பரங்கிப்பேட்டை: கிரசண்ட் நல்வாழ்வு சங்கம் (CWO) சார்பில் ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் நோன்பு திறக்கும் (இஃப்தார்) நிகழ்ச்சி பள்ளிவாசல்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் பரங்கிப்பேட்டை பள்ளிவாசல்களில் நோன்பு திறப்பின் போது, பழம்ங்கள், குளிர்பானம் உள்ளிட்ட உணவு வகைகளை நோன்பாளிகளுக்கு வழங்கினர். இச்சங்கம் ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதன் மூத்த மற்றும் முன்னாள் நிர்வாகிகள் ஒருங்கிணைத்து, CWO வளர்ச்சி குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் இதற்காக அனைத்து உறுப்பினர்களையும் அன்புடன் அழைப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து கலந்தாலோசனை செய்வதற்காக எதிர்வரும் புதன்கிழமை 7-ம் தேதியன்று: அசர் தொழுகைக்கு பின் இப்தார் வரை மினி ஷாதி மஹால் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது. குறித்து விபரம் அறிய முஹம்மது காலித் (9994106609), வஜ'ஹுத்தீன் (9994133741), அபுல்ஹசன் (8220702442) ஆகியோரை முன்னாள் மற்றும் தற்போதைய உறுப்பினர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக