கடந்த 12.06.2009 வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணியளவில் அஸர் தொழுகையைத் தொடர்ந்து குவைத், ஸால்மியா பகுதியில் உள்ள ஜனாப் எஸ். கவுஸ் அலீ இல்லத்தில் குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை(KPIA)யின் '4ஆம் ஆண்டு துவக்க விழா'வும், '2009-2010ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நிகழ்வு'ம் நடைபெற்றன. அல்ஹம்துலில்லாஹ்...
பேரவையின் தலைவர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ தலைவர் ஜனாப் ஜி. ஹஸன் அலீ முன்னிலை வகிக்க, மூத்த உறுப்பினர் ஜனாப் ஜனாப் ஏ.பி. அப்துல் நஜீர் இறைவசனங்கள் (கிராஅத்) ஓத நிகழ்ச்சிகள் இனிதே துவங்கின.
தலைவரின் தலைமையுரைக்கு பின், செயலாளர் ஹாஜி எம்.எஸ். குலாம் ஜெய்லானி மியான் ஆண்டறிக்கையை சமர்ப்பித்து, பேரவையின் நோக்கங்கள், செயற்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கினார்.
பொருளாளர் ஜனாப் இஜட். ஹபீபுல்லாஹ் மரைக்காயர் ஆண்டு வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தார்.
3ஆம் ஆண்டு நிறைவு மற்றும் 4ம் ஆண்டு துவக்கம் குறித்து உறுப்பினர்களின் கலந்துரையாடலுக்கு பிறகு 2009-2010ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

கீழ்க்காணும் சகோதரர்கள் பேரவையின் புதிய நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
நிர்வாகக் குழு- தலைவர் : ஜனாப் ஜே. ஹஸன் அலி
- துணைத் தலைவர் : ஜனாப் பி. முஹம்மது ஷரீஃப்
- செயலாளர் : மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ
- துணைச்செயலாளர் : ஜனாப் மீ.மெ. ஹாஜா கமால்
- பொருளாளர் : ஹாஜி எம்.எஸ். குலாம் ஜெய்லானி மியான்
- துணைப் பொருளாளர் : ஜனாப் இஜட். ஹபீபுல்லாஹ் மரைக்காயர்
- 1. ஜனாப் எஸ். முஹம்மது நூர்
- 2. ஜனாப் பி.ஏ. அப்துர் ரஜ்ஜாக்
- 3. ஜனாப் பி.ஏ. அப்துல் ஹமீது (அலீம்)
- 4. ஜனாப் எஸ். கவுஸ் அலீ
- 5. ஜனாப் யு. நிஸார் அஹ்மது
- 6. ஜனாப் எம்.எச். அல்காஃப் ஹுஸைன்
- 7. ஜனாப் என். சுல்தான் ஆரிஃப்
செயற்குழு உறுப்பினர்கள்:
- 1. ஜனாப் எம். முஹம்மது இப்ராஹீம்
- 2. ஜனாப் எஸ். கவுஸ் ஹமீது
- 3. ஜனாப் ஏ.பி. அப்துல் நஜீர்
- 4. ஜனாப் எஸ். பீர் முஹம்மது அலீ
- 5. ஜனாப் எஸ். ஷர்ஃபுத்தீன்
- 6. ஜனாப் எஸ். ஜெய்லான் மியான்
- 7. ஜனாப் எஸ். யஹ்யா மரைக்காயர்
புதிய துணைச்செயலாளர் ஜனாப் மீ.மெ. ஹாஜா கமால் நன்றியுரையாற்ற, தலைவரின் துஆவுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றன.
இச்சிறப்பு மிகு நிகழ்ச்சியில் குவைத் வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் பெரும்பாலானோர் கலந்துகொண்டு தங்கள் வருகையை பதிவுசெய்து சிறப்பித்ததுடன் நகர வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்திற்கும் பேரவை எடுக்கும் முயற்சிகளுக்கு உதவியும் ஒத்துழைப்பும் வழங்குவதாக உறுதியளித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை(KPIA)யின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக