பரங்கிபேட்டை தௌலத்துன்னிசா மகளிர் அரபிக்கல்லூரி இரண்டாவது ஆண்டு முபல்லிகா பட்டமளிப்பு விழா (சனது வழங்கும் விழா) 07.08.2009 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.
காலை ஒன்பது மணிக்கு துவங்கிய நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் மற்றும் பேரூராட்ச்சி மன்றத்தின் தலைவர் முஹம்மது யூனுஸ் தலைமை தாங்கினார். மீராபள்ளியின் முத்தவல்லி அப்துல் சமத் ரஷாதி கிராத் ஓதி துவங்கி வைத்தார். அரபிக்கல்லூரியின் முதல்வர் அப்துல் காதர் மரைக்காயர் உமரி வரவேற்புரை நிகழ்த்தினார்.
மீராபள்ளியின் நிர்வாகி கலிமா ஷேக் அப்துல் காதர் மரைக்காயர், சிங்கப்பூர் தொழிலதிபர் அப்துல் ஜலீல், அல்ஹாஸ் அறக்கட்டளையின் தலைவர் ஷேக் அலாவுதீன், அதன் நிர்வாகி காதர் ஹசனா மரைக்காயர், முதலிய பலர் முன்னிலை வகித்தனர். திருச்சி ஜாமியா அன்வாருல் உலூம் துணை முதல்வர் ரூஹுல் ஹக், அல்ஹரமைன் அறக்கட்டளை செயலாளர் முஹம்மது ரபிக், அல்ஹரமைன் அறக்கட்டளை பொருளாளர் முஹம்மது இபுராஹீம், நிஸ்வான் மேலாளர் அப்துல் காதர் , நிஸ்வான் பொருளாளர் சுல்தான், அப்துல் காதர் மதனி உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
மதியம் ஜும்ஆ தொழுகை அழைப்பிற்கு முன் நிகழ்ச்சியின் முதலாம் அமர்வு நிறைவடைந்து, மதியம் சுமார் மூன்று மணிக்கு இரண்டாம் அமர்வு துவங்கியது. முதலில் பேசிய ஷேக் அலாவுதீன், நிஸ்வான் மூலம் பரங்கிப்பேட்டையில் ஏற்பட்டுவரும் மற்றும் எதிர்பார்க்கும் மாற்றங்களை பற்றியும் பெற்றோர்களின் கடமைகள் குறித்தும்பேசினார். நிஸ்வான் கல்விமுறை செயல்பாடு மற்றும் அது குறித்த விஷயங்களில் தவறு இருப்பதாக கருதுபவர்கள் சுட்டிக்காட்டினால் அது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார். ரத்தின சுருக்கமாக பேசிய அப்துல் ஜலீல், இறைவனை பற்றிய அச்சம் நம்மிடம் இருக்கிறதா என்று நம்மை நாமே பரிசோதனை செய்து கொள்வது எப்படி என்று பேசினார். ஒரு வக்த் தொழுகையை விட்டுவிட்டால் அடுத்த தொழுகைக்கு நிற்கும் போது நம் மனம் உறுத்தினால் அது தான் இறைவனை பற்றிய அச்சத்தின் சிறு அடையாளம் என்று கூறினார்.
பிறகு இஸ்மாயில் நாஜி, நூருல் அமீன், காஜா முயினுத்தீன், சித்திக் அலி, ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களில் ஒருவரும், இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளருமான ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் தனது இடியுரையில் ஆலிமாக்களை உருவாக்கி கொண்டு வருவதின் பயன் என்ன என்று கேள்வி எழுப்பினார். இந்தியாவில் தவிர உலகின் இதர அனைத்து பகுதிகளிலும் பெண்கள் பள்ளிவாசல்களில் அனுமதிக்கபடுகின்றார்கள். இஸ்லாம் அனுமதிக்காத முறையில் பெண்களை வீட்டில் சிறை வைப்பது போல் வைத்திருந்து அவர்களை பள்ளிவாயில்களுக்கு அனுமதிக்காமல் வைத்தே இருந்தால் அவர்களே அவர்களுக்கான தொழும் கூடங்களை நிர்மாணிக்கும் வேலை வந்து விடும் என்றார்.
