பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி வளாகத்தில் இல்ம் (ILM - Islamic Library of Mahmoodbandhar) என்ற இஸ்லாமிய நூலகம் 2010 முதல் செயல்பட்டு வருகின்றது. நமதூர் மக்களுக்கு குறிப்பாக இளைய தலைமுறைக்கு வாசிப்பின் ஆர்வத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு சிறப்பு செயற்பாடுகளையும் அவ்வப்போது ஏற்பாடு செய்கின்றனர் நூலக பொறுப்பாளர்கள்.
அந்த வகையில் எதிர்வரும் கோடை விடுமுறையினை பெற்றோர்கள் அறிவார்ந்த ரீதியாக இஸ்லாமிய வழியில் எதிர்கொள்வது பற்றியும், சிறந்த வாசிப்பு அனுபவத்திற்காகவும் இஸ்லாமிய நூலகத்திற்கு வருகை தருமாறும் நூலக பொறுப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக