இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மனித உரிமைகள் கழகத்தினர் பரங்கிப்பேட்டையில் கடந்த 09.11.2008 ஞாயிறு அன்று மெளன ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் பவாணி, ஜெயபால் தலைமை தாங்கினார். மாவட்ட தலைமை அமைப்பாளர் அழகப்பா, ராஜகோபால் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனூஸ் கலந்துக் கொண்டார். ஊர்வலம் பரங்கிப்பேட்டை, அகரம் வீரப்ப பூங்காவிலிருந்து பஸ்நிலையம் வழியாக கச்சேரித் தெருவில் உள்ள மனித உரிமைகள் கழக அலுவலகத்தை அடைந்தது. இதில் மாவட்ட அமைப்பாளர்கள் ஜெயராமன், லோகநடேசன், மாவட்ட துணை அமைப்பாளர் ராஜேந்தின், மாவட்ட வழக்கறிஞர் சுதாகர், மாவட்ட நிருபர் ரவி, நகர அமைப்பாளர் மாரியப்பன், துணை அமைப்பாளர் முத்துகுமார், ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட புரலவர் முத்து குமரன், செய்திபிரிவு கார்த்திகைபாலன், மகளிர் அணி தாட்சாயிணி, இளஞர் அணி அலி அக்பர் மற்றும் உத்ராபதி, வடிவேல், இளங்கோ முடிவில் குமார் அவர்கள் நன்றி கூறினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...
As A tamiln Mr.Youns partcipate this rally. We appriciate
பதிலளிநீக்குWhat About TNTJ demonstration As a Muslim
Is he participate Or Not??
anyone can clarify this pls
அவிங்க கூப்பிட்டதானே இவர் போவாரு அவிங்க தான் கூப்பிடவே இல்லையே...
பதிலளிநீக்குAssalamu 'alaikum brother deen S,
பதிலளிநீக்குFirstly, there is nothing to indicate that brother Yusouf participated in the rally as a tamilan as Islam also disallows unlawful killings based on asabiyaa(tribal allegiance). So, your analogy that he participated in the rally as a tamilan could very well be wrong. Allahu 'alam
Secondly, there is nothing in shariah to indicate that a muslim must participate in rallies(such as the one organised by TNTJ).
Wallahu alam
அஸ்லாமு அலைக்கும்,
பதிலளிநீக்குஇலங்கையில் தமிழர்கள் படுகொலை
செய்யபடுவதை கண்டித்து நடைபெற்ற போரட்டதில் கலந்து கொண்ட யூனஸ் நானா.
முஸ்லிம்களை திவிரவாதி என்று சொல்லி கருவருக்கும்.. சங்பரிவார்-ரை கண்டித்து தமிழ்நாடு தன்ஹீத் ஜமாஅத் நடத்திய போரட்டதில்
கலந்து கொள்ளவில்லை....ஏண்???
//தீண் அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில்சொல்லியே ஆக வேண்டும்//....
As an Individual, It is completely one's own wish & desire where he can participate and why.
பதிலளிநீக்குAs a man, we don't have right to ask others why you participate here and not there!
சில அமைப்புச் சகோதரர்களிடம் இது தான் பிரச்னையே..
பதிலளிநீக்கு"நீ முஸ்லிம்தானே.. அப்ப எங்ககூட நீ ஏன் வந்து கலந்துக்கலே?"-ன்னு ரொம்ப புத்திசாலித்தனமா கேக்குறதா நெனச்சிக்கிறது.
"If you are with us, or against us" என்பது ஆதிக்கவாத அங்க்கிள் சாம் (புஷ்) உடைய மனநிலையல்லவா!
Assalamu 'alaikum to brother Irai,
பதிலளிநீக்குYou said"//தீண் அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில்சொல்லியே ஆக வேண்டும்//...."
He is not answerable to you and is answering your question part of his job?
Also, in srilanka, tamils being killed also include muslims.
Again, I am not supporting him. I am just stating the facts.
அதெப்புடி வாசகரே,
பதிலளிநீக்குதலைவர் யூனூஸ் அவரு இருக்கிற கட்சி இதே பிரச்சினைக்காக(இலங்கையில் தமிழர்கள் படுகொலை) மனித சங்கிலி- ல கூட கலந்துக்வாரு,ஆனா அவரு சார்ந்து கீற சமுதாய் அமைப்பு போராட்டதுல கலந்து கிட மாட்டாருன்னா எப்புடி அதுவும் ஊர் ஜமாத்து தலைவர்ரா இருந்திகிட்டு
அதப்புடிதான் விமர்சகரே,
பதிலளிநீக்குகட்சியில் இருப்பதால் கட்சி சார்ந்த நிகழ்ச்சியில் கலந்துக்கணும்னு தார்மீக கடமை இருப்பது போல, ஜமாத்து தலைவர்ரா இருக்கறதனாலேயே ததஜ-கூட்டத்துலலாம் கலந்துக்கணும்னு தார்மீகம் இல்லீங்க.
