வியாழன், 12 மார்ச், 2009

திடீர் மழை : 40 செம்மறி ஆடுகள் பலி

புதுச்சத்திரம் அருகே திடீர் மழையால் 40 செம்மறி ஆடுகள் இறந்தன. கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த புலியூர்காட்டுச்சாகை கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர், 300க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். மேய்ச்சலுக்காக புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு கிராம வயல் வெளியில் செம்மறி ஆடுகளை தங்க வைத்து, மேய்த்து வந்தார். நேற்று முன்தினம் பெய்த திடீர் மழையில், செம்மறி ஆடுகள் மழையில் நனைந்தன.

நேற்று காலை திடீரென 40க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் இறந்தன. இதனால் பெரியப்பட்டு கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பெரியப்பட்டு ஊராட்சி தலைவர் கஸ்தூரி பரங்கிப்பேட்டை கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவித்தார். கால்நடை டாக்டர் சங்கர் நேரில் சென்று பார்வையிட்டார். திடீர் மழை காரணமாக உஷ்ணம் அதிகரித்தும், குளிர் தாங்கமுடியாமலும் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆடுகள் இறந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் ஆடுகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர் 12-03-2009

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...