திங்கள், 5 அக்டோபர், 2009

மழைக்காலத்திற்குள் பரங்கிப்பேட்டை பக்கிங்காம் கால்வாயை தூர்வார வேண்டும்! பொதுமக்கள் எதிர்பார்ப்பு !!



மழைக்காலத்திற்குள் பரங்கிப்பேட்டை பக்கிங்காம் கால்வாயை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் எதிர் பார்த்து உள்ளனர்.

கடலூர் மாவட்டம் கிள்ளை பிச்சாவரத்தில் இருந்து சென்னை வரை பக்கிங்காம் கால்வாய் உள்ளது.இந்த வாய்க்கால் வழியாக சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு கப்பல் போக்குவரத்து இருந்து வந்தது.

தற்போது இந்த கால்வாய் பரா மரிப்பு இல்லாமல் மணலால் மூடப்பட்டு கால்வாய் மிகவும் குறுகியதாக மாறி விட்டது.மழைக்காலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் இந்த கால்வாய் வழியாக வெள்ளம் தண்ணீர் வடிந்து விடும்.தற்போது இந்த பக்கிங்காம் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளதால் வெள்ளப்பெருக்கின் போது தண்ணீர் ஊருக்குள் புகுந்து விடும்.

இதனால் கடந்த வெள்ளப் பெருக்கின் போது ஏற்பட்ட உயிர்ச்சேதம், பொருட்சேதம் மீண்டும் ஏற்படும் நிலை உள்ளது.ஆகவே வரும் மழைக்காலத்திற்குள் கிள்ளை முதல் பரங்கிப்பேட்டை வரை பக்கிங்காம் கால் வாயை தூர்வாரினால் மழை வெள்ளம் ஊருக்குள் புகுந்து விடாமல் தடுக்கலாம்.ஆகவே பரங்கிப்பேட்டையில் உள்ள கால்வாயை விரைவில் தூர் வாரி, ஆழப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர் பார்த்து உள்ளனர்.

Source: Daily Thanthi / Photos: Khaleel Baaqavee

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...