திமுக உறுப்பினரா திமுக நிகழ்ச்சில கலந்துக்கறது மாதிரியே ஜமாஅத் தலைவரா இருக்கறதுனாலேயே இஸ்லாமிய சமூகத்தின் பிரிவுகளில் ஒன்று (அ) பல நடத்துற கூட்டத்துலயும் கலந்தேஆகணும்ங்றது absurdங்க.
அகெய்ன் அதெப்புடின்னா..
//"If you are with us, or against us" என்பது ஆதிக்கவாத அங்க்கிள் சாம் (புஷ்) உடைய மனநிலையல்லவா! //
என்ற பதிலத்தான் சொல்லோணும்ங்க,
வலைப்பூ நிர்வாகிகளுக்கு
பதிலளிநீக்குதங்களை யார் என்று அடையாளப்படுத்திக் கொள்ள மனமில்லாத யாருடைய கருத்துக்களையும் வெளியிடாதீர்கள் ப்ளீஸ்.
கருத்துப்பதிப்பவர்களுக்கு தான் யார் என்று சொல்லும் துணிச்சல் இருக்க வேண்டும்.
(அடையாளமில்லா புனைப் பெயர்களின் கருத்துக்களை மொட்டைக் கடிதங்களாகத்தான் பார்க்க வேண்டும்)
கடந்த 25 வருடங்களாக விடுதலைப்புலிகள் என்ற பயங்கரவாத அமைப்பு நடத்திய படுகொலைகள் - குறிப்பாக முஸ்லிம் சமுதாயத்துக்கு எதிரான வன் கொடுமைகள் - அங்கு மாண்டு குவிந்த உயிர்கள் இவைகள் பற்றியெல்லாம் கவலைப்படாத இவர்களுக்கு இன்றைக்கு மட்டும் இந்த திடீர் அக்கறை ஏன் முளைக்கின்றது?
பதிலளிநீக்கு//தங்களை யார் என்று அடையாளப்படுத்திக் கொள்ள மனமில்லாத யாருடைய கருத்துக்களையும் வெளியிடாதீர்கள் ப்ளீஸ்.//
பதிலளிநீக்குநண்பர் 'ஜி.என்'னுடைய கருத்தை வரவேற்கிறேன்.
இது நான் முன்பே வலியுறுத்தியது தான். (கருத்தளித்தவர்களில் நிறைய பேருக்கு கூகுள் புரஃபைல் கூட இல்லை)
ஆனால், இதையெல்லாம் நிர்வாகத்துக்குள் பேசிக்கொள்ளலாமே.
'சொல்பவனைப் பார்க்காதே; சொல்லப்படுவதைப் பார்' என்றெல்லாம் வாதங்கள் உற்பத்தி ஆனாலும், அளிக்கப்பட்ட கருத்துகள் எதுவும் நாகரிக வரம்பைத் தாண்டவில்லை என்றாலும்....... குறைந்தபட்சம் நிர்வாகத்திடமாவது தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள கருத்தாளர்கள் முன்வரலாம்.
இறை என்ற பெயருடன் ஒரு பதிவு. எப்படி எடுத்து கொள்வது?
பதிலளிநீக்குஇறைவனின் கருத்து (நவூதுபில்லாஹ்...) என்று சொல்ல வருகிறாரா அல்லது அவருடைய பெயரையே இறை என்று சொல்ல வருகிறாரா? சகோதரர் முதலில் இதை மாற்றுங்கள். அப்துல் (அடிமை) என்று ஒரு பதிவு..... பெயரை மாற்றுங்கள் ப்ளீஸ்
நவூதுபில்லாஹ்...
பதிலளிநீக்குநவூதுபில்லாஹ்...
அல்லாஹ் - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை; அவன் நித்திய ஜீவன்; என்றும் நிலைத்திருப்பன். 3:2.
