திங்கள், 29 ஜனவரி, 2024

பரங்கிப்பேட்டையில் குடியரசு துணைத்தலைவர்!

குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் இன்று பரங்கிப்பேட்டை பாபா கோயிலில் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். இரு நாள் பயணமாக நேற்று 28ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று புதுச்சேரி வந்த அவர் இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் வந்து பின்னர் கார் மூலம் பரங்கிப்பேட்டைக்கு வந்தார்.

குடியரசு துணைத்தலைவர் வருகையையொட்டி, அவர் பயணம் செய்த சாலைகள் மேடு-பள்ளங்கள் சமன்செய்யப்பட்டு, தெருக்களும் சுத்தம் செய்யப்பட்டன.



காவல்துறையினர் குவிக்கப்பட்டு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.  பெரியக்கடை பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 

பரங்கிப்பேட்டை வருகை தந்த குடியரசு துணைத் தலைவரை பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர், துணைத்தலைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ், பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் வரவேற்றனர்


நாட்டின் உயர் பதவி வகித்த / வகிக்கும் தலைவர்கள் பரங்கிப்பேட்டைக்கு வருவது இது இரண்டாவது முறையாகும்.

கடந்த 2001 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது  மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பாக பரங்கிப்பேட்டையை உள்ளடக்கிய அப்போதைய புவனகிரி தொகுதியில் போட்டியிட்ட மர்ஹபா ஃபஜ்லுர் ரஹ்மானை ஆதரித்து முன்னாள் பிரதமர் தேவகவுடா தேர்தல் பிரச்சாரத்திற்காக பரங்கிப்பேட்டைக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

#MYPNOnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...