வியாழன், 9 பிப்ரவரி, 2012

குட்டியானை - பைக் மோதல்: கோர விபத்து!

 பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை வாரச் சந்தையிலிருந்து 15-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு சின்னூர் நோக்கி சென்ற குட்டியானை என்கிற சரக்கு வாகனம் சின்னூர் சுமங்கலி திருமண மண்டபம் அருகே உள்ள திருப்பத்தில் எதிரில் டிரிபிள்ஸில் வந்த ஒரு பைக் மீது மோதியதால் நிலை தடுமாறி சாய்ந்தது. இதனால் பைக்கில் வந்த மூவர் உட்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்களை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஜமாஅத் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டனர்.
மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் சிலரை 108 அரசு ஆம்புலன்ஸ் மற்றும் ஜமாஅத் ஆம்புலன்ஸில் சிதம்பரம் மற்றும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

படங்கள்: ஜமான், முத்துராஜா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...