திங்கள், 13 ஜூலை, 2009

பரங்கிப்பேட்டை விவசாயிகள் கவனத்துக்கு...

பரங்கிப்பேட்டை மற்றும் சிதம்பரம் வேளாண்மை விரிவாக்க மையங்களில் எதிர்வரும் சம்பா பருவதிற்கேற்ற பி.பி.டி.5204 மற்றும் ஏ.டி.டி.38 ஆகிய சான்று பெற்ற தரமான நெல் விதைகள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகள் விநியோகத்துக்கு தயாராக உள்ளது என வேளாண் உதவி இயக்குநர் இ. தனசேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

'மண் வளத்தை பாதுகாத்து உரச்செலவை குறைக்கவல்ல உயில் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா விநியோகிக்கப்பட்டு வருகிறது என்றும், பயிருக்கு தேவையான நுண்ணூட்டங்களும் தேவையான இருப்பு உள்ளது. விவசாயிகள் மேற்கண்ட இடுபொருள்களை பெற்று பயன்பெற வேண்டும்' என அறிக்கையில் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக