பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

திங்கள், 18 மே, 2009

அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் உயர்ந்ததால் மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதமும் அதிகரித்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 66 அரசு பள்ளிகள், 9 நலத்துறை பள்ளிகள், ஒரு நகராட்சி பள்ளி, 29 நிதியுதவி பள்ளிகள், ஒரு சுய நிதி பள்ளி, 42 மெட்ரிக் பள்ளிகள் என 148 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.

இவைகளில் கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 58 சதவீதமாக இருந்த தேர்ச்சி இந்தாண்டு 63.94 என உயர்ந்துள்ளது.

அடுத்ததாக நிதியுதவி பள்ளிகளில் 81 ஆக இருந்தது, சொற்ப அளவில் 81.32 ஆக உயர்ந்துள்ளது.

நலத்துறை பள்ளிகளில் 63 ஆக இருந்த தேர்ச்சி சதவீதம் 62.09 ஆகவும், நகராட்சி பள்ளி 63 ஆக இருந்தது 58.30 ஆகவும், சுய நிதி பள்ளிகளில் 95 ஆக இருந்தது 93.43 ஆக குறைந்தும், மெட்ரிக் பள்ளிகளில் 95 ஆக இருந்த தேர்ச்சி 93.19 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

அரசு பள்ளிகளில் மட்டும் இந்த ஆண்டு 5.94 சதவீதம் உயர்ந்ததன் காரணமாக மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதமும் உயர்ந்துள்ளது.

கை நிழுவியது! பிளஸ் 2 பொதுத் தேர்வில் 87.40 சதவீதம் : 3,013 பேர் மீது கவனம் செலுத்தாததால்...

பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் தமிழகத்தில் கடைசியிலிருந்து இரண்டாவது இடத்தில் இருந்த கடலூர் மாவட்டம் தற்போது 74.66 சதவீதம் தேர்ச்சி பெற்று 4 மாவட்டங்களை பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளது.

ஒரே ஒரு பாடத்தில் மட்டும் தோல்வியடைந்த 3,013 மாணவ, மாணவிகளின் மீது ஆசிரியர்கள் கவனத்தை செலுத்தியிருந்தால் 87.40 சதவீதம் தேர்ச்சி பெற்று 12வது இடத்திற்கு முன்னேறி இருக்கலாம்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் 23 ஆயிரத்து 655 பேர் தேர்வு எழுதியதில் 17 ஆயிரத்து 662 பேர் தேர்ச்சி பெற்று 74.66 சதவீதத்தை எட்டியுள்ளனர்.

ஒரு சில பாடங்களில் கேள்வித்தாள் கடினம் மற்றும் விடைத்தாள் திருத்தும் மையங்களில் கெடுபிடி போன்றவைகளை மீறியும் கடந்த ஆண்டை விட 3.57 சதவீதம் கூடுதலான தேர்ச்சி கிடைத்துள்ளது.

மாவட்டத்தின் ஒரு சில பள்ளிகளில் முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்கும் விதத்தில் சி.இ.ஓ., முயற்சியால் மற்ற பள்ளிகளிலிருந்து வாரத்தில் 2 நாட்கள் 'டெபுடேஷன்' மூலம் பணி நியமித்து பாடங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான மாவட்டங்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்தாலும் கடலூர் மாவட்டம் முன்னேறியுள்ளது ஆறுதலான விஷயம்.

இன்னும் கூடுதலாக கவனம் செலுத்தியிருந்தால் 12வது இடத்திற்கு முன்னேறியிருக்கலாம்.

மாவட்டம் முழுவதும் தேர்வு எழுதிய 23 ஆயிரத்து 655 பேரில் ஏதோ ஒரு பாடத்தில் மட்டும் தோல்வியடைந்து தேர்ச்சியை நழுவ விட்டவர்கள் எண்ணிக்கை 3,013 பேர்.

ஒரே ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சியை நழுவ விட்ட மாணவர்கள் அறவே படிக்காதவர்களாக இருக்க முடியாது.

ஓரளவு சரியாக படிக்காத மாணவர்கள்தான் ஒரு பாடத்தில் கோட்டை விடுவர்.

இந்த மாணவர்களை முறையாக கண்டு அவர்களுக்கு தேவையான பயிற்சி அளித்து தேர்ச்சி பெற வைத்திருந்தால் 87.40 சதவீதம் தேர்ச்சி பெற்று தமிழகத்தில் 12வது மாவட்டமாக கடலூர் மாவட்டம் இடம் பிடித்திருக்கும்.

ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பறிபோனது பெரும்பாலும் 10 முதல் 15 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட கல்வித்துறையின் முயற்சியால் 'மினிமம் மெட்டீரியல்' எனப்படும் குறைந்தபட்ச பாடத்திட்டத்தின் கீழ் கேள்வி-பதில் புத்தகம் தயாரித்து அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டது.

இந்த புத்தகத்தை மாணவர்கள் படித்தால் தேர்ச்சி பெறாதவர்கள் கூட குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற முடியும்.

ஆனால் இந்த புத்தகம் மாணவர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் வேதியியல் பாடத்தில் மட்டும் 403 பேரும், இயற்பியலில் 634 பேரும், கணிதப் பாடத்தில் அதிகபட்சமாக 874 பேர் தேர்ச்சி பெறவில்லை.

இவர்களுக்கு குறைந்தபட்ச பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட கேள்வி-பதில் அடங்கிய புத்தகம் வழங்கி, அவர்கள் படிக்க உறுதுணையாக இருந்திருந்தால் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தியிருக்கலாம்.

இந்த குறைந்தபட்ச பாடத் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட கணிதப் பாடத்திட்டத்தை திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்கள் பின்பற்றி கடலூர் மாவட்டத்தை விட கணிதத்தில் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்!:

கருத்துரையிடுக

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234