கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுநலச்சேவையில் ஈடுபட்டு வரும் கிரஸண்ட் நழ்வாழ்வு சங்கம் சார்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ – மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நேற்று (26-05-2024) காலை BMH நினைவு ஷாதி மஹாலில் நடைபெற்றது. பரங்கிப்பேட்டை தழுவிய இப்போட்டியில் ஏராளமான மாணவ – மாணவியர் பங்கேற்றனர்.
கிரஸண்ட் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் குலாம் கவுஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, செயலாளர் நூர் அலி முன்னிலை வகித்தார், இணைச்செயலாளர் முஹம்மது வலீத் வரவேற்றார்
இந்த ஓவியப்போட்டியில் முதல் பரிசு பெற்ற பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி வஸீலா இக்பால் அலி, உள்ளிட்ட பரிசு பெற்ற அனைவருக்கும் சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன் பரிசு - பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்
பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள், கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
பரங்கிப்பேட்டை
கலிமா மெட்ரிக்குலேஷன் பள்ளி சார்பாக போட்டியில் பங்கேற்ற மாணவ – மாணவியருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
விழாவில் கிரஸண்ட் அமைப்பின் மூத்த நிர்வாகிகள் அன்வர் ஹசன், தாரிக் உசேன், ஷேக் நெய்னா உட்பட பலர் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர் முஹம்மது காமில் நன்றி கூறினார்.
செய்தியாளர்: ஹாஸியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக