ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் கனிமொழி எம்.பி.யின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில், சம்மன் அனுப்பப்பட்டதால், கடந்த 6-ந் தேதி சி.பி.ஐ. கோர்ட்டில் கனிமொழி ஆஜரானார். அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு 20-ந் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, கனிமொழி முன்ஜாமீன் மனு மீது இன்று பிற்பகல் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று கோர்ட்டு அறிவித்தது. இந்தநிலையில் கனிமொழி ஜாமீன் மனு மீது பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மனு இன்று விசாரணைக்கு வந்தபோது கனிமொழியின் முன் ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
முன்னதாக கனிமொழி நிருபர்களிடம் கூறுகையில், "தீர்ப்புக்காக காத்து இருக்கிறேன். எது நடந்தாலும் எதிர்கொள்வேன்'' என்றார். கனிமொழி எம்.பி. முன் ஜாமீன் மனு மீது பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என்று சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி சைனி அறிவித்தார். அதன்படி 2.30 மணிக்கு நீதிபதி சைனி தீர்ப்பை வாசித்தார். கனிமொழி எம்.பி.க்கும், கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கும் முன்ஜாமீன் வழங்க இயலாது என்று தீர்ப்பளித்தார். 14 நாள் கோர்ட்டு காவலில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். முன்ஜாமீன் மறுக்கப்பட்ட காரணத்தால் கனிமொழி எம்.பி. உடனடியாக கைது செய்யப்பட்டார். சரத்குமாரும் கைது செய்யப்பட்டார். அவர்கள் இருவரையும் திகார் ஜெயிலில் அடைக்க சி.பி.ஐ. போலீசார் அழைத்துச் சென்றனர். ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நாளை மீண்டும் நடைபெற உள்ளதால் கனிமொழியை நாளை காலை 10 மணிக்கு கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி சைனி உத்தரவிட்டார்.
அடுத்தடுத்த வெள்ளிக்கிழமைகளி்ல் திமுகவிற்கு பின்னடைவு ஏற்பட்டு வருவதால், அக்கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை தமிழக சட்டசபை தேர்தல் முடிவில், பொதுமக்கள் திமுகவை தோற்கடித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாக, இந்த வெள்ளிக்கிழமை, திமுக தலைவரின் மகள் கனிமொழி கைது செய்யப்பட்டுள்ளார். இதனால், அடுத்த வெள்ளிக்கிழமை என்ன ஆகும் என்று திமுகவினர் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
திரைக்கு வந்து சில மாதங்களே ஆன மாஞ்சா வேலு திரைப்படம் காணதவறாதீர்கள்" என்று கலைஞர் டிவியில் பிளாஷ் நியூஸ் ஓடுது...ஆக ..இவனுங்களுக்கு மகள் உள்ள போனதவிட மாஞ்சாவேலு முக்கியமா போச்சு போல..ம்ம்ம். கலிகாலம்
பதிலளிநீக்குங்ணா....சூப்பர் தலைப்புங்கங்...ணா
பதிலளிநீக்குகனிமொழிக்காக ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, எல்லாத் தவறுக்கும் ராசாதான் காரணம், கனிமொழிக்குத் தொடர்பில்லை. அவர் ஒரு பெண், குழந்தைக்குத் தாய், எங்கும் ஓடி விட மாட்டார். எனவே முன்ஜாமீன் தர வேண்டும் என்று வாதிட்டார்.
பதிலளிநீக்குகனிமொழிக்காக ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, எல்லாத் தவறுக்கும் ராசாதான் காரணம், கனிமொழிக்குத் தொடர்பில்லை. அவர் ஒரு பெண், குழந்தைக்குத் தாய், எங்கும் ஓடி விட மாட்டார். எனவே முன்ஜாமீன் தர வேண்டும் என்று வாதிட்டார்.
பதிலளிநீக்குஒன்று மட்டும்தான் உண்மை. இது மீடியாவின் வெற்றி. இந்தக் கொண்டாட்டத்துக்காக நம்மை கிட்டத்தட்ட ஒரு மாதமாக தயார் படுத்திக்கொண்டிருக்கிறது மீடியா. இன்று, நாளை, அடுத்த வாரம், தேர்தல் முடிந்த பிறகு என்று கனிமொழி கைதாகப்போவதை ஒரு த்ரில்லர் கதையாக மாற்றி ஒவ்வொரு நாளும் நம்மை இருக்கை நுனிக்கு தள்ளிக்கொண்டிருந்தார்கள். தேர்தல் முடிந்து, அதிமுக வெற்றி பெற்றதும் நேற்று க்ளைமேக்ஸ் அரங்கேறிவிட்டது.
பதிலளிநீக்கு