அன்புள்ள சகோதரரே... (abuprincess)
நான் இறை (நவூதுபில்லாஹ்...) என்று பதியவில்லை.. அதன் முழு பெயர் "இறைநேசன்" எனறுதான் பதிவு செய்தேன் ஆனால் அதில் இறை என்று மட்டும்தான் வெளிபடுகிறது.
நான் பெயரை மாற்றி கொள்கிறேண்.. அல்லாஹ்விற்காக மண்ணித்து கொள்ளுகள்.
சுட்டிகாட்டியமைக்கு நண்றி....
அஸ்லாமு அலைகும்,
பதிலளிநீக்குஅண்புள்ள சகோதரர்களே....
விடுதலை புலிகள் இலங்கையில் காத்தான் குளத்தில் பள்ளிவாசலில் (அல்லாஹ்வுடைய ஆலையத்தில்) முஸ்லிம்களை கொண்று குவித்துயுள்ளார்கள்.....
முஃமின்களே! அல்லாஹ்வின் மார்க்க அடையாங்களையும், சிறப்பான மாதங்ளையும், குர்பானியும், குர்பானிக்காக அடையாளம் கட்டப்பெற்றவைற்றையும், தங்களுடைய இறைவனின் அருளையும் திருப்பொருத்தத்தையும் நாடி கண்ணியமான (அவனுடைய) ஆலயத்தை நாடிச் செல்வேரையும் நீங்கள் ஆகுமாக்கிக் கொள்ளாதீர்கள்; நீங்கள் இஹ்ராமைக் களைந்து விட்டால் நீங்கள் வேட்டையாடலாம்; மேலும் புனித ம்ஸ்ஜிதை விட்டும் உங்களைத் தடுத்த கூட்டத்தினர் மீதுள்ள வெறுப்பானது, நீங்கள் வரம்பு மீறுமாறு உங்களைத் தூண்டி விட வேண்டாம்; "இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்".
(அல்குர் ஆன் 5:2)
இறை என்ற பெயரில் பின்னூட்டம் வைத்திருக்கும் சகோதரருக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது:-
பதிலளிநீக்குஇன்னல்படுகிற இலங்கைத்தமிழருக்கு இரங்குவது என்பது வேறு, விடுதலைப்புலிகள் ஆதரவு என்பது வேறு. குழப்பிக்கொள்ளவோ, திசை திருப்பவோ வேண்டாம். அதுபோகட்டும்,
பதிவுக்கு சம்பந்தமேயில்லாமல் ஹஜ் பற்றிய குர்ஆன் வசனத்தை எடுத்து வைத்திருப்பது விளங்கவில்லை. அதில் வருகிற "இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்;" என்கிற வாசகத்தை பயன்படுத்திக்கொள்வதுதான் உங்கள் நோக்கமென்றால் நல்லது.
ஃபித்ரா வழங்கும் தனி ஆவர்த்தன நிகழ்ச்சியெல்லாம் எனக்கு ஞாபகம் வந்து தொலைக்கிறது.
இன்னும், நீங்கள் எல்லேரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீகள்; உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பினைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாறினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.
பதிலளிநீக்கு(ஆல்குர்ஆண் 3:103)
Assalamu Alaikkum,
பதிலளிநீக்குDear Brother,
abuprincess...
As I have already changed name (இறை). But here till didn't change . How can change the name here?? Kindly inform to me.
"தான்" பிரிவு காணும்போது நினைவுக்கு கொண்டுவராமல்அல்லதுவிரும்பாமல், தனக்கு தேவைப்படும் போது மட்டும் குர்ஆன் வசனங்களை நினைவுபடுத்தி அறிவுரை சொல்கிற அவலத்தையும் அரசியலையும் விட்டு என்னையும் எல்லாரையும் பாதுகாக்க உண்மையான அந்த ஓர்இறையை வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குவாசகரே மருபடியும் ஒரு அதெப்புடி
பதிலளிநீக்குகட்சி தார்மீக கடமை எல்லாம் சரிதான்.இதே ஜமாது தலைவரு முன்னாடி கும்பகோனத்துல ததஜ நடத்துன மாநாட்டுல கலந்து கிட்டாரே(அந்த மாநாட்டுல போன அல்லாரும் ததஜா காரங்க இல்லியே)அப்ப எந்த கடமை-ல கலந்துகிட்டாரோ அதே கடமையோட இப்ப ஊர்ல நடந்த தீவிரவாத எதிர்பு போராட்டதுல கலந்துகிடாலாமுல்ல.
அட அவ்வளவு ஏன் வாசகரே தின மலர் கார்ட்டூன் மேட்டருல கூட கடலூர்ல ஏதோ அமைப்பு போராட்டம் நடத்துனாங்க அதுல ஜமாத் நிர்வாகிகள் கலந்துக்கிட்டாங்கலே அது என்ன வ கையான கடமையோ அதே கடமைல கலந்துகிடலாமுல்ல ஊர்ல நடந்த இந்த போராட்டதுல கலந்து கிட்டவங்க எல்லாம் ததஜ காரங்க இல்லேங்கறது போட்டோவ பாத்தாலே தெரியுமே.(இதுல கலந்துகிட்டவங்கல்லாம் ததஜ க்கு வந்த கூட்டம் அப்டீனு அவங்க நெனச்சிக்கிட்ட அது அவங்கலுடைய absurdity) அதுக்கு நாம இன்னா பன்ன முடியும் சொல்லுங்க.
குறிப்பிட்ட ஒரு அமைப்போட பொது கூட்டதுலயோ இல்ல அமைப்பு சம்பந்தபட்ட வேறு எதுலயுமோ ஜமாது தலைவர் கலந்துகிடாலையானு நான் கேட்டு இருந்தா அது absurd. ஆனா நாடு முழுக்க குண்டு வச்சிட்டு அத முஸ்லிம்க மேல போடுற சங் பரிவார தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டதுல ஜமாது தலைவர் கலந்துகிடலாயானு கேட்குறது எந்த வகையில absurd னு சொல்றீங்க வாசகரே
//ஜமாது தலைவர் கலந்துகிடலாயானு கேட்குறது எந்த வகையில absurd னு சொல்றீங்க வாசகரே//
பதிலளிநீக்குவிமர்சகரே,
ஜமாது தலைவர் கலந்துகிடலயானு கேக்கறது ஒண்ணும் absurd இல்லீங்க,
பொதுவா, அப்ப-இப்ப; அன்னிக்கு-இன்னிக்கு; அதுல-இதுல; ஏன் கலந்துகிட்டார் அல்லது கிடலைன்னு சம்பந்தப்பட்டவங்கதான் சரியா சொல்ல முடியும். அதுக்குள்ள காரணிகள்ல எணக்கம் சுணக்கம், மனநிலை, காலநிலை, உடல்நிலை; அழைப்பு பிழைப்புன்னு ஆயிரம் இருக்கலாம். லாம்தான்.
நா absurd ன்னு சொன்னது எதுக்குன்னா, இன்னொன்ன வெச்சு ஒப்புமப்படுத்திசொன்னதாலயும், 'பதில் சொல்லியே ஆகணும்னு' புஷ்ஷுத்தனமா கேட்டதயும் வெச்சுத்தான்.
சாதர்ணமா கேட்டிருந்தா அவர்ட்டயே கேட்டுக்கங்கய்யானு கம்முனு போயிருப்பேன்,
சரி, சரி, கொஞ்சம் சோடா கொடுங்க..
குடிச்சிட்டு நாலு நாள் லீவுல போறேன்.
வர்ட்டா!
ippa varudha paarunga...
பதிலளிநீக்குஇறை என்ற பெயரில் பின்னூட்டம் வைத்திருக்கும் சகோதரரே,
பதிலளிநீக்குநியாயப்படுத்தாமல் ஆலோசனை கேட்பதற்கு மிகவும் நன்றி. உங்கள் பெருந்தன்மையை காட்டுகிறது.
கூகிளில் உங்கள் பெயர் விபரங்களை கொடுத்து பதிவு செய்யும்போது முதல் பெயராக இறை என்று கொடுத்திருக்கலாம்.
தீர்வாக : உங்கள் ஐடியில் போய் மேலே settings செட்டிங்க்ஸ் கிளிக் செய்து Accounts கிளிக் செய்து உங்கள் பெயருக்கு நேர் வரும் Edi info வில் நேம் name என்ற இடத்தில் வரும் உங்கள் இரண்டு துண்டு பெயரை இறை நேசன் (அடிமை..etc..) சேர்த்து விட்டால் (
இறை நேசன் என்பதை இறைநேசன் என்று மாற்றி விட்டால்) போதும்.
நன்றி. வஸ்ஸலாம்.
அஸ்லாமு அலைக்கும்,
பதிலளிநீக்குநன்றி abuprincess...
எதற்கு?? சகோதரரே நியாயப்படுத்த வேண்டும்??
தவறை சுட்டிகாட்டினால் மாற்றிகொள்ள வேண்டும் அதுதான் ஒரு முஃமின்னுக்கு அழகு!