செவ்வாய், 31 மார்ச், 2009

அரசியல் பிரமுகர்கள் - வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

கருத்துக்கணிப்பு நடத்த தடையில்லை:
  • தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு, வாக்குச்சாவடி கருத்துக்கணிப்புகளை நடத்த 'டிவி', பத்திரிகைகள் மற்றும் இதர மீடியாவுக்கு தடையில்லை.
  • இது போன்ற கருத்துக்கணிப்புகளின் முடிவுகளை முதல் கட்ட தேர்தல் முடிவடையும் நேரத்திலிருந்து 48 மணி நேரத்துக்கு முன்பிருந்து, இறுதி கட்ட தேர்தல் முடியும் வரை வெளியிடக்கூடாது.

மக்களவை தேர்தல் கட்சிகளுக்கு நடத்தை விதிமுறைகள்:

  • சாதி, மத வேறுபாடுகளை உருவாக்கும் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது.
  • தனிநபர் குறித்து குறை கூறுவதை தவிர்த்தல் வேண்டும்.
  • வழிபாட்டுக்குரிய பிற இடங்கள் மற்றும் பள்ளிகள், கல்லூரி வளாகங்களை தேர்தல் பிரசார மேடையாக பயன்படுத்தக்கூடாது.
  • வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், வாக்காளர்களை மிரட்டுதல், ஆள்மாறாட்டம், வாக்குச்சாவடியில் இருந்து 200 மீ. தொலைவுக்குள் ஆதரவு கோருதல், வாக்காளர்களை வாகனங்களில் அழைத்து வருதல், சின்னங்களை குறிக்கும் பொருட்கள், துண்டுசீட்டு வழங்குதல் போன்றவற்றை அனைத்து வாக்காளர்களும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
  • சுவர்களில் தேர்தல் விளம்பரம் கூடாது.
  • தேர்தல் பிரசாரத்துக்கு ஒலிபெருக்கி மற்றும் பிற வசதிகளை பயன்படுத்த உரிய அதிகாரிக்கு முன்கூட்டியே விண்ணப்பம் செய்து அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.
  • வேட்பாளர்களின் ஒப்புதல் பெற்ற தொண்டர்களுக்கு தகுந்த வில்லைகளை அல்லது அடையாள அட்டைகளை வழங்க வேண்டும்.
  • வாக்காளர்களுக்கு அவர்கள் வழங்கிய அடையாள அட்டைகள் வெற்றுத்தாள்களில் இருக்க வேண்டும். பெயரோ, சின்னமோ இருக்கக்கூடாது என்பதையும் அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.
  • வாக்காளர்கள் நீங்கலாக தேர்தல் ஆணையம் செயல் திறனுள்ள நுழைவுச்சீட்டு இல்லாமல் எவரும் வாக்குச்சாவடிகளில் நுழையக்கூடாது.
  • புகார் அல்லது பிரச்னை எதுவும் இருந்தால் சட்டமன்ற பேரவை தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட பார்வையாளர்களிடம் அரசியல் கட்சி ஏஜெண்டுகள் தெரிவிக்கலாம்.
  • அமைச்சர்கள் அலுவல் முறை பயணம் செய்கையில் தேர்தல் பணியில் ஈடுபடக்கூடாது.
  • தேர்தல் பணிக்காக அரசு அதிகாரிகள், பணியாளர்களை பயன்படுத்தக்கூடாது.
  • மத்திய, மாநில அமைச்சர்கள் வாக்குச்சாவடிக்குள் அல்லது வாக்குச்சீட்டு எண்ணும் இடத்துக்குள் நுழையக்கூடாது. தேர்தல் ஏஜெண்டு என்கிற முறையில்தான் நுழையலாம்.
  • மத்தியில் அல்லது மாநிலத்தில் ஆட்சியில் உள்ள கட்சி தனது தேர்தல் பிரசாரத்துக்காக அதிகாரத்தை பயன்படுத்தக்கூடாது.
  • அரசாங்க விமானம், வாகனங்கள் உட்பட அரசு போக்குவரத்தை அரசு அதிகாரிகளும், பணியாளர்களும் ஆளும்கட்சியின் நலனுக்காக பயன்படுத்தக்கூடாது.
  • மைதானங்கள் முதலிய பொது இடங்களை தேர்தல் கூட்டம் நடத்துவதற்காக தனி உரிமையுடள் ஆளும்கட்சியே பயன்படுத்தக்கூடாது.
  • அமைச்சர்கள், பிற அதிகாரிகள் அவர்களுடைய விருப்ப நிதியில் இருந்து மானியமோ, தொகைகளோ வழங்கக்கூடாது.
  • அரசு பொதுகட்டிடங்கள், சாலை குறியீட்டு பலகைகள், வழிகாட்டி பலகைகள், நெடுஞ்சாலை மேம்பாலங்கள் உட்பட அரசு சொத்தில் தோற்றத்தை குலைத்தால் அவற்றை அப்புறப்படுத்துவதற்கான செலவை சம்பந்தப்பட்ட கட்சி மற்றும் வேட்பாளரிடமிருந்து வசூலிப்பதுடன் அதனை சம்பந்தப்பட்ட வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.

என்பது உட்பட மேலும் ஏராளமான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...