பிறகு சிறப்புரை ஆற்றிய தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் வக்ப் நிலங்கள் வீணாய் போய்கொண்டு இருப்பதை கவலையுடன் குறிப்பிட்டார். வக்ப் நிலங்கள் நமது முன்னோர்கள் நமக்கு நல்ல பல செயல்கள் செய்வதற்கு விட்டுச்சென்றவை.. வெறுமனே பாதுகாத்து வைப்பதர்க்கல்ல என்றார். பெரும்பாலான முத்தவல்லிகள் அனைவரும், பதவிக்கு ஆசைப்பட்டு வக்ப் நிலங்களை அபகரிக்கிறார்கள் என்ற ரீதியில் விமர்சித்த கவிக்கோ அவர்களுக்கிடையே எப்போதும் பதவி போராட்டம் இருப்பதை கண்டித்தார். கல்வி நிலையங்கள் குறிப்பாக பெண்களுக்கான கல்லூரிகள் மற்றும் தொழில்பயிர்ச்சிக் கூடங்கள் கட்டவும், வக்ப் நிலங்களை தர வக்ப் போர்டு எப்போதும் தயாராக இருப்பதாக அறிவித்தார். நமது சமுதாயத்திர்க்கென்று ஓர் மருத்துவ கல்லூரி இல்லை என்று கவலையை வெளிப்படுத்திய கவிக்கோ மேடையில் அமர்ந்து இருந்த சிங்கப்பூர் தொழிலதிபர் அப்துல் ஜலீல் அவர்களை ஒரு மருத்துவ கல்லூரிக்கான முயற்சியினை துவங்குமாறு கேட்டுக்கொண்டார். அப்துல் ஜலீல் மட்டுமே அதற்காக முயற்சிப்பார் என்று அனைவரும் சும்மா அமர்ந்து விடாதீர்கள். எனக்கு தெரியும் பரங்கிபேட்டை ஒரு பணக்கார பேட்டை. ஊரில் உள்ள நலம் விரும்பிகள் ஒரு ட்ரஸ்ட் அல்லது ஒரு குழு ஏற்படுத்தியாவது இதற்கான முயற்சியினை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த கால சூழ்லில் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்கள் பெண்களே அதுவும் குறிப்பாக முஸ்லிம் பெண்களே என்றார். மார்க்கம் அனுமதிக்கும் வழிகளில் அவர்களை பள்ளிவாசல் போன்ற இடங்களுக்கு அனுமதிக்காததின் விளைவு தான் இன்று அவர்கள் சீரியல்களில் விழுந்து யாருக்காகவோ அழுது கொண்டுள்ளார்கள் என்றார். பெண்கள் கல்விக்கு நமது மார்க்கம் அளித்திருக்கும் முக்கியத்துவத்தினை அழகிய முறையில் விளக்கி பெண் கல்விக்கு நாம் அளிக்க வேண்டிய முக்கியத்துவத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். இது போன்ற நல்ல பல நிகழ்ச்ச்கள் மாதம் ஒரு முறையேனும் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறிய கவிக்கோ இது போன்ற நல்ல விஷயங்களுக்காக பெண்களை வெளியில் வர வேண்டும் என்றார்.
பிறகு முஹம்மது யூனுஸ் அவர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி தெரிவித்து பேச துவங்குகையில் தங்களுக்கு மிகவும் குறுகிய நேரமே உள்ளது என்று இரண்டு சிறப்பு விருந்தினர்கள் உடனே நன்றி தெரிவித்து விட்டு கிளம்பினார்கள் முஹம்மது யூனுஸ் அவர்களை வழியனுப்பி வைத்தார்.
விழாவில் மிக அதிகமான பேர் குறிப்பாக பெண்கள் கலந்து கொண்டனர். பிறகு மாணவிகளுக்கு சனது வழங்கப்பட்டது. விழா இனிதே நிறைவுற்றது.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குவிழா குறித்த தகவல்களை மிகச்சிறப்பாக தொகுத்தளித்திருக்கும் சகோ.ஹமீது மரைக்காயர் பாராட்டுக்குரியவர்.
பதிலளிநீக்குi just wonder if the many parangipettaiyans who earn their livelihood in a foreign country do charity work or contribute to charities in those country in whic they earn their bread and butter...........
பதிலளிநீக்கு