வியாழன், 12 மே, 2011

100%ம் உண்டு 0%ம் உண்டு


பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த 9-ம் தேதி வெளியானதை தொடர்ந்து மாநிலம் முழுவதுமான தேர்ச்சி சதவிகிதத்தை அனைவரும் அறிந்திருப்போம். பரங்கிப்பேட்டை பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதம் பற்றிய ஓர் அலசல்.



பரங்கிப்பேட்டையின் பழமையான பள்ளியான சேவாமந்திர்(பெண்கள்) மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி பெற்று முதலிடம் பெறுகிறது. இருபாலரும் பயிலும் மற்றொரு சேவாமந்திர் மேல் நிலைப் பள்ளி 99% தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டது. 88% தேர்ச்சி பெற்று கலிமா மெட்ரிகுலேசன் பள்ளி மூன்றாவது இடத்தையும், 79% தேர்ச்சி பெற்று அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி நான்காவது இடத்தை பெற்றுள்ளது.(கடந்த ஆண்டு 96%)

48 சதவிகிதம் தேர்ச்சி பெற்று அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது. வழமைப் போல கடைசி இடம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குதான் ஒதுக்கப்பட்டு இருக்க வேண்டும்.
ஆனால் முதற் தடவையாக +2 தேர்வுக்கு மாணவ/மாணவிகளை பயிற்றுவித்த ஆஸ்திரேலியா மெட்ரிகுலேசன் பள்ளியில் பயின்ற அனைவருமே "ஃபெயில்" ஆகியதால் 0% ரிசல்ட் வாங்கி ஆஸ்திரேலியா மெட்ரிகுலேசன் பள்ளி கடைசி இடத்தை எடுத்துக் கொண்டது. இந்தப் பள்ளியில் பயின்ற அனைவருமே கணித பாடத்தில் தேர்ச்சி பெறாமல் தவறியுள்ளனர். அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கீழ் நிலை வகுப்புகளுக்கு மட்டுமின்றி, மேல்நிலை வகுப்புகளுக்கும் ஆசிரியர் இல்லாத அவல நிலை இருக்கிறது. இந்நிலை நீடித்தால் வரும் காலங்களில் இன்னும் மோசமான தேர்ச்சி சதவிகிதமே ஆண்கள் மேல்நிலைப் பள்ளிலிருந்து வரும் என்பதாகவே கருத முடிகிறது.

3 கருத்துகள்:

  1. பெயரில்லா12 மே, 2011 அன்று 11:22 PM

    KONJA NALA MYPNO KALAI KATTUTHEY, AATCHI MATTRAM ETHUVUM YERPATTULLATHA?

    SORRY FOR THANGLISH TYPING, TAMIL TYPE EPPADI ADIPPATHU? LINK UNDA?

    பதிலளிநீக்கு
  2. //ஆனால் முதற் தடவையாக +2 தேர்வுக்கு மாணவ/மாணவிகளை பயிற்றுவித்த ஆஸ்திரேலியா மெட்ரிகுலேசன் பள்ளியில் பயின்ற அனைவருமே "ஃபெயில்" ஆகியதால் 0% ரிசல்ட் வாங்கி ஆஸ்திரேலியா மெட்ரிகுலேசன் பள்ளி கடைசி இடத்தை எடுத்துக் கொண்டது//

    உங்களுக்கு யாரோ தப்பான இன்ஃபார்மேசன் குடுத்திருக்காங்க...பாஸ்...!

    எற்கனவே ஒரு செட் அந்த ஸ்கூல்ல வாஸ் அவுட் ஆவிடுச்சி...இது சகெண்ட் வாஸ் அவுட்...!

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...