தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பெண்கள் பயான் நேற்றிரவு காஜியார் தெருவில் நடைப்பெற்றது. கூட்டத்தில் TNTJ மாவட்ட பேச்சாளர் ஷாபி மன்பஈ "மண்ணறை வாழ்க்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
பரங்கிப்பேட்டை நல்வாழ்வு சங்க (கிழக்கு மாகாண ) கூட்டம் தம்மாம் நகரில் மூத்த நிர்வாகி கவுஸ் மாலிமார் இருப்பிடத்தில் நேற்று நடைப்பெற்றது. கூட்டத்திற்கு தலைவர் வஜ்ஹுதின் தலைமை தாங்கினார். உப தலைவர் கலீமுல்லாஹ் முன்னிலையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் அமைப்பின் செயல்பாடுகள், மற்றும் உறுப்பினர்களின் பங்களிப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மலைப்பாம்பு உட்பட 4 பாம்புகளை தோள் பைக்குள் மறைத்து விமானத்தில் கொண்டு வந்தவரை தரையிறங்கியதும் அபுதாபி விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர். இதை அறிந்து, விமானத்தில் பயணித்த பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.
இந்தோனேசியா & ஐக்கிய அரேபு எமிரேட்டுக்கு இடையே சென்ற இத்திஹாத் விமானத்தில் பாம்புகளை ஒருவர் கடத்திச் சென்றுள்ளார். அபுதாபி விமான நிலைய அதிகாரிகள் அவர் வைத்திருந்த தோள் பையை சோதனை செய்ததில். அதில் மலைப்பாம்பு உட்பட 4 பாம்புகள் இருந்தன. மேலும் அவர் வைத்திருந்த பெட்டியில் 2 கிளிகள் மற்றும் 1 அணில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
விமானத்தில் அவற்றில் ஏதாவது வெளியேறி இருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று உடன் பயணித்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். எப்படி இதை பரிசோதிக்காமல் விமானத்தில் ஏற அனுமதித்தனர் என்று வியப்பு தெரிவித்தனர்.