பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவரும், கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவரும், பரங்கிப்பேட்டை ஐக்கிய ஜமாஅத்தின் செயல் தலைவருமான முனைவர் ஹாஜி எம்.எஸ். முஹம்மது யூனுஸ் தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவம் செய்யப்பட்டது.
கடந்த வாரம் திருச்சியில் தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஏற்பாடு செய்த இளம்பிறை எழுச்சிப் பேரணி மற்றும் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு நிகழ்ச்சிகளுக்கு பரங்கிப்பேட்டையிலிருந்து வருகை தந்ததுடன் இந்த கவுரவிப்பு நிகழ்ச்சியையும் நடத்தினார்கள். சமூக, அரசியல் நிலவரங்கள் குறித்தும் கலந்துரையாடினர்.
இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் லீக் கட்சியின் பரங்கிப்பேட்டை நகர தலைவர் பஷீர் அஹ்மது, எஸ்.எஸ். அலாவுதீன், மீ.மெ. மீரா ஹூஸைன், ஜே. உதுமான் அலீ மற்றும் முஸ்தஃபா கமால் ஆகியோர் கலந்து கொண்டனர். சந்திப்பு ஏற்பாடுகளை MYPNO ஆசிரியர் கலீல் பாகவீ செய்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக