பரங்கிப்பேட்டை: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள கேப்டன் ஹமீது அப்துல் காதர் ஜமாஅத் நிர்வாகப் பொறுப்பை முன்னால் துணைத் தலைவர் எம்.எஸ். அலி அக்பரிடமிருந்து நேற்று முறையாக பெற்றுக் கொண்டார். எம்.இ. அஷ்ரஃப் அலி, ஏ. மெஹ்ராஜ் முன்னிலையில் , ஜமாஅத் நிர்வாக கணக்கு, வங்கியிருப்பு, முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொண்டார்.
அப்போது, முன்னாள் நிர்வாகிகளான ஓ. முஹம்மது கவுஸ், கலிக்குஜ் ஜமான், ஐ. ஹபீப் முஹம்மது, அப்துல் காதிர் உமரி, சுல்தான் அப்துல் காதர், அன்ஸாரி, ஷாஜஹான், ஹனிபா, காமில் மற்றும் எம். முராது ஆகியோர் உடனிருந்தனர். புதிய தலைவர் ஜமாஅத் பொறுப்பை ஏற்றதையடுத்து புதிய நிர்வாகிகள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக