சனி, 31 ஜனவரி, 2015

திருக்குர்ஆன் பாடம் துவங்கும் நிகழ்ச்சி

பரங்கிப்பேட்டை காதிரிய்யா பள்ளிவாசலின் திருக்குர்ஆன் மதரஸாவில் குர்ஆன் பாடம் துவங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

பரங்கிப்பேட்டையின் புதிய ஜும்ஆ பள்ளியான ஹக்கா ஸாஹிப் தெரு காதிரிய்யா பள்ளிவாசலில் அல் மதரஸத்துல் காதிரிய்யா தீனியாத் மக்தப் மதரஸா செயல்பட்டு வருகிறது. இம்மதரஸாவில் 170 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில் 53 மாணவ, மாணவியர் ஆரம்ப நிலை பாடங்களை முடித்து விட்டு திருக்குர்ஆன் பாடத்தை தொடங்கும் நிகழ்ச்சி இன்று அப்பள்ளிவாசலில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் சென்னை வடபழனி ஹக்கானி மஸ்ஜித் தலைமை இமாம் மவ்லவீ ஜி.எம். தர்வேஷ் ரஷாதி, தீனியாத் மக்தப் கண்காணிப்பாளர்கள் மவ்லவீ எஸ். முஹம்மது இஸ்மாயீல் காஷிஃபி மற்றும் மவ்லவீ ஏ. அமானுல்லாஹ் மழாஹிரி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மதரஸா மாணவ மாணவியரின் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 

பேரூராட்சி மன்ற தலைவர் ஹாஜி எம். எஸ். முஹம்மது யூனுஸ், தவ்லத் நிஸா மகளிர் மதரஸா நிர்வாகி எஸ்.ஓ. செய்யது ஆரிஃப் மற்றும் மௌலவிகள் ஹச். அப்துஸ் ஸமது ரஷாதி, யு. நூருல்லாஹ் பாகவீ,  முஹம்மது யூசுஃப் காஷிஃபி, எஸ். கௌஸ் முஹ்யத்தீன் மன்பயீ, எம்.எஸ். அஹ்மத் கபீர் காஷிஃபி, துணை காஜி ஏ. லியாகத் அலி மன்பயீ உட்பட உலமாக்கள், முக்கிய பிரமுகர்கள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டு மாணவர்களை உச்சாகப்படுத்தினர். 

படங்கள்: ஷேக் ஆதம் மழாஹிரி

புதன், 28 ஜனவரி, 2015

நாளை நமதூரிலும் இந்த நிலை வர வேண்டுமா?

வீதிக்கு வீதி மதுக் கடைகளைத் திறந்து வைத்தவர்கள் இந்தப் புகைப்படத்தைத் தவறாமல் பார்க்க வேண்டும்!
வீதிக்கு வீதி மதுக் கடைகளைத் திறந்து வைத்தவர்கள் இந்தப் புகைப்படங்களைத் தவறாமல் பார்க்க வேண்டும்!
 
கரூர் பேருந்து நிலையம் அருகே நல்ல குடிபோதையில் வந்த பள்ளிக் கூட மாணவர் ஒருவர், போதையின் தாக்கம் தாங்க முடியாமல் மயங்கி விழுந்தது பொதுமக்கள் அனைவரையும் அதிர வைத்தது.

கருரை அடுத்த வெங்கமேடு பகுதியை சார்ந்த ஒரு ஆட்டோ டிரைவரின் மகன் ராஜேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது - வயது 17). கரூரில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் +2 பயின்று வருகிறார். இதே பள்ளியில் +1 பயிலும் இவரது ந்ண்பர்கள் இருவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். போதையின் உச்சத்திற்க்கு வந்த மாணவர்கள் சாலையை கடந்து பேருந்து நிலையத்திற்க்கு செல்ல முயன்றுள்ளனர். நண்பர்கள் இருவரும் கடந்து சென்ற நிலையில் போதையின் உச்சத்தில் இருந்த ராஜேஷ் திடீரென மயங்கி பேருந்து நிலைய நுழைவாயில் அருகே விழுந்தார். இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பள்ளி சீருடையிலேயே பட்டப்பகலில் மது அருந்தி பாதை தவறி செல்லும் மாணவனை கண்ட பொதுமக்க்ள் மயங்கி கிடந்த மாணவனை எழுப்ப முயன்றனர். இதனிடையே அவனது நண்பர்கள் பெற்றோருக்கு தகவல் அளித்ததன் பேரில் அவரது பெற்றோர் மாணவனை அழைத்து சென்றனர். பள்ளி சீருடையில் பட்டப்பகலில் மது போதையில் மயங்கி விழுந்த விவகாரம் கரூரில் பெற்றோர்களை கதிகலங்க செய்துள்ளது. இந்த மாணவனின் புகைப்படத்தை சமூகத்தை சீரழிக்கும் மதுவையும், அதன் கடைகளையும் ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி அறிமுகம் செய்து திறந்து வைத்தவர்கள் பார்த்தால் நலமாக இருக்கும்!

வீதிக்கு வீதி மதுக் கடைகளைத் திறந்து வைத்தவர்கள் இந்தப் புகைப்படத்தைத் தவறாமல் பார்க்க வேண்டும்!
நாளை நமதூரிலும் இந்த நிலை வர வேண்டுமா?
 
பரங்கிப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் உள்ள டாஸ்மாக் சாராய கடையை அகற்ற பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு நமது MYPNO ஆசிரியர் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ வைத்த கோரிக்கை....

"பரங்கிபேட்டை பஸ்நிலையம் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடை பொதுமக்களுக்கு பல வகையிலும் இடையூறாக உள்ளது. 

அதன் சுற்றுப்புறத்தில் கோவில், மசூதி, காவல் நிலையம், நீதிமன்றம், சிறைச்சாலை, குடியிருப்புகள் மற்றும் கடைகள் என பல்வேறு தரப்பு மக்களும் வந்துச் செல்லும் இடமாக உள்ளது. 

குடிகாரர்களின் பிரச்சினையால் பேருந்துக்கு காத்துக் கிடக்கும் பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் உட்பட பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும், துன்பத்திற்கும் ஆளாகின்றனர்.

எனவே, பரங்கிப்பேட்டையில் சாராய கடைகள் இல்லாத நகரமாக மாற்றி அமைக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்."

அதற்கு பொறுப்பான(!) முறையில் பதில் அளித்த கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர்...
Inline image 1
TASMAC shops at Parangipettai were located as per Govt norms. 
There is no Temple and Educational institutes near TASMAC shops. 
Letter No RV6/2416/2014 dated 30.12.2014. 
District Manager, TASMAC, Cuddalore

அப்படி என்றால்... "அங்குள்ள பள்ளிவாசல் வழிப்பாட்டுத்தளம் கிடையாது. பொதுமக்களுக்கு எத்தனை இடையூறுகள் ஏற்பட்டாலும் கவலையில்லை" என்ற மெத்தனப் போக்கு இந்த பதிலில் உள்ளது.

எப்படி அந்த கடையை அகற்றுவது? பதில் சொல்லுங்களேன்....

செவ்வாய், 27 ஜனவரி, 2015

வண்டிக்காரத்தெரு பெண்கள் பள்ளி கட்டிடம் குறித்து...

வண்டிக்காரத் தெருவில் உள்ள பழைய அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டிடங்கள் கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல், செடிகள் முளைத்து சேதமடைந்து வருகிறது.
 
சுனாமியின்போது பரங்கிப்பேட்டை பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டதால் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் பல்வேறு உதவிகளை செய்தன. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட வந்த ராஜஸ்தான் அரசு அதிகாரிகள், பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவில் புதிதாக அரசு மருத்துவமனை மற்றும் பள்ளி கட்டிடம் கட்டிக் கொடுத்தனர். புதுச்சத்திரம் சாலையில் ராஜஸ்தான் அரசு கட்டிக்கொடுத்த புதிய கட்டிடத்திற்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாற்றப்பட்டது. இதனையடுத்து வண்டிக்கார தெருவில் இயங்கிய அரசு பெண்கள் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கிய இடத்திற்கு மாற்றப்பட்டது. அதனால், வண்டிக்கார தெருவில் இயங்கிய அரசு பெண்கள் பள்ளி கட்டிடங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன.
 
இதுகுறித்த புகாரின்பேரில், அப்போதைய கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திர ரத்னு வண்டிக்கார தெருவில் உள்ள அரசு பெண்கள் பள்ளியை நேரில் பார்வையிட்டார். பயன்படுத்தாமல் உள்ள ஐந்து கட்டிடங்களில், வருவாய் அலுவலகம், சம்மந்தத்தில் உள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் மற்றும் வாடகை கட்டடங்களில் இயங்கி வந்த மின்சார அலுவலகம், நூலகம் உள்ளிட்ட அலுவலங்கள் ஒரே இடத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் மாறுதலாகி சென்ற பிறகு, அதிகாரிகள் அந்த திட்டத்தை கண்டுகொள்ள வில்லை. தற்போது அங்கு நூலகம் மட்டும் ஒரு பகுதியில் இயங்கி வருகின்றது.
 
இது குறித்த செய்திகள் நமது MYPNOல் பல முறை இடம் பெற்றுள்ளன.

இதன் தொடர்ச்சியாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு நமது MYPNOன் ஆசிரியர் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ  கோரிக்கை வைத்ததன் பதிலாக கீழ்க்கண்ட செய்தி அரசிடமிருந்து கிடைக்கப் பெற்றது.

சனி, 24 ஜனவரி, 2015

குவைத்தில் நடைபெற்ற 10ம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) விழா!

குவைத்தில் நடைபெற்ற 10ம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) விழா!
தமிழக ஆலிம்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு!!
ஏறக்குறைய 5,000 சகோதர, சகோதரிகள் பங்கேற்றனர்!!!
குவைத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்)ஏற்பாடு செய்த 10ம் ஆண்டு ஐம்பெரும் மீலாது விழா நிகழ்ச்சிகள் அச்சங்கத்தின் தலைவர்மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா பாகவீ அவர்களின் தலைமையில் ஜனவரி 1, 2015 அன்று குவைத்தில் உள்ள ஃகைத்தான் தமிழ் பள்ளிவாசலில் தொடங்கியது. வெள்ளிக்கிழமை (02.01.2015) அன்று குவைத் சிட்டி பகுதியில் உள்ள பெரிய பள்ளிவாசலான மஸ்ஜிதுல் கபீர்பெரிய கூடாரத்தில் நடைபெற்றது.  சனிக்கிழமை (03.01.2015) அன்று ஃபஹாஹீல் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் நிறைவு விழா நடைபெற்றது.  அனைத்து நிகழ்ச்சிகளையும் செயலாளர் மல்வலீ அ.பா. கலீல் அஹ்மது பாகவீ ஒருங்கிணைப்பு செய்தார்.
இந்நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லவீ ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹிதமிழக அரபிக்கல்லூரிகள் கூட்மைப்பின் தலைவர் மவ்லவீஓ.எம். அப்துல் காதிர் பாகவீவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர்.
அவ்விழாவில் குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் சார்பில் அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி அவர்களுக்கு ‘நபிமொழிக் களஞ்சியம்’, அப்துல் காதர் பாகவீ அவர்களுக்கு ‘சொற்பொழிவுத் திலகம்’, திருமாவளவன் அவர்களுக்கு ‘நல்லிணக்க நட்சத்திரம்’ மற்றும் ஆளுர் ஷா நவாஸ் அவர்களுக்கு ‘ஆவணப்பட ஆளுநர்’ விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் குவைத் இஸ்லாமிய சங்கத்தின் 10ம் ஆண்டு சிறப்பு மலர்மா மனிதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வரலாற்று அட்டவணை மற்றும் 2015ம் ஆண்டு வருட நாட்காட்டி ஆகியவை வெளியிடப்பட்டன. ‘வாழ்நாள் சமூக சேவையாளர்’ விருதினை டெல்லி பாஷா (எ) அப்துல் காதர் பெற்றுக்கொண்டார்.
மாநாட்டு உரையில் தொல். திருமாவளவன், ‘இந்து மதம் தீண்டத்தகாதோர் என்று எங்களை தள்ளி வைக்கிறது; கோயில்களில் வழிபாடு நடத்த அனுமதிக்க மறுக்கிறது; சமூகத்தில் எங்களை புறக்கணிக்கிறது; எங்கள் உரிமைகளை மறுக்கிறது; ஆனால், இஸ்லாம் எங்களை கட்டித் தழுவுகிறது;மசூதிக்குள் எங்களை அனுமதிக்கிறது; ஒன்றாகச் சேர்ந்து வழிபாடு நடத்த ஆர்வமூட்டுகிறது;முஸ்லிமாக பிறந்த ஒவ்வொருக்கும் உள்ள அனைத்து உரிமைகளையும் எங்களுக்கும் வழங்குகிறது;ஆகவே, இஸ்லாம் என்னை ஈர்க்கிறது; ஆனால், இந்து மதம் என்னை ஈர்க்கவில்லை; இஸ்லாம் ஒரு மதம் அல்ல மாறாக அது ஒரு மார்க்கம் - வாழ்க்கைப் பாதை என்று குறிப்பிட்டார்.
மூன்று நாட்கள் நான்கு இடங்களில் தொடராக நடைபெற்ற நிகழ்ச்சிகளில் குவைத்தில் வசித்து வரும் சுமார் 5,000 (ஜயாயிரம்) நபர்கள் வரை கலந்து கொண்டனர். அனைவருக்கும் வெளியீடுகள் அனைத்தும், இரவு உணவுகளும் வழங்கப்பட்டன. குவைத் சிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவரை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு தமிழகத்தில் ஒரு வீட்டு மனை இலவசமாக வழங்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------------
தகவல் தொடர்பு & ஊடகப் பிரிவு,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
குவைத்.

துரித சேவை / வாட்ஸ்அப் / வைபர் /  டெலிகிராம் / அலைபேசி: (+965) 97 87 24 82
மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic1427@gmail.com
இணையதளம்: www.k-tic.com
யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
முகநூல் (Facebook) பக்கம் : https://www.facebook.com/q8tic
முகநூல் (Facebook) குழுமம் : https://www.facebook.com/groups/q8tic
நேரலை (Ustream) : http://www.ustream.tv/channel/ktic-live
ஒலி/ஒளிப் பெட்டகம் (Youtube) : www.youtube.com/user/Ktic12

புதன், 14 ஜனவரி, 2015

குவைத்தில் நடைபெற்ற காயிதே மில்லத் ஆவணப்பட வெளியீட்டு விழா

கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களின் வரலாற்றை விளக்கும் ஆவணப்பட வெளியீட்டு விழா குவைத்தில் எழுச்சியோடும், சிறப்போடும் நடைபெற்றது. கடந்த 08.01.2015 அன்று குவைத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்)இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. முஸ்லிம் லீக் பதிப்பகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள காயிதே மில்லத் ஆவணப்படத்தை ஆளூர் ஷா நவாஸ் இயக்கியுள்ளார்.

ஆளூர் ஷா நவாஸ் அவர்கள் முதன் முறையாக குவைத் வந்தபோது ‘இளம் ஊடகப் போராளி’என்ற விருதையும், 10ம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) விழாவில் ‘ஆவணப்பட ஆளுநர்' என்ற விருதையும் வழங்கி குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் சிறப்பித்துள்ளது.

அச்சங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா பாகவீ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வெளியீட்டு விழாவில் இந்திய குவைத் நட்புறவு மன்றம், குவைத் கேரள ஃபிரண்ஷிப் சொஸைட்டி, முஸ்லிம் கலாச்சார மையம், குவைத் விடுதலை சிறுத்தைகள் கட்சி, குவைத் தமிழோசை கவிஞர் மன்றம், இஸ்லாமிய வழிகாட்டி மையம், தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர்.

இந்த ஆவணப்படத்தை குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) வெளியிடுவதற்கான காரணங்களையும், அவசியத்தையும், காயிதே மில்லத் அவர்களின் வரலாறு குவைத் வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற பேராவலை நிறைவேற்றுவதற்காக சங்கம் பாடுபடுவதையும் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் பட வெளியீட்டிற்கு முன், சிறப்புரையாற்றிய ஆளூர் ஷாநவாஸ் தன்னுடைய உரையில், இப்படம் வெளியாக தான் பட்ட கஷ்டங்களை விவரித்தார். மேலும் பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்டோரின் வாழ்வை விளக்கும் படங்கள் உள்ளபோது காயிதே மில்லத்துக்கென்று ஆவணங்கள் ஏதும் இல்லாததே தாம் இப்படம் எடுக்க உந்து சக்தியாக இருந்தது என்றார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டு மொத்த இந்தியாவும் காவிக்கு சிவப்பு கம்பளம் விரித்தபோது தமிழகம் மட்டும் விதிவிலக்காக இருந்ததற்கு பெரியார் பிறந்த மண் என்பது மட்டும் மாத்திரமல்ல, காயிதே மில்லத் போன்றோர்கள் பிற சமய, அரசியல் தலைவர்களோடு நெருங்கி பழகியதோடு அவர்கள் மூலம் இஸ்லாத்தை பேச வைத்ததும் காரணம் என்றார். அண்ணா, பெரியார், ராஜாஜி, மபொசி என எல்லோருடனும் அன்பாகவும் கண்ணியமாகவும் நடத்தப்பட்ட காயிதே மில்லத்தின் வரலாறு இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம் என்று கூறினார்.

குவைத்தில் இயங்கும் அனைத்து அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், சமூக சேவகர்கள், சமுதாய ஆர்வலர்கள் முன்னிலை வகிக்க கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் ஆவணப்பட குறுந்தகடை ஆளூர் ஷா நவாஸ் வெளியிட, குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் தலைவர்மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா பாகவீ பெற்று கொண்டார். பின் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

நிகழ்ச்சியை பொதுச்செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மது பாகவீ ஒருங்கிணைப்பு செய்தார். துணைத்தலைவர் மவ்லவீ எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். இணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.எஸ். அப்துல் நாஸர் வரவேற்புரையாற்ற, இணைப் பொருளாளர் ஹச். முஹம்மது நாஸர் நன்றியுரையாற்றினார்.

குவைத்தில் இயங்கி வரும் பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளும்சகோதர சமுதாய பெருமக்களும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் திரளாக பங்கேற்றனர். அனைவருக்கும் இந்த குறுந்தகடுகள் இலவசமாக வழங்கப்பட்டன. துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

திங்கள், 12 ஜனவரி, 2015

Follow-up: 'வழி பரங்கிப்பேட்டை' (!?)

சிதம்பரம் - கடலூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் புவனகிரி வழியாக செல்லாமல் புறவழிச்சாலை வழியாக செல்வதால் புவனகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பிலும் சிதம்பரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளருக்கு கோரிக்கை வைத்தனர். அதனைத்தொடர்ந்து நேற்று காலை சிதம்பரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சத்தியமூர்த்தி, புவனகிரி பாலம் முகப்பில் முகாமிட்டு, அந்த வழியாக வந்த சிதம்பரம் - கடலூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களின் முன்பக்க கண்ணாடியில் 'வழி புவனகிரி' எனும் ஸ்டிக்கர் ஒட்டினார்.

இதுபோன்று பரங்கிப்பேட்டை வழியாக செல்லும் பேருந்துகள் 'வழி பரங்கிப்பேட்டை' என்று பெயர்ப்பலகை வைப்பதுமில்லை.  பயணிகள் விசாரித்தாலும் இது நேர்வழி என்று சொல்லி ஏமாற்றிக ஏற்றிக் கொள்கின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? சிதம்பரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் 'வழி பரங்கிப்பேட்டை' என்று ஸ்டிக்கர் ஒட்ட முயற்சி எடுப்பாரா?
இதுகுறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தோம். பார்க்க: 'வழி பரங்கிப்பேட்டை' (!?)
இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலரிடமிருந்து வந்த பதில்....

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...