்கு
முற்றுப்புள்ளி வைப்பது இன்னும்
கைவராத கலைதான்.
சுருதியற்ற வெட்டிப்பேச்சுக்களுக்கும்,
கைகூடிவராத காதல்களுக்கும்,
முடிச்சுக்கள் விழுந்த கவிதைகளுக்கும்,
அர்த்தமில்லா தனிமை சிந்தனைகளுக்கும்....
அழகிய முற்றுப்புள்ளியொன்று வைக்க
நாம் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
முற்றுப்புள்ளி
முறித்துக்கொள்ளும் வன்மத்தின் அடையாளமல்ல.
அடுத்த வாக்கியத்தை இணைத்து வைக்கும்
சமாதானத்தூதுவன் அது.
முற்றுப்புள்ளியற்ற வாக்கியம்
அழகாக இருக்குமா என்ன?
துவக்கப்புள்ளியில் துலங்கினாலும்
முடித்துவைக்கும்
முற்றுப்புள்ளியில் அல்லவா உள்ளது
வாசல் கோலத்தின் பரிபூரணம்.
முற்றவே முற்றாத மறுமை வாழ்விற்கு முன்
மரணம் நமக்கிடப்போகும் முற்றுப்புள்ளி
எங்கு, எப்போது என்று
முற்றாக அறியாத நிலையில்
வாருங்கள்
வாழ்க்கையை
அழகாக்கி அர்த்தப்படுத்துவோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...
//முடித்துவைப்பதை குறித்தாலும்
பதிலளிநீக்குமுற்றுப்புள்ளிகள்
அழகானவை.
முடிக்கத்திணறும் ஒரு காற்புள்ளியை விடவோ ( கமா )
அர்த்தம் தராத ஒரு அரைப்புள்ளியைவிடவோ (செமிகோலன்)
நிச்சயம் அழகானது
முழுவட்ட பூரணமான
முற்றுப்புள்ளி.//
அழகு.
இந்த நவீனத்தின் சாயலிலேயே தொடர்ந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
அதுசரி, என்ன திடீர்னு கவிதை?, அதுவும் ஒரு செய்திக்குவியலிடையே!
இதையும் பாருங்க
கருத்தும்
பதிலளிநீக்குகவிதையும் அருமை
//துவக்கப்புள்ளியில் துலங்கினாலும்
பதிலளிநீக்குமுடித்துவைக்கும்
முற்றுப்புள்ளியில் அல்லவா உள்ளது
வாசல் கோலத்தின் பரிபூரணம்.//
வாசல் கோலத்தினுடன் சேர்த்து நம் " வாழ்க்கை கோலத்தையும்" அழகாக படம்பிடித்துக்காட்டியது தங்கள் கவிதை.
abuprincess முதல்ல இந்த மாதிரி கவிதை எழுதுறதுக்கு முற்றுப் புள்ளி வைக்கனும் நீங்க:))))))))
பதிலளிநீக்குசதா செய்திகளையே படித்து போர் அடித்து போகும் வேளையில் ரசிக்கும்படியான இம்மாதிரியான கவிதைகள் அவசியமே
செய்திகளுக்கு முற்றுபுள்ளி,
பதிலளிநீக்குகவிதைக்கு துவக்கபுள்ளி,
முற்றவே முற்றாத மறுமை வாழ்வு! - (ஆச்சரிய குறி)
மரணம் எப்போது?, எங்கே? - (கேள்விக்குறி)
கவிதை அருமை !!!!
வஜிபாய்,
பதிலளிநீக்குஇந்த கமண்ட்டு மஹ்மூதுபந்தர்னா
அடுத்த கமெண்ட்ட 'PortoNovo' ண்டு போடுவீங்களா?