கூட்டத்தில் கிரஸண்ட் நல்வாழ்வு சங்கத்தின் நிறுவனர்கள் வஜ்ஹுதின், அபுல்ஹஸன், முன்னாள் நிர்வாகிகள் அன்வர் ஹஸன், ரியாஸ் அஹமது, கவுஸ் ஹமீது, ஹமீது மரைக்காயர், பொறியாளர் சாஹுல் ஹமீது, தாரிக் ஹுஸைன் ஹம்துன் அப்பாஸ் உள்ளிட்டோர் கிரஸண்ட் நல்வாழ்வு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஜமாஅத் தலைவர் கேப்டன் எம்.ஹமீது அப்துல் காதர் சிறிது நேரம் உரையாற்றினார் .
நோன்பு துறக்கும் நிகழ்ச்சிக்கு பிறகு நடைபெற்ற நிர்வாகிகள் அமர்வில் மீ.மெ.சபீக் அஹமது கிரஸண்ட் நல்வாழ்வு சங்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காலித், ஜெய்னுல்லாபுதீன் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக