செவ்வாய், 8 மார்ச், 2011

கிடைத்தது 63...!

தமிழக அரசியலில், காங்கிரஸ் - தி.மு.க இடையே ஏற்பட்ட தொகுதி எண்ணிக்கை

உள்ளிட்ட மோதல்களுக்கு முடிவு காணும் விதமாக இன்று பகல் 12 மணியளவில்

63 தொகுதிகளுக்கு உடன்பாடு ஏற்பட இருக்கிறது, காங்கிரஸ் கட்சி சார்பில்

அஹமது படேல் டில்லியில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு சென்னைக்கு

அனுப்புகிறார் என்று டெல்லி வட்டாரங்களை மேற்கோள் காட்டி நமது சென்னை

செய்தியாளர் தெரிவிக்கிறார்.

சிப்காட்டில் விஷவாயு கசிவு: 100 பேருக்கு மயக்கம், கண்ணெரிச்சல் - பரங்கிப்பேட்டையிலும் உணரப்பட்டதா?

நேற்று நள்ளிரவு கடலூர் சிப்காட் நெடுஞ்சாலையில் பரபரப்புடன் கிராம மக்கள் அங்கும் இங்கும் அலைந்து அலறியடித்து ஓடினர். சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள சாஷன் கெமிக்கல்ஸ் என்கிற ஒரு ஆலையிலிருந்து விஷவாயு கசிவு ஏற்பட்டதால் 65-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தது மட்டுமின்றி பலருக்கு கண் எரிச்சல், வாந்தி, தோல் அரிப்பு ஏற்பட்டது.

இந்த பாதிப்புக்கு ஆளான குடிகாடு பகுதியை சாந்த கிராம மக்கள் பலர் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் பாதுகாப்பு அறையை அடித்து நொறுக்கியதுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடலூர்-சிதம்பரம் சாலையில் சுமார் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் உடனே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்னர். மாவட்ட ஆட்சித்தலைவர் பாதுகாப்புடன் நள்ளிரவு சாஷன் பிரச்சினைக்குரிய தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டார். இங்கு நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாத நிலையில் இருந்த இரசாயண பொருட்களை இந்த விஷவாயு கசிவிற்கு காரணம் என்று கண்டறியப்பட்டது. தீயணைப்பு ஊழியர்களை கொண்டு அந்த இரசாயண பொருட்களை அப்புறப்படுத்தி அழிக்கப்பட்டது.

பிரச்சினைக்குரிய தொழிற்சாலையை உடனே இழுத்து மூடுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டதுடன், பாதிக்கப்ட்ட கிராம மக்களை திருமண மண்டபம் மற்றம் பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்தார்.

இந்த விஷவாயு கசிவு செய்தி தொலைகாட்சிகளில் வெளியானபோது பரங்கிப்பேட்டையிலும் சிலருக்கு கண்ணெரிச்சல் ஏற்பட்டதாக செய்தி பரவியது. ஆனால் இந்த எரிச்சலுக்கும் சிப்காட் விஷவாயு கசிவிற்கும் உண்மையில் சம்மந்தம் உள்ளதா என்று தெரியவில்லை.

Photos: File

திங்கள், 7 மார்ச், 2011

சாணார முடுக்குத் தெருவில் திடீர் தீ!

பரங்கிப்பேட்டை: சாணாரமுடுக்குத் தெரு யாதவாள் தெரு சந்திப்பில் உள்ள ஒரு கூரைமீது தீடீர் என தீப்பற்றி எரிந்தது. மின் கசிவினால் என்று கருதப்பட்ட இத்தீ பரவிய உடனே இளைஞர்கள் சிலர் ஒன்றுகூடி தண்ணீர் கொண்டு தீயை அணைத்தனர்.
இதற்கிடையே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் அவர்களும் வந்து மிச்சம் மீதியிருந்த தீயை முழுவதுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.