பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் ஹாஜி M.S. முஹம்மது யூனுஸ் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு ஹாஜி K. ஷேக் அப்துல் காதர், ஹாஜி G.M. ஜகரிய்யா மரைக்காயர், நகர ஜமாஅத்துல் உலமா பேரவையின் தலைவர் மௌலவீ ஹாஃபிழ் அல்ஹாஜ் M.S. காஜா முயீனுத்தீன் ஹஜ்ரத் மிஸ்பாஹி ஆகியோர் முன்னிலை வகிக்க, அனைத்து பள்ளிவாசல்களின் முத்தவல்லிகளும், நிர்வாகிகளும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கு பெற நிகழ்ச்சி துவங்கியது.
மௌலவீ காரி ஹாஜி H. அப்துஸ் ஸமது ரஷாதி கிராஅத் ஓத, மௌலவீ N. நூருல்லாஹ் பாகவி கீதம் படிக்க, மௌலவீ முஜிபுர் ரஹ்மான் ரஷாதி வரவேற்புரையாற்ற, மௌலவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் M. முஹம்மது ஃபாரூக் பாகவி வாழ்த்துரை வழங்க, மௌலவீ ஹாஜி M. அப்துல் காதிர் மரைக்காயர் உமரி நிகழ்ச்சி துவக்கவுரையாற்ற இனிதே துவங்கியது.
இந்த வழிகாட்டல் நிகழ்ச்சியில் மௌலவீ காரீ அல்ஹாஜ் A. சித்தீக் அலி பாகவீ, மௌலவீ ஹாஃபிழ் S.R. கவுஸ் முஹ்யித்தீன் மன்பஈ மற்றும் மௌலவீ அல்ஹாஜ் M.Y. இஸ்மாயில் நாஜி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
மௌலவீ ஹாஃபிழ் A. லியாகத் அலி மன்பஈ நன்றியுரையாற்ற, துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
இச்சிறப்பு மிகு வழிகாட்டல் நிகழ்ச்சியில் இவ்வருடம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிமார்கள் உட்பட ஏராளாமான பொது மக்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
களத்திலிருந்து... நமது செய்தியாளர் - புகைப்படங்கள் உதவி : கிரஸன்ட் நல்வாழ்வுச் சங்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக