மருத்துவ முகாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவ முகாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 நவம்பர், 2010

சிறப்பு மருத்துவ முகாம்







தமிழக அரசின் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக வருமுன் காப்போம் திட்டத்தின் அடிப்படையில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று காலை 9.00 மணி முதல் கும்மத்பள்ளி தெரு பள்ளிக்கூடத்தில் நடந்தது. அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவர்கள், கிள்ளை மற்றும் புதுச்சத்திரம் மருத்துவர்களும் இம்முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். மாலை வரை நடைப்பெற்ற இம்மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

சனி, 12 செப்டம்பர், 2009

ரெட் கிராஸ் மருத்துவ முகாம்



இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளை, கெனடியன் ரெட்க்ராஸ் உறுதுணையுடன் நடத்திய மருத்துவ முகாம் இன்று காலை ஒரு மணி வரை சலங்குகாரத்தெரு டாடா கம்யுனிட்டி ஹாலில் நடைபெற்றது. இதனை கடலூர் மாவட்ட ஐ.ஆர். சி. எஸ் கிளை ஒருங்கிணைத்து நடத்தியது. பொதுமக்கள் பலர் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. ரெட் கிராஸ் உள்ளூர் ஒருங்கிணப்பாளர் சுபாஷ் அவர்கள் நம்மிடம் ரெட் கிராஸ் செய்து வரும் மக்கள் நலப்பணிகள் குறித்து பகிர்ந்து கொண்டார். தற்போது தாய் செய் நலப்பணிகளை பிரதான நோக்கமாக கொண்டு ஒரு ப்ராஜக்ட் ஒன்றை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

எலும்பு வலிமை இலவச பரிசோதனை முகாம்

பரங்கிப்பேட்டை அரிமா சங்கம் சார்பில் எலும்பு வலிமை இலவச பரிசோதனை முகாம் மேட்டுத்தெருவில் நடைப்பெற்றது. அரிமா சங்க தலைவர் பாவாஜான் தலைமை தாங்கினார். இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவரும், பேரூராட்சி மன்ற தலைவருமான முஹம்மது யூனுஸ் முன்னிலை வகித்தார். எலும்பு வலிமை பரிசோதனை முகாமை இன்ஸ்பெக்டர் புகழேந்தி துவக்கி வைத்தார். ஆர்த்தோ டாக்டர் பாரதிசெல்வன் தலைமையில் டாக்டர்கள் குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் அரிமா சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் அன்சாரி, முன்னாள் தலைவர் கவுஸ ஹமீது, கமால், ராஜவேல், ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர்

நன்றி: தினமலர்

வெள்ளி, 4 ஏப்ரல், 2008

வருமுன் காப்போம் மருத்துவ நிகழ்ச்சி




பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத்தின் சார்பாக தமிழ்நாடு அரசின் வருமுன் காப்போம் மருத்துவ விழிப்புணர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை நிகழ்ச்சி சலங்குகாரத்தெரு, அன்னங்கோயிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் எம்.எஸ. முஹம்மது யூனுஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். பொது மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவம் முதல் நீரிழவு, இருதய நோய், போன்றவற்றிற்கு சிகிச்சையும், இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மற்றும் ஈ.சி.ஜி., ஸ்கேனிங், கண்புரை போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டன. ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்ற இந்நிகழ்ச்சியில் நமதூர் இஸ்லாமிய சமுதாய மக்களின் பங்கேற்பு மிகவும் சொற்பமாக இருந்ததற்கு என்ன காரணம் என்று சிந்தித்து பார்க்க வேண்டும். இந்த பயனுள்ள நிகழ்ச்சி சரியான முறையில் மக்களிடம் விளம்பரப்படுத்தப்படாததும், இயல்பாகவே நம் சமுதாய மக்களிடம் நிலவும் அலட்சிய மனோபாவமும்தான் முக்கிய காரணங்களா?. மேலும், அரசு நலத்திட்ட நிகழ்ச்சியான இதில் சரியான முறைப்படுத்துதல் இல்லை என்பது குறைபாடாகவே இருந்தது. உதாரணமாக, பெண்களுக்கான ஈ.சி.ஜி. போன்ற பரிசோதனையின் போது மறைப்பிக்கு கூட சரியான ஏற்பாடு இல்லை. பரங்கிப்பேட்டையில் பல தன்னார்வ சேவை நிறுவனங்கள் இருந்தும், இது போன்ற தருணங்களில் அந்த சேவை அமைப்புகளின் பங்களிப்பு அறவே இல்லாமல் போனது ஏன் என்று கேள்வி எழுகிறது.

திங்கள், 25 பிப்ரவரி, 2008

CWO சார்பாக பரங்கிப்பேட்டையில் இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம்

CWO சார்பாக பரங்கிப்பேட்டையில் இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம் நடைபெற்றது.கிரஸண்ட் நல்வாழ்வு சங்கமும், புவனகிரி ஆயிஷா ஹோமியோ கிளினிக்கும் இணைந்து பரங்கிப்பேட்டையில் இரண்டாவது முறையாக இலவச ஹோமியோ மருத்துவ முகாம் (24-02-08) நடைபெற்றது. பல்வேறு நோய்களுக்கு இலவச சிகிச்சையும் மருந்தும் வழங்கப்பட்டது. இந்த முகாமின் மூலம் சுமார் 50 பேர் பயனடைந்தனர். இச்சிறப்பு முகாம் மீராப்பள்ளி தெருவில் உள்ள கிரஸண்ட் அலுவலகத்தில் நடைபெற்றது.