சனி, 29 ஜூன், 2013

113 ஆண்டுகள் பழமை வாய்ந்த கும்மத்து பள்ளி இடிக்கப்பட்டது!





பரங்கிப்பேட்டை: 113 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கட்டிடமான கும்மத்து பள்ளி (அரசு துவக்கப் பள்ளி) புதிய கட்டுமானப் பணிகளுக்காக இடிக்கப்பட்டு வருகிறது. பரங்கிப்பேட்டையின் மிக பழமை வாய்ந்த கட்டிடத்தில் இயங்கி வந்த வந்த கும்மத்து பள்ளி என்கிற அரசினர் தொடக்கப் பள்ளியில் மழை காலங்களில் நீர் ஒழுகுதல், சுற்றுப்புற பகுதயிலிருந்து விஷஜந்துக்கள் நுழைவது, முக்கிய ஆவணங்கள் திருட்டு போவது என்று பல காரணங்களால் பாதுகாப்பற்ற சூழலில் இருந்து வந்தது.

இதனால் பெற்றோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து இக்கட்டிடத்தை புதுப்பிக்க கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி வழியாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கும்மத்துபள்ளி கட்டிடத்தின் அவலநிலையை எடுத்து வைக்கப்பட்டது. இதனை பரிசீலனைக்கு ஏற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் மேற்படி பள்ளிக் கட்டிடத்தை 2 மாதங்களில் கட்டி முடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனே உத்தரவிட்டார். அதன்படி, இதற்கான வேலைகள் தற்போது மும்முமாக நடைப்பெற்று வருகிறது. புதிய கட்டுமானப் பணிகளுக்காக தற்போது பழைய பள்ளிக் கட்டிடம் இடிக்கப்படுகிறது.

இப்பள்ளியின் புதிய கட்டுமானப் பணிகளுக்காக  மூன்று தொகுப்பு (Block) கட்டிடங்கள் மற்றும் மூன்று (யூனிட்) கழிப்பறைக்காக  S.S.A. எனப்படும் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் ஒரு  குறிப்பிட்ட தொகை கும்மத்பள்ளிக்காக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் ஜலீலுக்குச் சேவை விருது!

சிங்கப்பூர்: பரங்கிப்பேட்டையைச் சார்ந்த சிங்கப்பூர் தொழிலதிபரான முஹம்மது அப்துல் ஜலீல் நீண்டகால நற்சேவைக்கான விருதைப் பெற்றுள்ளார். கடந்த வாரம் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் சார்பில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் சிங்கப்பூர் அதிபர் டோனி டான் கெங் யாம் இந்த விருதினை இவருக்கு வழங்கினார்.

மினி என்வைரன்மண்ட் சர்விசஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் பென்கூலன் பள்ளிவாசலின் தலைவராகவும் பொறுப்பு வகிக்கும் அப்துல் ஜலீல் விருது பெற்ற பிறகு கூறியதாவது: "எத்தனையோ விருதுகளை நான் பெற்றிருந்த போதும் விருதுகளை எதிர் பார்த்து நான் உதவியதில்லை. ஆனால் இந்த விருது நான் எதிர்பாராத ஒன்று, எனவும் பணத்தால் மட்டுமின்றி பிறரது கவலைகளுக்குச் செவி சாய்ப்பதுடன் அதற்கேற்ற ஆலோச னைகளை வழங்குவதும் ஒரு விதத்தில் உதவிதான், மற்றவர்களுக்கு உதவும் பக்குவத்தைத்  எளிதில் கற்றுக் கொள்வதற்கு சிரமங்களுடன் வளர்ந்ததே முக்கிய காரணம்" என்றார்.

வெள்ளி, 28 ஜூன், 2013

மீராப்பள்ளி பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு!











பரங்கிப்பேட்டை: ஏற்கனவே அறிவித்தது போன்று ஜாமிஆ மஸ்ஜித்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்து இன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு தமிழக அரசின் வக்ஃப் கண்காணிப்பாளர் முன்னிலையில்பொதுக்குழு நடைபெற்றது. இப்பொதுக் குழுக் கூட்டம்  நடைபெற உள்ளது.

பரபரப்புக்கிடையே கூடிய இப்பொதுக் குழு கூட்டத்தில், ஜாமிஆ மஸ்ஜித் புதிய நிர்வாகிகளாக கீழ்கண்ட நிர்வாகிகள் அறிவிக்கப்ட்டனர்.

கே. ஷேக் அப்துல் காதர் மரைக்காயர்
ஐ. இஸ்மாயில் மரைக்காயர்
ஓ. ஜமால் முஹம்மது மரைக்காயர்
எம்.எஸ். அலி அக்பர்
நெய்னா மரைக்காயர்



வியாழன், 27 ஜூன், 2013

மாநிலங்களவை தேர்தல்

மாநிலங்களவைக்கு தமிழகத்தில் இருந்து ஆறு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 17 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் இன்று நடைப்பெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 4 பேர் மற்றும் அ.தி.மு.க. ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் டி.ராஜாவின் வெற்றி ஏற்கனவே உறுதியாகி இருந்த நிலையில், தி.மு.க. மற்றும் தே.மு.திக. வேட்பாளர்களுக்கு இடையேதான் போட்டி நிலவி வந்தது. 

இதனிடையே, தேர்தல் அதிகாரியும், சட்டப்பேரவை செயலருமான ஜமாலுதீன் முன்னிலையில் வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. சட்டமன்றத்தில் 2 உறுப்பினர்களை கொண்டுள்ள புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தனர். 5 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸும் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தது. இதனால் கனிமொழிக்கு 32 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது.



புதன், 26 ஜூன், 2013

புரவலர் சேர்ப்பு & ஆண்டு மலர் வெளியீடு

பரங்கிப்பேட்டையில் பல்லாண்டுகளாக சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் அரசு கிளை நூலகம் புரவலர் சேர்ப்பு மற்றும் ஆண்டு மலர் வெளியீடு திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக நூலகப் பொறுப்பாளரும், நூலக வாசகர் வட்ட செயலாளருமான பா. உத்திராபதி தெரிவித்துள்ளார்.
 
அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நூலகரை தொடர்பு கொண்டால் மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.
தகவல்: ஜெம் மீரான்

கூகுள் ஆய்வுக்கட்டுரை போட்டி: சிதம்பரம் மாணவி சாதனை

சிதம்பரம்: உலக அளவிலான "கூகுள்' இணையதளம் நடத்திய  "அறிவியல் போட்டி 2013' என்கிற ஆய்வுக் கட்டுரைப் போட்டியில், சிதம்பரம் மாணவி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
கூகுள் இணையதள நிறுவனம், மாணவர்களிடம், அறிவியல் படைப்பாற்றலை வளர்க்கும் வகையில், உலக அளவிலான, அறிவியல் போட்டி, 2013 ஐ, நடத்தியது. இதில், மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டு, அதன் முடிவுகளை சுருக்கமாக எழுதி, ஆய்வு கட்டுரையாக சமர்ப்பிக்க வேண்டும்.

இதில், 120 நாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், 1,000க்கும் மேற்பட்டோர், ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில், 13-14 வயது பிரிவில் பங்கேற்ற, சிதம்பரம் மாணவி சாம்பவி, நுண் கிருமிகளை பயன்படுத்தி, தொழிற்சாலைக் கழிவுகளில் இருந்து, மின்சாரம் தயாரிக்கும் உபகரணத்தை வடிவமைத்து, சிறிய அளவில் மின்சாரம் தயாரித்து, அதன் அடிப்படையில், ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தார்.

இந்த ஆய்வை மேம்படுத்தினால், பெரிய அளவில் மின்சாரம் தயாரிக்க, சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், தொழிற்சாலை கழிவுநீரை பயன்படுத்துவதன் மூலம், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும் எனவும், தெரிவித்துள்ளார். கூகுள் நிறுவனம், 90 பேரின் ஆய்வு கட்டுரைகளை தேர்வு செய்துள்ளது. இதில், சிதம்பரம் மாணவி சாம்பவியின் கட்டுரையும், தேர்வு செய்யப்பட்டுள்ளது. இக்கட்டுரைகளில், அமெரிக்காவின் இயற்கை பதிப்புக்குழு, 15 வெற்றியாளர்களை தேர்வு செய்துள்ளது. இதிலும், மாணவி சாம்பவியின் ஆய்வுக் கட்டுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில், வெற்றி பெற்றுள்ள, 14 வயதுடையற மாணவி சாம்பவி, கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்த, சம்பத் - முல்லை தம்பதியரின் மகளாவார். இவரது தந்தை, அண்ணாமலை பல்கலையில், பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாய், அதே பல்கலையில், பேராசிரியராக பணிபுரிகிறார். சாம்பவி, காஞ்சிபுரம் மகரிஷி பன்னாட்டு உறைவிடப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

செவ்வாய், 25 ஜூன், 2013

மீராப்பள்ளி புதிய நிர்வாகம் குறித்து கூடுகிறது பொதுக்குழு! வக்ஃப் கண்காணிப்பாளர் வருகை!!

பரங்கிப்பேட்டை: ஜாமிஆ மஸ்ஜித்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்து எதிர்வரும் வெள்ளியன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு பொதுக்குழு நடைபெற உள்ளது. இப்பொதுக் குழுக் கூட்டம் தமிழக அரசின் வக்ஃப் கண்காணிப்பாளர் முன்னிலையில் நடைபெற உள்ளது.

இதற்கான அறிவிப்பை மீராப்பள்ளி நிர்வாகம் முறைப்படி அறிவித்துள்ளது. அதன்படி மேற்படி முஸ்லிம் பொதுமக்களை பொதுக்குழுவில் கலந்துக் கொள்ளவும் மீராப்பள்ளி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

CBSE தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பரங்கிப்பேட்டை மாணவிக்கு தங்கப் பதக்கம்!

தம்மாம்: இந்திய பன்னாட்டு பள்ளியில் 10-ம் வகுப்பு சிபிஎஸ்இ (CBSE) தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று 10CGPA அவார்டு வின்னராக தேர்ந்தெடுக்ப்பட்ட பரங்கிப்பேட்டை மாணவி ஷிஃபா காஜா முஹையத்தீனுக்கு தங்க பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சவூதி அரேபிய தம்மாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இம்மாணவிக்கு தங்கப்பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

அதே போன்று இம்மாணவியின் சகோதரர் மெஹ்மூத் காஜா முஹையத்தீன் 7-ம் வகுப்பு சிபிஎஸ்இ (CBSE) டேலன்ட் சர்ச் (Talent search) தேர்வில் 80%  அதிகமான மதிப்பெண்கள் பெற்றதற்காக  வழங்க்ப்பட்டது.

மாணவர்களின் சார்பாக சான்றிதழ் மற்றும் பரிசுகளை இந்தய துணை தூதரக அதிகாரி சிபி ஜார்ஜ் இவர்களது தந்தை காஜா முஹையத்தீனிடம் வழங்கினார்.

பழைய ஆம்புலன்ஸை புதுப்பிக்க ஜமாஅத்துக்கு PIA கோரிக்கை!



ரியாத்: ரியாத் வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்களின் கூட்டமைப்பான பரங்கிப்பேட்டை இஸ்லாமிய அசோசியேஷன் (PIA)-வின் மாதந்திரக் கூட்டம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைப்பெற்றது.

செயலாளர் எஸ். நகுதாவின் வேண்டுகோளை ஏற்று அவருக்கு பதிலாக ஆர். தமிஜுத்தீன் புதிய செயலாளராகவும், ஐ. சாகுல் ஹமீது து. செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர். மேலும் பொருளாளராக செயல்பட்டு வந்த என். அஷ்ரப் அலியின் பொறுப்பை ஹெச். முஹம்மது ஹுசைன் பெற்றுக்க கொண்டார்.

இக்கூட்டத்தில் பரங்கிப்பேட்டை தனியார் பள்ளி ஒன்றில் சில மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ்கள் வழங்கியதைக் கண்டித்தும், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்திற்கு புதிய ஆம்புலன்ஸ் வாங்குவது குறித்த ஜமாஅத்தின் அறிவிப்பிற்கு ஏற்கனவே உபயோகத்தில் இருக்கும் இரண்டு பழைய ஆம்புலன்ஸ் வாகனங்களை புதுப்பித்து அதைனையே பயன்படுத்திக் கொள்ள ஜமாஅத்தை கோரியும், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட  பரங்கிப்பேட்டை பள்ளிகளில் அதிக கட்டணம் வாங்கப்படுகிறது என்கிற பொது மக்களின் கோரிக்கையை ஜமாஅத் பரிசீலிக்க கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சனி, 22 ஜூன், 2013

ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா (படங்கள்)












பரங்கிப்பேட்டை: அல்மதரஸத்துல் மஹ்மூதிய்யா அரபிக் கல்லூரியில் திருக்குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிழ்களுக்கு பட்டமளிப்பு விழா மீராப்பள்ளியில் நடைப்பெற்றது. ஜமாஅத் தலைவர்கள்ஈ மார்க்க அறிஞர்கள் பங்கு பெற்ற இந்நிகழ்ச்சியின் விபரங்கள்... விரைவில்....

படங்கள்: கிங் காலித்

கவுஸ் பள்ளி குளம் தூர்..! (படங்கள்)














பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பள்ளிவாசல்களில் ஏற்பட்டுள்ள பசுமை புரட்சயின் காரணமாக பரங்கிப்பேட்டையின முக்கிய நீர் நிலைகளான பள்ளிவாசல் குளங்கள் தற்போது தூர் வாரப்பட்டுவருகின்றன. கிலுர்நபி பள்ளி குளம், மக்தூம் அப்பாப் பள்ளி (பக்கீம்ஜாத்) குளத்தையடுத்து தற்போது கவுஸ் பள்ளி குளம் தூர் வாரப்பட்டுள்ளது.

முன்னதாக இயற்கை விவசாயம் முறையில் காய்கறி பயிடுவதற்காகவும் மரங்கள் வளர்ப்பதற்கும் கவுஸ் பள்ளி வளாகத்தை சுற்றி நிலம் செப்பணிடப்பட்டுள்ளது. இதற்காக கவுஸ்பள்ளி முஹல்லா இளைஞர்கள் பொருளாதார உதவி அளித்துள்ளனர்.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...