பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

திங்கள், 18 ஏப்ரல், 2011

பரங்கிப்பேட்டை: வாத்தியாப்பள்ளி கைப்பந்து அணி மற்றும் பெரியதெரு இளைஞர்கள் சேர்ந்து நடத்திய மாநில அளிவிளான கைப்பந்து போட்டிகள் கடந்த இரண்டு தினங்களாக பரங்கிப்பேட்டை ராலி தோட்டத்தில் நடைபெற்று வந்தது. பகல்-இரவு ஆட்டங்களாக நடைபெற்று வந்த இப்போட்டிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவையிலிருந்து பல்வேறு அணிகள் பங்கு பெற்றன. நேற்று இரவு நடந்த இறுதியாட்டத்தில் புதுவை பாரதி அணியும் பரங்கிகப்பேட்டை அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதியாட்டத்தில் புதுவை பாரதி அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச் சென்றது.
பரங்கிப்பேட்டை அணி இரண்டாவது இடத்தை பிடித்தது. மூன்றாவது பரிசு திருச்சி அணிக்கு கிடைத்தது. ரூ. 10,000 ரூ. 8,000 ரூ 7,000 என்று முறையே முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பெற்ற அணிகளுக்கு வழங்கப்பட்டது. பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்றத் தலைவரும் ஜமாஅத் தலைவருமான முஹமது யூனுஸ் பங்குபெற்று விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

Photos: TNTJ-PNO

4 கருத்துரைகள்!:

பெயரில்லா சொன்னது…

விளையாட்டு அமைப்பாளர்கள் மற்றும் முதல், இரண்டாம் இடத்தை வென்ற அணிகளுக்கு வாழ்த்துக்கள். விளையாட்டில் புகழ்ப்பெற்ற பரங்கிப்பேட்டை தற்போது அத்துறையில் மழுங்கி வருவது வேதனைக்குறியதாக இருக்கிறது. இளைஞர்களை ஊக்கமூட்டும் வகையில் அவ்வப்போது இவ்வாறான போட்டிகளை நடத்த வேண்டும். இரண்டாம இடம் வென்ற நமதூரின் விளையாட்டுக்குழு வின் புகப்படத்தை MYPNO ல் எதிர்ப்பார்க்கிறோம்.

பெயரில்லா சொன்னது…

MYPNO is nowadays not updating the news regularly as before. why that.?
and what happened to your mypno.com..??

பெயரில்லா சொன்னது…

ஆமாம், அதானே என்னாச்சி உங்க டீமுக்கு

பெயரில்லா சொன்னது…

பரங்கிப்பேட்டையின் சமீபத்திய அடையாளங்களில் தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்திருக்கும் MYPNO மென்மேலும் ஊடகத்துறையில் நன்கு கவனம்செலுத்திட வாழ்த்துகிறேன்.

கருத்துரையிடுக

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234