பரங்கிப்பேட்டை: 113 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கட்டிடமான கும்மத்து பள்ளி (அரசு துவக்கப் பள்ளி) புதிய கட்டுமானப் பணிகளுக்காக இடிக்கப்பட்டு வருகிறது. பரங்கிப்பேட்டையின் மிக பழமை வாய்ந்த கட்டிடத்தில் இயங்கி வந்த வந்த கும்மத்து பள்ளி என்கிற அரசினர் தொடக்கப் பள்ளியில் மழை காலங்களில் நீர் ஒழுகுதல், சுற்றுப்புற பகுதயிலிருந்து விஷஜந்துக்கள் நுழைவது, முக்கிய ஆவணங்கள் திருட்டு போவது என்று பல காரணங்களால் பாதுகாப்பற்ற சூழலில் இருந்து வந்தது.
இதனால் பெற்றோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து இக்கட்டிடத்தை புதுப்பிக்க கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி வழியாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கும்மத்துபள்ளி கட்டிடத்தின் அவலநிலையை எடுத்து வைக்கப்பட்டது. இதனை பரிசீலனைக்கு ஏற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் மேற்படி பள்ளிக் கட்டிடத்தை 2 மாதங்களில் கட்டி முடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனே உத்தரவிட்டார். அதன்படி, இதற்கான வேலைகள் தற்போது மும்முமாக நடைப்பெற்று வருகிறது. புதிய கட்டுமானப் பணிகளுக்காக தற்போது பழைய பள்ளிக் கட்டிடம் இடிக்கப்படுகிறது.
இப்பள்ளியின் புதிய கட்டுமானப் பணிகளுக்காக மூன்று தொகுப்பு (Block) கட்டிடங்கள் மற்றும் மூன்று (யூனிட்) கழிப்பறைக்காக S.S.A. எனப்படும் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் ஒரு குறிப்பிட்ட தொகை கும்மத்பள்ளிக்காக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக