பன்றிக் காய்ச்சல் தொற்று குறித்து கண்காணிக்க, தெரிந்து கொள்ள 24 மணி நேர அவசர கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர் சுப்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விமான நிலையங்கள், துறைமுகங்களில் வந்திறங்கும் சர்வதேச பயணிகளை தமிழக மருத்துவக் குழுவினர் தீவிரப் பரிசோதனை செய்கின்றனர்.
பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குனரகத்தின் சார்பில் 24 மணி நேரமும் இயங்கும் அவசர கண்காணிப்பு மையம் பன்றிக் காய்ச்சல் தொற்று குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறது.
044-24321569 என்ற தொலைபேசி எண்ணில் பன்றிக் காய்ச்சல் நடவடிக்கை குறித்த விவரங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து கோவை வந்துள்ள தாய், மகன் இருவருக்கும் பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பதாக சந்தேகம் வந்தது. அவர்களது ரத்த மாதிரிகள் ஆய்வுக்கூட பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக