வண்டிக்காரத் தெருவில் உள்ள பழைய அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டிடங்கள் கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல், செடிகள் முளைத்து சேதமடைந்து வருகிறது.
சுனாமியின்போது பரங்கிப்பேட்டை பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டதால் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் பல்வேறு உதவிகளை செய்தன. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட வந்த ராஜஸ்தான் அரசு அதிகாரிகள், பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவில் புதிதாக அரசு மருத்துவமனை மற்றும் பள்ளி கட்டிடம் கட்டிக் கொடுத்தனர். புதுச்சத்திரம் சாலையில் ராஜஸ்தான் அரசு கட்டிக்கொடுத்த புதிய கட்டிடத்திற்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாற்றப்பட்டது. இதனையடுத்து வண்டிக்கார தெருவில் இயங்கிய அரசு பெண்கள் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கிய இடத்திற்கு மாற்றப்பட்டது. அதனால், வண்டிக்கார தெருவில் இயங்கிய அரசு பெண்கள் பள்ளி கட்டிடங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன.
இதுகுறித்த புகாரின்பேரில், அப்போதைய கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திர ரத்னு வண்டிக்கார தெருவில் உள்ள அரசு பெண்கள் பள்ளியை நேரில் பார்வையிட்டார். பயன்படுத்தாமல் உள்ள ஐந்து கட்டிடங்களில், வருவாய் அலுவலகம், சம்மந்தத்தில் உள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் மற்றும் வாடகை கட்டடங்களில் இயங்கி வந்த மின்சார அலுவலகம், நூலகம் உள்ளிட்ட அலுவலங்கள் ஒரே இடத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் மாறுதலாகி சென்ற பிறகு, அதிகாரிகள் அந்த திட்டத்தை கண்டுகொள்ள வில்லை. தற்போது அங்கு நூலகம் மட்டும் ஒரு பகுதியில் இயங்கி வருகின்றது.
இது குறித்த செய்திகள் நமது MYPNOல் பல முறை இடம் பெற்றுள்ளன.
இதன் தொடர்ச்சியாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு நமது MYPNOன் ஆசிரியர் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ கோரிக்கை வைத்ததன் பதிலாக கீழ்க்கண்ட செய்தி அரசிடமிருந்து கிடைக்கப் பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக