சிதம்பரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான தொல்.திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
சிதம்பரத்தில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார்.
பரங்கிப்பேட்டை
, காட்டுமன்னார்கோவில் பகுதியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டங்களிலும் அவர் பங்கேற்றார். இக் கூட்டங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வமும் பங்கேற்றார்.எள்ளேரி
, லால்பேட்டை, புவனகிரி ஆகிய பகுதிகளில் கூட்டணிக் கட்சி பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கேட்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அவருடன் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் நெய்வேலி சென்றார்.சென்னையில் ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளன்று விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.
ஏப்ரல்
15-ம் தேதி மீண்டும் சிதம்பரம் தொகுதியில் பிரசாரத்தை தொடங்குகிறார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.Source : தினமணி
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - திருமாவளவன் பேச்சு
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று திருமாவளவன் கூறினார்.
ஆதரவு திரட்டினார்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளராக அக்கட்சியின் அமைப்பாளர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் அவர் பரங்கிப்பேட்டை, புவனகிரி ஆகிய பகுதிகளில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தலைமையில் திருமாவளவன் கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க.கூட்டணியில் போட்டி
சிதம்பரம் தொகுதிக்கு நான் நன்கு அறிமுகமானவன். உங்களை நம்பி தான் நான் மீண்டும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன். இந்த தொகுதியில் என்னை வெற்றிபெற செய்ய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடுமையாக உழைத்து வருகிறார். கடந்த தேர்தலில் தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்திருந்தது. அப்போது பா.ம.க.சார்பில் போட்டியிட்ட பொன்னுசாமியிடம் நீங்கள் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் என்று அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.
அதன்படி அவர் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன், சிறுத்தைகள் கட்சி கூட்டணி வைத்துள்ளது. அதே அமைச்சர் என்னிடம் நீங்கள் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் என்று கூறியுள்ளார். அமைச்சரின் இந்த பேச்சு சரியாக இருக்கும்.
40 தொகுதிகளிலும் வெற்றி
விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு சேர்ந்து தேர்தல் களப் பணியாற்றி சிதம்பரம் உள்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் திருமாவளவன் கூறினார்.
நிகழ்ச்சிக்கு தி.மு.க.ஒன்றிய செயலாளர் முத்து. பெருமாள் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற முகமது யூனுஸ் வரவேற்று பேசினார். இதில் ரவிக்குமார் எம்.எல்.ஏ., சிதம்பரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் தாமரைச் செல்வன், புவனகிரி தொகுதி பொறுப்பாளர் ரவிச்சந்திரன், மண்டல பொறுப்பாளர் காவியச் செல்வன், மாவட்ட ஊடக மைய செயலாளர் முடி கொண்டான், காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகநாதன், வட்டார தலைவர் சேதுமாதவன், இளைய பெருமாள், தமிழ்வளவன், ரமேஷ், காஜாகமால், நகர செயலாளர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் புவனகிரியிலும் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் திருமாவளவன், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டணிகட்சி முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல் நாசர், தி.மு.க.பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர் மதியழகன், மாவட்ட மகளிரணி செயலாளர் அமுத ராணி தனசேகரன், ஒன்றிய செயலாளர் ஜெயராமன், நகர செயலாளர் கந்தன், டாக்டர் மனோகர், முன்னாள் யூனியன் தலைவர் பழனிச்சாமி, பிற்படுத்தப்பட்டோர் பிரிவு காங்கிரஸ் மாவட்ட தலைவர் குமார், வட்டார தலைவர் சிவக்குமார், சவுந்திர பாண் டியன், பேரூராட்சி மன்ற துணை தலைவர் ராம் குமார், மாவட்ட துணை செயலாளர் செல்லப்பன், ஒன்றிய செயலாளர் சுதாகர், நகர அமைப்பாளர் செந்தில், ராமர், முத்து, எழில்வேந்தன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

Source : தினத்தந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக