செவ்வாய், 7 டிசம்பர், 2010

மக்கள் தொகை கணக்கெடுப்பு ...

பரங்கிப்பேட்டை ஹாஜி எஸ்.ஒ.அலாவுதீன்  துணைத் தலைவராக பதவி வகிக்கும் ஐக்கிய நல கூட்டமைப்பின் சிறந்த திட்டங்களுல் ஒன்றான அனைத்து ஊர்களிலும் முஸ்லிம் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக பரங்கிப்பேட்டையில் இரண்டு சகோதரர்களை  நியமித்து முழுகணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சமுதாய மக்களின் அனைத்து விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது உதவி தேவைப்படும் சகோதர சகோதரிகளுக்கு மனமுவந்து உதவி செய்வதை வரவேற்கிறோம் என்று இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


 



திங்கள், 6 டிசம்பர், 2010

மருத்துவக் கல்லூரி...!


தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பில் மருத்துவக் கல்லூரி தொடங்க இருப்பதாக தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் கவிக்கோ அப்துல் ரகுமான் கூறியுள்ளார். சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

தமிழ்நாடு வக்பு வாரியமும், நீடுர் மிஸ்பாஹு ஹுதா மதராஸாவும் இணைந்து மருத்துவக் கல்லூரி தொடங்க முடிவு செய்துள்ளோம். இந்த மருத்துவ கல்லூரி மயிலாடுதுறை அருகே உள்ள நீடுரில் அமைக்கப்பட உள்ளது. மருத்துவ கல்லூரி கட்டுவதற்காக நீடுர் மிஸ்பாஹுல் ஹுதா மதராஸா நிர்வாகம் தங்கள் வக்பு நிலத்தில் இருந்து 23 ஏக்கரை நிலத்தை அளிக்க முன்வந்துள்ளது.

மருத்துவக் கல்லூரியை கட்ட ரூ.60 கோடி வரை தேவைப்படுகிறது. இந்த கல்லூரியை ஒரு அறக்கட்டளைதான் நடத்த உள்ளது. ஒரு உறுப்பினர் கட்டணம் ரூ.10 லட்சம் ஆகும். மொத்தம் 170 பேர் வரை தலா ரூ.10 லட்சம் நன்கொடை தருவதாக உறுதி அளித்துள்ளனர். முதல் கட்டமாக 100 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். மத்திய அரசிடம் முறையாக அனுமதி பெற்று மருத்துவ கல்லூரி 2012ஆம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கும் என அவர் கூறினார். 

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

வீராணம் ஏரியில் தண்ணீர் அளவு குறைந்தது..!

:வீராணம் ஏரியில் நீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் வீராண ஏரியில்லிருந்து தண்ணீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டுள்ளது.கடலூர்  மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையால் இம் மாவட்டத்தில் உள்ள ஓடைகள் வழியாக வீராணம் ஏரிக்கு பல்லாயிரம் கன அடி நீர் வந்தது. ஏரியின் மொத்த கொள்ளவான 1,465 மில்லியன் கன அடியில் 960.20 மில்லியன் கன அடி மட்டுமே இருப்பு வைக்கப்பட்டது. இந் நிலையில்.நீர் வரத்து அதிகரித்ததால், வீராணம் ஏரியிலிருந்து வெள்ளியங்கால் ஓடை மற்றும் சேத்தியாத்தோப்பு மதகு வழியாக 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டதால் பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் 1,343 மில்லியன் கன அடி வரை ஏரியின் நீர் மட்டம் உயர்ந்தது.பின்னர் மழையின் தீவிரம் குறைந்தும் ஏரியின் பாதுகாப்பு கருதி வெள்ளியங்கால் ஓடை வழியாக ஒரே  அளவில் தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.


மீண்டும் மழை பெய்யும் என எதிர்பாக்கபட்ட நிலையில் ஏரியின் நீர் மட்டத்தை முற்றிலுமாக குறைக்க மாவட்ட நிர்வாகம்  முடிவு செய்தனர். அதன்படி கடந்த இரண்டு தினங்களாக நீர் வெளியேற்றப்பட்டதால் ஏரியின் நீர் மட்டம் 763.20 மில்லியன் கன அடியாக குறைந்தது. நேற்று காலை காலை முதல் வெள்ளியங்கால் ஓடை மதகு மூடப்பட்டது.வீராணம் ஏரியிலிருந்து நீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டதால்சுற்றுவட்டார கிராமங்களில் புகுந்த வெள்ள நீர் படிப்படியாக குறைந்து வருகிறது.