சனி, 26 மார்ச், 2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தி.மு.க-வுக்கு ஆதரவு!


தமிழக சட்டமன்றதுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பல சமுதாய அமைப்புகளும்,இயக்கங்களும் அவரவர் சமுதாய சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுக் கொண்டிருந்தன. அந்த வகையில் முஸ்லீம் சமுதாய அமைப்பான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், முஸ்லிம்களுக்கான 3.5% இட ஒதுக்கீட்டை 5 சதவீதம் உயர்த்த வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாக வைத்து, இதை நிறைவேற்றுவதாக தேர்தல் வாக்குறுதி அளிக்கும் கட்சிக்குக்கு மட்டுமே ஆதரவு அளிக்கப்படும் என கடந்த ஜனவரி மாதம் இறுதியில் நடந்த பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர்.

தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளின் தேர்தல் அறிக்கை வெளியாகி விட்ட நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேற்கண்ட கோரிக்கையை எந்த அரசியல் கட்சியும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தி.மு.க வின் தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை மேலும் உயர்த்த பரிசீலிப்போம். என குறிப்பிடப்பட்டுள்ளதால் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து இன்று கூடிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் சேலத்தில் நடந்த பொதுக் குழுவில் தி.மு.க குறித்து, ''தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வராத நிலையில் அதற்கு இன்னும் நாட்கள் இருக்கின்ற நிலையில் 5% இடஒதுக்கீட்டை நீங்கள் உடனே அறிவித்து விட வேண்டும். நாங்கள் அடுத்து ஆட்சிக்கு வந்தால் தருவோம் என்று சொல்லக் கூடாது'' எனக் குறிப்பிட்டு தீர்மானம் இயற்றி இருந்தும், தி.மு.க அவ்வாறு ஏதும் சொல்லாத நிலையிலும் தற்போது தி.மு.கவை ஆதரிக்க முடிவெடுத்திருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.

9 கருத்துகள்:

  1. அப்துல்லாஹ், புரைதா - அல்கசீம்26 மார்ச், 2011 அன்று 6:04 PM

    அட...mypno.com காட்டுலே மழை தான், TNTJ மேட்டர போட்டா தான், கமெண்ட் கொட்டோ கொட்டுன்னு கொட்டுமே, ஜமாய்ங்க ராஜா, ஜமாங்க ராஜா

    பதிலளிநீக்கு
  2. The purpose of the support is due to TMMK is supporting AIADMK..Velangidum nam samudaayam..!

    பதிலளிநீக்கு
  3. அஸ்ஸலாமு அலைக்கும் ,பிஜே அண்ணன் சொல்லீட்டாறுபா எல்லோரும் போய் திமுகக்கு வோட்டு போடுங்க இரண்டு அரசியல் தலைவர்களும் நமக்கு துரோகீகல்தான், இதில் திமுகக்கு, ஏ கிரேட்டு கொடுக்கீண்ரீர்கல்,எண்ண பொட்டி வாங்கீட்டிகலா சந்தேகமாக உள்ளது ,,,

    பதிலளிநீக்கு
  4. எந்த முடிவெடுத்தாலும் சிந்திக்காம தலையாட்டுற குட்டம் இருக்குற வரைக்கும் தலைவர்கள் பாடு கொண்டாம்தான்.

    பதிலளிநீக்கு
  5. அஸ்ஸலாமு அலைக்கும் தேர்தல் சமயதில் அரசியல் கட்சிகள் எப்படி மாரி,மாரி திட்டி தீர்து கொள்கிராகளோ,அதே போல் நீங்கள் ஆதரீக்கும் கட்சி பிரசாரம் சைய உங்கலுக்கு மேடை கொடுக்கப்பட்டால் தாமுமுகவை நீங்கள் திட்டுவது,அவர்கள் ததஜ திட்டுவது,இப்படிதான் கடந்த தேர்தலின் நிலமை,தயவு சைது முதலில் நீங்கள்,பீஜே பேசிய எல்லை மீராதே என்ற தலைப்பை பார்கவும்,நமக்கு தௌவ்ஹீத் வாதீகளுக்கு நாவடக்கம் தேவை , , ,,வஸ்ஸலாம்

    பதிலளிநீக்கு
  6. எனக்கு ஒரு ஓட்டுதான் இருக்கு ,இதுலே யாரு போடுறது ....?

    எங்கு எல்லாம் நம்ம ஆளுங்க நிக்கிராங்களோ அவர்களுக்கு ஊடு அளியுங்கள் P.J நானா சொன்னாரு , இவரு சொன்னாரு போடதிங்கே , நமது சமுதாயத்தில் பல குழப்பவாதிகள் இருகிறார்கள், முழமையாக அவர் அவர் சுயலாபத்திற்காக மக்கள் தொண்டுனு நம்மே கூறு போடுறாங்க... விழிப்புடன் இருங்கள் ..

    நம்ம ஊருக்கு நம்ம ஊரு ஆள் வந்தால் தான் நம்தூருகு நன்மை..

    யோசியுங்கள்.... மக்களே..

    இவர்கள் இன்று DMK yenbargal nalai AIDMK என்பார்கள்.

    பரங்கிபேட்டை சமுதாயம் சிந்தியுங்கள்,

    மற்றவர் வந்தால் ஏலக்சனுக்கு ஏலக்சனு ரோடு போடுவங்கே .. இதற்கு 4 வருடம் காத்து இருக்க வேண்டும் .

    சிந்தியுங்கள்,

    இவர்கள் சொளுகிரர்கள் என்று நமது கதி என்னே


    பரங்கிபேட்டை சமுதாயம் சிந்தியுங்கள்,

    பதிலளிநீக்கு
  7. ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனுசனை கடித்தது போல,சஹாபாக்களையும் நபிமார்களையும் குறை கூறி,தன் சுய கருத்தை குர்ஆனில் புகுத்திய இஸ்லாமிய எதிரிகளின் கை கூலி, இஸ்லாத்தின் துரோகி, மரண தண்டனை கைதி பி.ஜே(துரோகி இருக்கும் நிலையில் மஹதி-அலை- வந்துவிட்டால் இவன் தலை உருட்டப்படும்). இவனை வணங்கும்
    கூட்டத்தின் பெயர் தான் த.த.ஜ.

    பதிலளிநீக்கு
  8. PJ katula malaithan. Dear PJ don't forget ALLAH and you will be questioned in the Aqirah for you and your follower.

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...