ஞாயிறு, 22 மார்ச், 2009

கடலூர் கடலில் அகப்பட்ட இராட்சத திருக்கை மீன்




ஒன்றரை டன் எடையும் 15 அடி அகலமும் 10 அடி நீளமும் உடைய கொம்பு திருக்கை மீன் ஒன்று கடலூர் துறைமுகத்தில் நேற்று பிடிக்கப்பட்டது. இந்த மீன் 17ஆயிரம் ரூபாய்க்கு அங்கேயே விலைபோனது.

இதுபற்றி கடலூர் துறைமுகநகரைச் சேர்ந்த ஆரிஃப் என்பவர் கூறுகையில்
பொதுவாக திருக்கை மீன்கள் 15 கிலோ முதல் 20 கிலோ வரை இருக்கும். இராட்சத கொம்பு திருக்கைமீன்கள் ஆழ்கடலில் 50 கிலோமீட்டர் தூரங்களில் இருப்பதுண்டு.
வலைசேதப்படும் என்பதாலும், ஆட்களையே விழுங்கக்கூடும் என்பதாலும் இம்மாதிரி இராட்சத மீன்களைப் பிடிக்க மீனவர்கள்ஆர்வங்காட்ட மாட்டார்கள்.

நேற்று மீனவர்களின் வலையில் இம்மீன் சிக்கி அந்தச் சிறிய வலையும் சேதமடைந்தது. இருந்த போதிலும், வலையை படகோடு சேர்த்துக் கட்டிய கடலூர் மீனவர்கள் மெல்ல அதனை கரைக்குக் கொண்டுவந்தனர். தலையில் சிறிய கொம்புடன் காணப்படும் இம்மீனுக்கு கோட்டான் திருக்கை, கொம்பு திருக்கை என்றும் சொல்வார்கள். இது எதிர்பாராமல் சிக்கியது தான். வியாபாரி ஒருவர் ரூ.17 ஆயிரத்துக்கு ஏலத்தில் எடுத்து கூறு போட்டு வெளியூருக்கு ஏற்றுமதி செய்துவிட்டார்.
என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...