சனி, 19 பிப்ரவரி, 2011

அலைந்து திரிந்து வேலை செய்றது யாரு?

பரங்கிப்பேட்டை குட்டியாண்டவர் கோயில் அருகே நேற்று நிகழ்ந்த விபத்தில் மூவர் பலியானதுடன் 20க்கும் மேற்போட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை முதலுதவி சிகிச்சையக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டனர்.

பரப்பரப்பான அந்த நிமிடங்களில் ஜமாஅத் தலைவரும் பேரூராட்சித் தலைவருமான முஹமது யூனுஸ், த.மு.மு.கவினர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தினர், பொதுமக்கள் பலர் உடனே ஆஜராகிவிட்டனர். முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவர் பார்த்தசாரதியும் உடனே வந்துவிட்டார்.



அடுத்தகட்ட சிகிச்சைக்காக ஜமாஅத் ஆம்புலன்ஸூம் தயார் நிலையில் இருந்த போது, அவசரம் கருதி தன்னுடைய வாகனத்தையும் காயம்பட்டவர்களை வெளியூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தந்துவிட்டார் பேரூராட்சித் தலைவர். இந்த தருணத்தில், காயம் அடைந்தவர்களின் உறவினரான வெளியூர்காரர் ஒருவர் கேட்டார், 'யாருங்க அவர்? அங்கயும் இங்கயும் அலஞ்சி திரிஞ்சி வேல செய்யுறாரே??' என்று.

அதற்கு, மெயின்ரோடு பகுதியை சார்ந்த இன்னொருவர், 'அவர் எங்க ஊரு பஞ்சாயத்து போர்டு தலைவரு, முஸ்லிம்ட ஜமாத்து தலைவரும் அவர்தான்' என பதிலளித்தார்.

மீண்டும் அந்த வெளியூர்காரர், 'அட! அப்படியா!! பரவாயில்லயே!' என்று ஆச்சரியத்துடன் கூறியபோது, 'இந்த ஊர்ல நாங்க எல்லாரும் அண்ணன்-தம்பியாத்தான் ஒத்துமையுடன் பழகுறோம்' என்று பதில் கூறிய போது, அந்த உறவினர் பதில் ஏதும் கூறாமல் நெகிழ்ச்சி கலந்த புண்முறுவலுடன் 'அட அப்படியா என்பதுபோல் தலையசைத்து நகர்ந்தார்.

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

பரங்கிப்பேட்டையில் சாலைமறியல்..







பரங்கிப்பேட்டை அருகே இன்று நடைப்பெற்ற சாலைவிபத்தின் காரணமாக சஞ்சிவிராயர் கோயில் அருகே இன்று மாலை விடுதலைசிறுத்தைக்கட்சி சார்பாக சாலைமறியல் நடைப்பெற்றது.

அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாமல்இருப்பதை கண்டித்தும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்ககோரியும்,மருத்துவமனையில்,ஓன்றுக்கு மேற்பட்ட மருத்துவர்களை நியமிக்கசொல்லி விடுதலைசிறுத்தைக்கட்சியினர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.இதன்காரணமாக போக்குவரத்து சிறிதுநேரம் பாதிக்கப்பட்டது.காவல்துறையினர் சமாதானம் செய்ததை அடுத்து மறியல்கைவிடப்பட்டது.

பரங்கிப்பேட்டையில் விபத்து: இருவர் பலி; 25 பேர் காயம்

மாசிமக தீர்த்தவாரியை முன்னிட்டு புவனகிரி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்களை C.புதுப்பேட்டை கடற்கரைக்கு அழைத்துசென்ற தனியார் வாகனம் பரங்கிப்பேட்டை கடலூர் சாலையில் (குட்டியாண்டவர் கோயில்) அருகே விபத்துக்குள்ளானது. புதுப்பேட்டை கடற்கரையிலிருந்து ஊருக்கு திரும்பிசென்ற வேன் சாலையில் சென்றுக்கொண்டிருக்கும் போது சாலையை கடக்கமுயன்ற ஆட்டின் மீது மோதாமலிருக்க திருப்பும்போது அருகிலிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.


இந்தவாகனத்தில் அளவுக்கு அதிகமாக பயணிகளைஏற்றிய்யும்,வேகத்துடனும் சென்றதாக சம்பவஇடத்தில் இருந்தவர்கள் தெரிவித்தார்கள். இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.25க்கும்,மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.அவர்கள் அனைவரும் பரங்கிப்பேட்டை அரசுமருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டனர்.காயமடைந்தவர்களை கடலூர்க்கு கொண்டுச்செல்ல "இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் பேரூராட்சி தலைவர். M.S.முஹம்மது யூனுஸ் தனது வாகனத்தை தந்து உதவியதோடு ஜமாஅத் ஆம்புலன்ஸ், மற்றும் தனியார் வாகனங்களையும். ஏற்பாடுசெய்தார்.இந்த விபத்தின்போது காயமடைந்தவர்களை கடலூர் மருத்துவமனைக்குகொண்டுச்செல்லும் பணிகளில் நமது சமுதாய இயக்கங்கள் எப்போதும்போல் பாடுப்பட்டன.