தமிழகத்தில் 9 ஊர்களில் வெள்ளிக்கிழமை வெயில் 100 டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக திருத்தணியில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் சுட்டெரித்தது. கடந்த 4-ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது முதலே தமிழகம் முழுவதும் அதிக வெப்பநிலை நிலவி வருகிறது. இதனால் மதிய வேளைகளில் சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் மக்கள் நடமாட்டம் குறையத் தொடங்கியுள்ளது.
வெப்பத்தை சமாளிக்க சாலையோர தர்பூசணி கடைகளையும், இளநீர் கடைகளையும் மக்கள் அதிக அளவு நாடி வருகிறார்கள். மாநிலத்தின் இதர முக்கிய இடங்களில் வெள்ளிக்கிழமை பதிவான வெப்பநிலை (டிகிரி ஃபாரன்ஹீட்டில்): திருநெல்வேலி, வேலூர் 105, சென்னை, நாகப்பட்டினம், காரைக்கால், பரங்கிப்பேட்டை 102, கடலூர், தஞ்சாவூர் 100, மதுரை, திருச்சி 99, கன்னியாகுமரி 97, தூத்துக்குடி, தருமபுரி 95. சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வானம் சனிக்கிழமை பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பகலில் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரியாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்று தினமணி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக